ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமஸ்.
80 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை நுங்கம்பாக்கம் காலனியை சேர்ந்த கண்ணன் /தந்தை பெயர் வரதன் (வயது 44) என்பவர் தாக்க வேண்டிய அவசியம் என்ன? இருவருக்கும் எந்த முன் விரோதமும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எதனால் கண்ணன் ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை அடிக்க வேண்டும்? இவர் வேலை உண்டு. இவர் உண்டு இருப்பவர்.
அதாவது இவருடைய வீடு மணவாள நகரில் உள்ளது .நிலம் நுங்கம்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு அல்லது நில தகராறு அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையோ எதுவும் இல்லாதபோது, இந்த கண்ணன் எதற்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை அடிக்க வேண்டும்? அதுவும் வயதானவர் ,இவரால் திருப்பி அடிக்க முடியாது.அப்படிப்பட்ட ஒருவரை எந்த காரணத்திற்காக இவரை அடித்தார் என்பது தான் கேள்வி?
மேலும், இது சம்பந்தமாக மணவாளநகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பேபி ,பாதிக்கப்பட்ட ஆசிரியர் தாமஸ் மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு, காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, (,FIR) எஃப் ஐ ஆர் கூட போட மாட்டேன் என்று சொல்ல வேண்டிய காரணம் என்ன? இது காவல் நிலையத்தின் அதிகாரமா? அல்லது கடமையை மீறும் செயலா? என்பது உயர் அதிகாரிகள் விசாரணை செய்தால் தான் இதனுடைய உண்மையான நிலவரம் தெரியவரும் .
மேலும், இந்த மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார்கள் அதிக அளவில் வருகின்ற காவல் நிலையம். அதுவும் இங்கு ரவுடிசம் உள்ள பகுதி. இந்த காவல் நிலையத்தில் நேர்மையான, தகுதியான காவல் ஆய்வாளர்களாக மட்டும் தான் நியமிக்க வேண்டும். இந்த இடத்திற்கு இவர் தகுதியானவர் தானா? என்பதை உயர் அதிகாரிகள் விசாரணை செய்தால் உண்மை அவர்களுக்கே தெரிய வரும் என்கின்றனர் .
மேலும், இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை அடிக்கடி நடக்கின்ற ஒரு காவல் நிலையம் என்பது உயர் அதிகாரிகளுக்கும் தெரியும். அதனால், நேர்மையான, தகுதியான காவல் ஆய்வாளரை இந்த காவல் நிலையத்திற்கு நியமித்து, அப்பகுதி மக்களுக்கு சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கை .மேலும், ஒரு வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏன் தாக்கப்பட வேண்டும் ?
எதற்காக தாக்கப்பட வேண்டும்? அவருக்கு விவசாயத்தைத் தவிர, வேறு எதுவும் தெரியாது. வேறு எந்த பிரச்சனைக்கும் போகாதவர் .அப்படிப்பட்ட ஒருவரை தாக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு பின்னணியில் யார் ?என்பதை காவல்துறை விசாரணையில் தெரிய வருமா? நடவடிக்கை எடுப்பாரா?திருவள்ளூர் மாவட்ட SP செபாஸ் கல்யாண்.