ஒருவர் படித்து பட்டம் பெற்று MBBS மருத்துவராக பணியாற்றும் போது அவர் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளலாம். இது தவிர, ஒவ்வொரு துறையிலும் ஒருவர் phd டாக்டர் பட்டம் பெறலாம். இது கஷ்டப்பட்டு படித்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் .
ஆனால் ,படிக்காமலே அதற்காக எந்த முயற்சியும் இல்லாமலே, பணம் கொடுத்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் எப்படி சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகிறது? இவர்கள் சொல்வது, இவர்கள் செய்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் என்கிறார்கள் .அப்படி செய்த சமூக சேவை என்ன? சமூக சேவைக்கு அர்த்தம் தெரியாமல், அந்த டாக்டர் பட்டம் சமூக சேவை என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது.
இது ஒரு தவறான டாக்டர் பட்டம். தகுதி இல்லாதவர்களுக்கு கொடுக்கின்ற டாக்டர் பட்டம். சரி இந்த பட்டத்தை வைத்து சமூகத்தில் இவர் டாக்டர் என்று போட்டுக் கொள்வதால் ,இவருக்கு என்ன மதிப்பு மரியாதை உயர்ந்துவிடும்? எதுவும் இருக்காது. அப்படி இருக்கும்போது எதற்காக, இந்த டாக்டர் பட்டங்கள்? பணத்திற்காக சமூகத்தில் கல்வியின் தரத்தை கேவலப்படுத்துகிறது. போலியான பட்டங்கள் வாங்கி மாட்டிக் கொள்வதால் ,இன்று நீதிமன்றம் வரை பிரச்சனை வந்துள்ளது.
மேலும், பல்கலைக்கழகங்கள் கொடுக்கின்ற டாக்டர் பட்டத்தை, ஒரு அமைப்பு கொடுக்கின்ற டாக்டர் பட்டமாக இருந்தாலும் சரி அல்லது டாக்டர் அவார்டாக இருந்தாலும் சரி, அது எப்படி அதற்கான தகுதியை நிர்ணயிக்கிறது? இப்படி சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் மூலம் கொடுத்த டாக்டர் பட்டம் காவல்துறையில் புகாராகி நீதிமன்றம் வரைக்கும் சென்றுள்ளது.
இப் பிரச்சனை குறித்து ,அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகமும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் டாக்டர் பட்டங்கள் கொடுக்கின்ற அமைப்பின் இயக்குனர் ராஜு ஹரிஷ் ,மகாராஜன் உள்ளிட்டவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இப்படி போலியான பட்டங்கள் தனியார் அமைப்புகள் மூலம் பணத்திற்காக, தகுதியற்றவர்களுக்கு கௌரவ பட்டங்களை கொடுப்பதால், கல்வியின் கௌரவம் பாதிக்கிறது உண்மையாகவே படித்து பட்டம் பெற்றவர்களின் மரியாதை கேலிக் குறியாகிறது.
அதனால், இப்படிப்பட்ட டாக்டர் பட்டங்களாக இருந்தாலும் சரி, டாக்டர் விருதாக இருந்தாலும் சரி, மத்திய அரசு தடை செய்வது மிகவும் நல்லது.