காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கலப்பட அரிசி கொடுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த அரசு வேக வைத்தாலும், சாதம் ஒரு விதமான பிசுபிசுப்பு தன்மையோடு உள்ளது. மேலும், அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது ,அதில் அரிசியும் மிதக்கிறது. பாதி அரசி பிளாஸ்டிக் அரிசி போன்று இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதை சாப்பிடுவதால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும், வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கும், ஏதாவது நோய் உருவாகுமா என்ற அச்சத்தில் பேசி வருகின்றனர்.
மேலும், இந்த கலப்பட அரிசியை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அடுத்தது, இதைப் பற்றி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.