சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோயில் சம்பந்தமாக பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் தொடர்ந்து உள்ள ஏழு பொதுநல வழக்குகள் கோயில் நிர்வாகத்தை சீர் செய்யும் நோக்கில் தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதில் உள்ளது.
ஆனால், நீதிபதிகள் அது நேர்மையானதாக இருக்கிறதா? என்பது மட்டும் ஆய்வு செய்தாலே போதும். அதையும் தாண்டி நீதிபதிகள் அவருக்கு 3 ,50,000 பணம் கட்ட சொல்லி இருக்கிறார்கள். இந்த பணம் கட்டுவதால் அவருடைய நேர்மைத் தன்மை அதில் வெளிப்படுத்த முடியுமா ?அடுத்தது, நீங்கள் எந்த கோயில் பக்தர் என்று கேள்வி கேட்டுள்ளார்கள்? அவர் நான் எல்லா கோயிலுக்கும் பக்தன் என்று சொல்லி இருக்கிறார். ஒருவேளை அது நீதிபதிகளுக்கு ஒரு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள கோயில் நிர்வாகத்தை சீர் செய்ய பக்தன் தான் பொதுநல வழக்கு தொடர வேண்டும் என்ற நிலை இல்லை. சமூக ஆர்வலர்களும் தொடரலாம். அல்லது பொது மக்களில் ஒருவர் கூட தொடரலாம். ஆனால் பொதுநல வழக்கு எந்த நோக்கத்திற்கானது? என்ற அடிப்படை மட்டும் நீதிபதிகள் பார்த்தால் போதும். சமூகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்த தான் ,பொதுநல வழக்கு தொடர்கிறார்கள்.
மேலும், பொதுநல வழக்கில் அரசியல் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகள், அதிகாரிகள் செய்யும் தவறுகள், ஊழல்கள்,முறைகேடுகள்,கிடைக்க வேண்டிய உரிமைகள் ,இதிலிருந்து ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு நீதிமன்றம் ஒரு துணையாக இருக்க வேண்டும். நீதிபதிகள் அரசுக்கு மட்டும் ஆதரவாக இல்லாமல், பொது பிரச்சனைகளுக்கு பொதுமக்களின் கடைசி ஆயுதமாக நீதிமன்றம் இருக்க வேண்டும்.
அப்போதுதான் இன்றைய கால கட்டத்தில்நடக்கின்ற சட்டப்படி ஊழல்கள், சமூக குற்றங்கள், மக்கள் பிரச்சனைகள், மக்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கிறது. மேலும், நீதிமன்றம் அரசியல் கட்சியினரை கோயில் தர்மகர்த்தாவாக நியமிக்க கூடாது என்று சொல்லியும், திமுக அரசு கீழ் மட்டத்தில் உள்ள கோயில்களுக்கு கூட அவர்களை நியமிக்கிறது. இது எல்லாம் எங்கே போய் மக்கள் முறையிடுவார்கள்? அரசாங்கத்தின் தவறு, அதிகாரிகள் தவறு, என்று பல சமூகத்தில் அனுபவிக்கும் கஷ்டங்கள் வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் எங்கே போய், யாரிடம் முறையிடுவார்கள்?
அவர்களுக்கு நீதிமன்றம் தவிர ,வேறு இடம் எதுவுமில்லை. அதனால், தயவு செய்து நீதிமன்றம், பொதுநல வழக்குகளை உதாசீனப்படுத்தாமல், அதற்கு முக்கியத்துவம் அளித்து, இந்த மக்கள் அனுபவிக்கும் சமூக கொடுமைகளுக்கு நீதிமன்றம் தவிர வேறு வழியில்லை.
அதனால், நீதிபதிகள் இதை தவறாக எடுத்துக் கொள்ளாமல், சமூக நன்மைக்கானது என்று பார்த்தால் தான் ,சமூகப் பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் பொதுநல வழக்கின் மூலம் தீர்வு காண முடியும், என்ற பொது மக்களின் நம்பிக்கையாக நீதிபதிகள் இருக்க வேண்டும் என்பதுதான் ,சமூக ஆர்வலர்களின் முக்கிய கருத்து.