அமலாக்கத்துறை மத்திய அரசின் கீழ் செயல்பட்டாலும் அதன் நடவடிக்கையில் தவறு இருந்தால் மட்டுமே நீதிமன்றமாக இருந்தாலும் பத்திரிகையாக இருந்தாலும் அதைப்பற்றி பேசலாம் .ஆனால் அமலாக்கத்துறை விரிவான செயல்பாட்டால் ,செந்தில் பாலாஜியின் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
இதற்கும் தேவையில்லாத பேச்சுக்களுக்கும், முடிச்சு போட்டு டிராமா காட்டுவது எல்லாம் திமுகவிற்கு கைவந்த கலை .இதுவே ஒரு சாதாரண மனிதருக்கோ அல்லது அதிகாரிகளுக்கோஇந்த நிலைமை என்றால், ,இப்படிப்பட்ட டிராமாவை அவர் நடத்தினால் சும்மா இருப்பார்களா? அப்போது அவர்களுக்காக சுயநல ஊடகங்கள்
பேசுமா ?மேலும், சிம்பத்தியை மக்களிடம் உருவாக்கி, அமலாக்கத்துறை என்னவோ செந்தில் பாலாஜிக்கு எதிரான துறையாக சில ஊடகங்கள் ட்ராமா காட்டக்கூடாது. இந்த ட்ராமா அப்பாவி மக்களை ஏமாற்றம் டிராமா ? என்பதை பொதுமக்கள் எப்போது உண்மையை புரிந்து கொள்வார்கள் ?
தமிழ்நாட்டில் திமுக எது செய்தாலும் அது சரிதான் என்று சொல்லக்கூடிய பத்திரிகை ,தொலைக்காட்சிகள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு உண்மையை மக்களிடம் வெளிப்படுத்த அவர்களுக்கு தகுதி இல்லை. இதில் பெரிய பத்திரிகை, சிறிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி ,சிறிய தொலைக்காட்சி எதுவும் கிடையாது.
அவையெல்லாம் அரசியல்வாதிகள் பேசுகின்ற பொய்யை மக்களிடம் சொல்வதால் பாமர மக்கள் உண்மை தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் . இது பத்திரிகையின் சுதந்திரம், சுயநலமாக மாற்றப்பட்டுள்ளது. இதை மக்கள் தான் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். மேலும், மீடியாக்கள் நீதிமன்றமாக செயல்பட முடியாது. வழக்கறிஞர்களே நீதிபதியாக தீர்ப்பு சொல்ல முடியாது. எனவே,
இப்படி அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் தான் அவரவர் நிலை இருக்க வேண்டும் .ஆனால், செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத் துறை தான் தவறு செய்து விட்டது போல் கருத்துக்களை ஜோடனம் செய்யக்கூடாது. யாராக இருந்தாலும் ,உண்மையை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை என்று தான் தற்போதைய சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு .இனி அப்படிப்பட்ட பத்திரிகை, தொலைக்காட்சிகள் எதுவாக இருந்தாலும், அதன் உண்மையின் தன்மையால் ஒவ்வொன்றும் பரிசோதித்து பார்க்க வேண்டிய நிலைக்கு இன்றைய ஊடகங்கள் நிலைமை வந்துவிட்டது.
மேலும், அமலாக்கத்துறை சட்டப்படி என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமோ, அந்த விதிமுறைகளை எல்லாம் கடைப்பிடித்து தான் ஒரு அமைச்சரின் ஊழலை வெளியே எடுத்துள்ளது. அதற்கான சட்டத்தை புதியதாக அமலாக்கத்துறைக்கு அரசியல்வாதிகளால் உருவாக்க முடியாது .அது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பது வீண். மேலும்,,இப்படியெல்லாம் பேசி ஊடகங்கள் மூலம் அமலாக்க துறைக்கு எதிரான ஒரு அரசியல் செயல்பாட்டை கொண்டு வர முடியாது. ஒருவர் செய்கின்ற தவறு வெளியில் வருகிறது என்றால், அதனுடைய நடவடிக்கை பல இடங்களில் அமலாக்கத் துறையின் ரெய்டு விவகாரம் நடந்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் பலவிதமாக பேசுகின்றனர். இவர்களுக்கு சொல்லி விட்டு, ரெய்டு வரவேண்டுமாம். மேலும், எந்த ஒரு விவகாரம் என்றாலும் மாநில அரசை கேட்டுவிட்டு தான் இதையெல்லாம் நடத்த வேண்டுமாம் . அப்படி என்றால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அந்த தண்டனைக்குள் கொண்டு வர முடியாது.
மேலும், இவர்களுக்கு என்று ஒரு தனி சட்டம் போட்டுக் கொள்வார்கள். அந்த சட்டம் எல்லாம், எல்லா மாநிலங்களுக்கும் போட முடியாது அதனால் அமலாக்க துறையை விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும்,செந்தில் பாலாஜி கைது, திட்டமிட்ட சதி என்று தமிழ்நாட்டில் பீட்டர் அல்போன்ஸ் போன்ற உத்தமர்கள் தொலைக்காட்சிகளில் இப்படிப்பட்ட டிராமா பேச்சுக்களை பேசி, மக்களை முட்டாளாக்கிக் கொண்டு உத்தமர்கள் வேஷம் எத்தனை நாளைக்கு போட முடியும்? இனி
ஊழல் செய்தவர்கள் அதற்குரிய தண்டனையை காலம் கொடுக்கும் போது, தப்பிக்க முடியுமா? – சமூக ஆர்வலர்கள் .
( தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் தனக்கு நடந்தால் ஒன்று. அடுத்தவனுக்கு நடந்தால் வேறு. காலையில் சொன்னது மதியமே மறந்து விடுவார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொன்ன வார்த்தைகள், ஸ்டாலின் தற்போது ஆளுங்கட்சியாக வந்த பிறகு அதை மறந்து விடுவார் . இப்படிப்பட்ட அரசியல் கட்சி தான், தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறது என்பது மக்களுக்கு புரியுமா ? )