அமலாக்க துறை திமுக ஆட்சியாளர்கள் மீது நடத்திய ரெய்டுகளில் ஆதாரத்தோடு ,புள்ளிவிவரத்தோடு இருந்தாலும், அந்த குற்றம் செய்தவர்களாக இவர்கள் பேசவில்லை. மேலும், இவர்களுக்காக பக்கவாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களும், இவர்களுக்கு ஆதரவான பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் சட்டத்தின் ஓட்டைகளில் இவர்கள் ஒழிந்து கொள்ள இடம் இருக்கிறதா? என்று தேடி கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த குற்றங்களை நியாயப்படுத்துகிறார்கள்.
அதாவது மற்றவர்கள் செய்தால் குற்றம். தான் செய்தால் அது குற்றமில்லை என்பது இவர்களுடைய அரசியல் அடாவடித்தனம். அதனால் திமுக அரசியலில் ஈடுபட்டுள்ள ஆட்சியாளர்களின் குற்றங்கள், மக்களும் கேட்கக்கூடாது. சட்டமும் தண்டிக்க கூடாது. அவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது கடவுளா? அல்லது சட்டமா ?இந்த நிலையில் தான் ஆட்சியாளர்கள், அரசியல் கட்சியினர் செய்து வரும் ஊழல்கள், மோசடிகள் சட்டப்படி நியாயப்படுத்துகிறார்கள்.
அவர்களுடைய தவறை அல்லது குற்றங்களை ,அமலாக்க துறையாக இருக்கட்டும், லஞ்ச ஓழ ஒழிப்பு துறையாக இருக்கட்டும் அல்லது சிபிஐயாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும்,இந்த சட்டத்திற்குள் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது ?அந்த ஓட்டைகளுக்குள் எப்படி நாம் ஒளிந்து கொள்வது அல்லது அதிலிருந்து தப்பித்து வெளியே வந்து விடுவது. இதுதான் இவர்களுடைய திறமையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம், என்ன தனக்கு பின்னால் தன்னுடைய கட்சி பலமிக்கதாக இருக்கிறது. தனக்காக எப்படியும் பேச பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சட்டத்தை தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள கூடியவர்கள். அப்படிப்பட்ட திறமை மிக்க பேச்சாளர்கள் தனக்காக பேசக் கூடியவர்கள், ரவுடிசம் செய்யக்கூடியவர்கள், தனது கட்சியில் இருக்கிறார்கள்.
அதனால், இந்த சட்டத்தை பற்றி கவலை இல்லை. இது என்ன என்றால், அரசியலில் 100% யாருமே நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. மனசாட்சியும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், எல்லோரும் உண்மையாக பேசுவதை போல் மட்டுமே எதிர்பார்க்க முடியும். அதில் எது உண்மை ?எது பொய் என்பது தெரியாமல், அவர்கள் சொல்வது அத்தனையும், மக்களிடம் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இன்றைய கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை தொலைக்காட்சிகள். ஆட்சி அதிகாரம் ஒருவரிடம் இருக்கும் போது, அவர்கள் சொல்வது தான் சட்டம் ஆகிவிடுகிறது.
அதே நிலைமை இவர்களுக்கு அந்த சட்டத்தால் தண்டனை வழங்கும்போது, எவ்வளவு சட்ட போராட்டங்கள், நீதிமன்றம் நடத்த வேண்டி இருக்கிறது? இதில் அமலாக்கத்துறை எவ்வளவு புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டி இருக்கிறது? சேகரித்த புள்ளி விவரங்களை கூட ,அவர்கள் விசாரணையில் சரியான பதில் கொடுக்காமல் ஏமாற்றினால், இவர்களை யார் தண்டிப்பது கடவுளா? அல்லது நீதிமன்றமா?மேலும்,
இவ்வளவு நெருக்கடிகளை அமலாக்கத்துறைக்கு கொடுத்தாலும், அதை மக்களிடம் வெளிப்படுத்தாமல், ஏதோ ஒரு பதிலை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனாலும், அமலாக்கத்துறை ஒருபோதும் இவர்களை விடாது. இருப்பினும், இது பிஜேபியின் பழிவாங்கும் அரசியல். என்பது திமுக சொல்லி வரும் குற்றச்சாட்டு. அரசியலில் உத்தமர்களாக பேசிக்கொண்டு எத்தனை ஆண்டு காலம் இந்த மக்கள் ஏமாறுவார்கள்? சட்டத்தை மதிப்பதில்லை. சமூக மக்களையும் மதிப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் எப்படி தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்வார்கள்?
மேலும், அரசியல் என்பது ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, திமுக கட்சி அரசியலை முன்னிலைப்படுத்தி தப்பிக்கலாம் என்பதும், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்கலாம் என்பதும், இந்த உத்தமர்களின் பேச்சு, ஆனால், அது அரசியல் தெரிந்த மக்களிடம் எடுபடாது. மேலும் இதை இவர்களுடைய கட்சிக்காரர்கள் தான் நியாயப்படுத்துவார்கள். இந்த நியாயம் மற்ற அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ,ஒருபோதும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.