அமலாக்க துறையின் ரெய்டு விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி திமுகவை, பாஜக மிரட்டி பார்க்கிறதா?
அமைச்சர் பொன் முடியை அமலாக்கத்துறை விசாரணையில் கொண்டு வந்துள்ளது. அதனால் ,அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை காலை 7:00 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி சென்னை ,சைதாப்பேட்டை ,விழுப்புரம் போன்ற பகுதிகளில் உள்ள பொன்முடியின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இது தவிர, இவரது மகன் கௌதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி தொகுதியின் எம்பி) வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இவர் தற்போது வாங்கியுள்ள வெளிநாடுகளில் 8 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய ரிசர்வ் படை உதவியுடன் இருவரது வீட்டிலும், அமலாக்கத் துறையின் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இது திமுக அரசியல் பழிவாங்கும் வேலை என்று மக்களிடம் சொன்னாலும், இதையெல்லாம் பார்க்கும் மக்கள் இதை நம்புவார்களா ? இனி விசாரணையின் அடுத்த கட்ட நகர்வில் தான், யார், யார் ,கைது செய்யப்படுவார்கள்? என்பது தெரியவரும்.