தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்தத்தின் மூலம் பத்தாயிரம் பொறியாளர்கள் நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு.

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு திருத்தச் சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான பயிலரங்கத்தை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 கான திருத்தம் 2022 சட்டம் 11 பகுதிகளாகவும் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 13 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான அனைத்து வன்முறைகளும் உள்ளடக்கி வகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் தமிழ்நாடு அரசிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பொது மக்களின் பாராட்டுதல்களை பெரும்வகையிலும் இருக்க வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களும், சரியான முறையில் மக்களை சென்றடைய வேண்டும். நகராட்சி நிர்வாக துறையில் பணியாற்றும் அலுவலர்கள், இதற்காக எவ்வித சமரசமும் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அலுவலர்களுக்கான அனைத்து ஒத்துழைப்பினையும், நகராட்சி நிர்வாக துறை நிச்சயமாக வழங்கும்.

 மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் உரிய நடைமுறைகளை பின்பற்றி ,சட்டு விதிகளுக்கு உட்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை அனைவரும் சரியான புரிதலோடு செயல்படுத்த வேண்டும் .நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் அரசினுடைய நோக்கமும் திட்டங்களும் பொதுமக்களை சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *