செந்தில் பாலாஜி விஷயத்தில் E D தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதா ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி கைது விஷயத்தில் சட்டத்தை மீறி அவரை கைது செய்துள்ளது. மேலும், ஒருவரை கைது செய்ய அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை .இப்படி தேவையில்லாத கருத்துக்களை சில ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் கூறி வருவது எந்த நோக்கத்திற்காக? செய்திகளை மக்களிடம் பரப்புகிறார்கள்?  அடுத்தது செந்தில் பாலாஜி தவறே செய்யவில்லை.

 தவறு செய்தது அமலாக்கத் துறையும், ஆளுநர் ரவியும் தான். இது போன்ற கதைகளை எல்லாம் பரப்புவதற்கு கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், அரசியல் தெரியாதவர்கள் ,அவர்களிடம் தான் பேச முடியும். இது தவிர, காஞ்சிபுரம் கோர்ட் வளாகத்தில் பிஜேபி அமைச்சர்களில் நூற்றுக்கு 40 சதவீதத்திற்கு மேல் வழக்கு உள்ளவர்கள் தான் என்று திமுக போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது. ஒரு தவறு செய்த இன்டர்நேஷனல் குற்றவாளி அதாவது வெளிநாடுகளில் பணப் பரிவர்த்தனை செய்த குற்றவாளி என்று அமலாக்கத்துறை தெரிவிக்கிறது.

 அப்போது கூட அவரைப் பற்றி தெளிவான என்ன குற்றம் செய்தார்? என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வில்லையாம். இதையெல்லாம் படித்த சில மேதாவிகள் கூட வசனம் பேசுகிறார்கள். சோசியல் மீடியாக்களில் இவ்வளவு நாடகம், நடிப்பு, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் செந்தில் பாலாஜிக்கு ஏன்? இந்த ஊடகங்கள் கொடுக்கிறது?

 இவையெல்லாம் நடுநிலை ஊடகங்களா? அல்லது மக்கள் நலன் சார்ந்த ஊடகங்களா? அல்லது அரசியல் கட்சி சார்ந்த ஊடகங்களா? எது என்பதை இன்றுவரை இதைப் பற்றி செய்தித் துறை மக்களிடம் தெரிவிக்காதது ஒரு தவறு .அடுத்தது, ஒரு குற்றவாளி அதுவும் சாதாரண குற்றவாளி அல்ல, அவரிடம் சொல்லிவிட்டு தான் எத்தனை மணிக்கு, என்ன தேதியில் வந்து உங்களை கைது செய்வேன். நீங்கள் வீட்டிற்குள்ளே பாதுகாப்பாக இருங்கள் என்று காவல்துறை கூட சொல்லாது.

அப்படி இருக்கும் போது, அமலாக்க துறைக்கு என்று மிகப்பெரிய அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவர் பொருளாதார குற்றங்களை செய்யும் போது ,அவர்களுக்கு கைது செய்யும் அதிகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அப்படி வெளிப்படையாக சொன்னால், குற்றவாளிகள் இதைவிட அதிகமான சட்ட சிக்கலை ஏற்படுத்துவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. பல லட்சம் கோடிகளில் ஊழல் செய்பவர்கள் சட்டத்தை மதிக்காமல், அதை தாங்கள் எப்படியும் அந்த ஓட்டைக்குள் ஓட்டை போட்டு தப்பிக்க முடியுமா? என்று தான் உச்ச நீதிமன்றம் வரை கூட அமலாக்கத் துறைக்கு உள்ள அதிகாரம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்கிறார்கள்.

அப்படி என்றால் இவர்களுக்கு ஒரு தனி சட்டம் இந்தியாவில் கொண்டு வர வேண்டுமா? மேலும், ஊழல் குற்றவாளிகள் திறமைசாலிகள், இவர்களுக்கு வாக்களித்தவர்கள் முட்டாள்கள். இப்படிப்பட்ட தவறுகளை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அதிகார பதவியில் அமர்ந்து கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் இன்று சட்டத்தை மீறி அவருக்கு சலுகைகளை கொடுத்திருக்கிறது .அதாவது ஒருவர் அமைச்சர் பதவியில் இருக்கிறார் என்ற காரணத்தினால் ,அவருக்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்க எப்படி அனுமதித்தது? அதுவே ஒரு சாமானிய மக்களுக்கு இந்த நிலை என்றால், அவர்களை இதே நீதிமன்றம் தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்குமா?

 மேலும், இந்த கைது நடவடிக்கையின் போது மனைவி ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வார்களா? இப்படி பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது .இது ஒரு சாதாரண குற்றமல்ல ,இதற்காக சில ஐஏஎஸ், ஐபிஎஸ் ,சமூக ஊடகங்கள், பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என்று பலர்  கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். அந்தக் கருத்துக்களில் செந்தில் பாலாஜிக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் பேசி இருக்கலாம். அது அவரவர் கருத்துரிமை.

ஆனால் சட்டம் என்ன சொல்கிறது? அமலாக்கத்துறை சட்டப்படி அவரை கைது செய்தார்களா? இல்லை எந்த தவறும் செய்யாத செந்தில் பாலாஜியை கைது செய்து விட்டார்களா? மேலும், அமைச்சர் பதவியே இல்லாத ஒருவரை, ஊழல் புகாரே இல்லாத ஒருவரை, ஆளுநர் ஆர் என் ரவி அவரை பதவி நீக்கம் செய்து விட்டாரா ?இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

 இதற்கெல்லாம் திமுகவிற்கு ஆதரவாக பேசுபவர்கள், ஏன்? கட்சிக்காரர்களே கூட இருக்கட்டும். அல்லது கட்சி ஊடகங்களாக கூட இருக்கட்டும் ,அல்லது திமுகவின் கூட்டணி அரசியல் கட்சி விசுவாசிகளாக கூட இருக்கட்டும். இந்த கேள்விகளுக்கு எல்லாம் நடுநிலையான, நேர்மையான, உண்மையான பதிலை அவர்களால் பேச முடியாது.

தவிர, தமிழ்நாட்டில் ஊடகங்கள் என்ற பெயரில் கருத்துரிமை, கருத்துரிமை என்ற பெயரில் தங்களுடைய பேச்சுத் திறமையை காட்டக் கூடாது. அப்படி காட்டும் போது எதிர் தரப்பிலிருந்து இன்னும் நான்கு பேர் இதைப்பற்றி விமர்சனமாக பேசுகிறார்கள். இந்த இரண்டு விமர்சனங்கள் பற்றி மக்கள் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். அப்போது எது உண்மை ?எது பொய்? என்பதை அவர்களே புரிந்து கொள்வார்கள் . மேலும் ,அதைக் கூட புரிந்து கொள்ள முடியாதவர்களும் குறிப்பிட்டு சதவீதம் இருக்கத்தான் செய்கிறது.

இதற்கெல்லாம் காரணம், இன்றைய அரசியல் என்பது சுயநலம். இதில் சட்டப்படி எப்படி கொள்ளையடிக்கலாம்? சட்டத்தை எந்தெந்த வழியில் ஓட்டை போட்டு தப்பிக்கலாம் ?இது ஒரு விஞ்ஞான முறை ஊழல்.. இந்த விஞ்ஞான முறை ஊழலுக்கு சோசியல் மீடியாக்கள், பத்திரிகை, தொலைக்காட்சிகள், அரசியல் பேச்சாளர்கள் ,பத்திரிகை பேச்சாளர்கள், இவர்களெல்லாம் பேசிய கவிழ்க்கும் வேலைதான், இன்றைய அரசியலாக ஆக்கிவிட்டார்கள்.

இவர்கள் அனைவருக்கும் அரசியல் என்பது பொது நலமா? அல்லது சுயநலமா? அல்லது பேசிக் கவிழ்வுக்கும் வேலையா? என்பதை பற்றி முடிவு செய்துவிட்டு ,பேசினால் இந்த அரசியலைப் பற்றிய முக்கிய உண்மைகள் பொது மக்களுக்கு தெரிய வரும். எனவே

வருங்கால இளைய தலைமுறைகள் இந்த பேசிக் கவிழ்வுக்கும் அரசியல்வாதிகளிடம் ஏமாறாமல் அரசியல் என்றால் என்ன? என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *