மத்தியில் ஆளும் பிஜேபி அரசு மாநிலத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு, மத்திய அரசின் சலுகைகளும், அரசு அடையாள அட்டை மற்றும் விளம்பரங்களை கொடுக்க வேண்டும் என்பது சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை.
தமிழ்நாட்டை பொறுத்தளவில் பத்திரிகை என்பது அரசு என்ன தவறு செய்தாலும், அதை சுட்டிக் காட்டக் கூடாது. பத்திரிகையின் நோக்கமும், சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது. பெயருக்கு நானும் பத்திரிகை நடத்துகிறேன் என்று காட்டுபவர்களும், காப்பீட்டு பேஸ்ட் ( Copy To Paste ) பத்திரிகைகளும் அரசு அடையாள அட்டை வாங்குகிறது.
ஆனால், தகுதியான பத்திரிகைகளுக்கு இன்னும் தமிழ்நாட்டில் இந்த அரசு அடையாள அட்டை கொடுக்காமல், ஆர் என் ஐ சென்னையில் வாங்க வேண்டும். சென்னையில் பிரசுரம் செய்ய வேண்டும். இப்படி பல நிபந்தனைகளை விதிமுறைகளாக விண்ணப்பத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையே தவறானது.
RNI கொடுப்பது மத்திய அரசு. விதிமுறை தமிழக அரசு எப்படி அதற்கு வகுக்க முடியும்? நீங்கள் RNI கொடுத்தால்தான், உங்கள் இஷ்டத்திற்கு அந்த விதிமுறையை வகுக்க முடியும். கொடுப்பது மத்திய அரசு. அதுவே சொன்னாலும் பரவாயில்லை. நீங்கள் எப்படி அதற்கு விதிமுறை வகுக்க முடியும்? இது எல்லாம் சாமானிய பத்திரிகைகளுக்கு ஒரு பத்திரிகை சட்டம், கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சாதகமான சட்டம், இந்த பாகுபாடு எல்லாம் பத்திரிகை துறையில் இருந்தால், எப்படி இந்த பத்திரிகைகள் வளரும்? இவை எல்லாம் வளரக்கூடாது என்பதுதான் இவர்களுடைய முக்கிய நோக்கம்.
இன்று சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் மிகவும் குறைவு .அதற்கு கூட தமிழக அரசு இது போன்ற தவறுகளை செய்கிறது. இதற்கு மாற்று மத்திய அரசு முக்கிய பத்திரிகைகளை அல்லது தகுதியான பத்திரிகைகளை தேர்வு செய்து, சலுகை, விளம்பரங்களும் அரசு அடையாள அட்டையும் கொடுக்க வேண்டும் என சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும், மக்கள் அதிகாரம் மாத இதழாக இருந்தாலும் ,இணையதளத்தில் தினசரி செய்திகளை வெளியிட்டு வருவது மத்திய மாநில அரசுக்கு தெரிந்த உண்மை .அதனால், பத்திரிக்கை துறையில் காலத்திற்கு ஏற்றவாறு விதிமுறைகளை மாற்றி அமைத்து, தகுதியான பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். உண்மையான செய்திகள் மக்களுக்கு போய் சேர வேண்டும் .பத்திரிகையின் சுதந்திரம் பறிக்கக் கூடாது. இது பற்றி மத்திய அரசின் செய்தித்துறை நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் தமிழ்நாட்டில் உள்ள சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை.