தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்பது தான் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு.
இது அவருக்கு ஏற்பட்ட சினிமா புகழ் அரசியலில் ஈடுபட்டால் ,அவரை அடுத்த சி.எம் என்ற அளவிற்கு அரசியல் வட்டாரம் மற்றும் அவருடைய ரசிகர்கள் பேசுகின்ற பேச்சு.
மேலும், தற்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா மற்றும் சமூக நன்மைக்கான உதவிகள் செய்து வரும் விஜய், அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த, அவருடைய முன்னோட்டமாக இதை எடுத்துக்கொண்டு அரசியல் விமர்சகர்கள் மற்றும் அவர் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது என்று தெரிவிக்கிறார்கள்.
ஆனால், விஜய் அரசியலுக்கு வரக்கூடிய மனநிலையில் அவர் இல்லை என்பது தான் அவருடைய நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும், ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் ,அவருடைய மனம் அதில் முழு ஈடுபட்டுடனும் ,போராட்ட குணங்களை பெற்றவராக இருந்தால்தான் அரசியலில் ஜெயிக்க முடியும். இது இரண்டுமே நடிகர் விஜய் இடம் இருக்கிறதா? என்பது கேள்விக்குறி.
மேலும், அரசியல் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது .அங்கே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றாலும், அதை தடுக்க அரசியல் கட்சியினரே முட்டு கட்டையாக இருப்பார்கள். அவர்களை சமாளிப்பது மிகப்பெரிய பிரச்சனை. இதற்கிடையில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரங்கள் சமாளிப்பது அதைவிட பிரச்சனை ,இவ்வளவு பிரச்சனைகளை கொண்டுள்ள அரசியல் வாழ்க்கை! நடிகர் விஜய் மனநிலைக்கு ஒத்துப் போகுமா?
இருப்பினும், இவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மகனை எப்படியாவது அரசியலில் கொண்டு வர வேண்டும் என்பது அவருடைய பெரும் முயற்சி. அந்த பெரும் முயற்சிக்கு நடிகர் விஜய் ஒத்துவரவில்லை என்பதுதான் இருவருக்கும் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு என்று அவர்களுடைய நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் நடிகர் விஜய் தற்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அவர்களுடைய நிர்வாகிகளிடம் முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த விஷயம் அரசியலுக்கு வர விருப்பம் இல்லாத ஒரு கருத்து தான் ,அவர் தெரிவித்துள்ளது. அவருக்கு அரசியலில் விருப்பம் இருந்தால் ,அவருடைய ரசிகர்களையும் ,இயக்கத்தை சார்ந்தவர்களையும் அழைத்தற்கு அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், வருங்கால திட்டங்களையும் வெளிப்படுத்தி இருப்பார் .ஆனால். நடிகர் விஜய் அதை பேசவில்லை. உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று தான் தெரிவித்துள்ளார். இது அரசியல் எதிர்பார்ப்போடு இருந்த அவருடைய இயக்கத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வர விருப்பமில்லை என்பதுதான் அவருடைய மனநிலை என்று அவருடைய நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.