நாட்டில் பத்திரப்பதிவுத்துறை மிகவும் முக்கியமான துறை, மக்களுக்கு தங்கள் சொத்துக்களை பாதுகாக்கும் ஒரு துறை. இந்தத் துறையில், இனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும்போது பணம் எடுத்துக் கொண்டு வர தேவையில்லை என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
காரணம், பத்திரப்பதிவுத் துறையில் எல்லாமே ஆன்லைனில் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது யார் பெயரில் பதிவு செய்யப் போகிறோம்? யார் வாங்குகிறார்கள்? யார் விற்கிறார்கள்? என்ற விவரத்தை முந்தைய நாளிலே டோக்கன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
பிறகு, ஆன்லைனில் அந்த டோக்கன் மறுநாள் எப்போது எந்த நேரத்தில் வருகிறது? என்பது குறித்த விவரம் அதில் வந்து விடுகிறது. அதனால், தேவை இன்றி அங்கே சென்று காத்துக் கிடக்காமல், அரை மணி நேரத்திற்குள் பத்திர பதிவு முடித்து அனுப்பும் வேலை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பதிவு தொடர்பாக செலுத்த வேண்டிய தொகை அனைத்தும் பொதுமக்களின் ஏடிஎம் கார்டு மூலமாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு உண்டான தொகையை ஆன்லைன் மூலமாகவே செலுத்தி விடுவதால், அவர்கள் யாரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இனி பணம் கொண்டு வர தேவையில்லை என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.