பத்திரிகை துறையை சீர் செய்யாமல் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை ,மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிப்பது ஏன் ?இதன் ஊழல் வெளிச்சத்திற்கு கொண்டு வர சிபிஐ விசாரணை தேவை..!

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மத்திய, மாநில அரசுகள் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக தவறான விதிமுறைகளை வகுத்து, அதனுடைய வளர்ச்சிக்கு மட்டுமே, கொடுத்து வருகிறது . இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. பேருக்கு தான் பத்திரிகை சுதந்திரம்.

 இது அரசியல், அரசாங்க, அதிகார சுதந்திர கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது . தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்றால், மற்ற பத்திரிகைகள் எப்படி நடத்துவது? நாட்டில் நாலு பத்திரிகைகளுக்கு மட்டுமே, கோடிக்கணக்கில் விளம்பரங்களை கொடுத்து அவர்களை மட்டும் தான் வாழ வைக்க வேண்டும்.

அவர்களை மட்டும் பத்திரிகை துறையில் முன்னிலைப்படுத்தும் செய்தித் துறையின் நோக்கம் என்ன? இது அரசின் கொள்கை முடிவா? அல்லது செய்தி துறையின் கொள்கை முடிவா? அல்லது ஆட்சியாளர்களின் கொள்கை முடிவா? அல்லது அரசியல் சட்டத்தின் கொள்கை முடிவா? எந்த முடிவின் அடிப்படையில் ,செய்தித்துறை இந்த பத்திரிகைகளுக்கு நேர்மையான முறையில் சலுகை விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது? இது மக்களின் வரிப்பணம்.

அதை எப்படி? ஒரு ஒரு சிலருக்கு மட்டுமே பட்ட போட்டு கொடுத்திருக்கிறார்கள்? இது அரசியல் சூழ்ச்சியா? இல்லை, இதில் நடக்கும் மிகப் பெரிய ஊழலா? எது என்பது? இதற்கு சிபிஐ விசாரணை வைத்தால், இந்த உண்மைகள் வெளிவரும். இல்லையென்றால், எம்ஜிஆர்,ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் இல்லாத ஒரு விதிமுறை பருவ இதழ்களுக்கு போடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த விளம்பரமும் ,சலுகையும் இல்லை.

ஆனால், அரசு அடையாள அட்டை கொடுப்பதற்கு இவர்கள் போட்டுள்ள விதிமுறை, கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் போட்ட விதிமுறை போல தெரிகிறது. ஒருவேளை செய்தி துறை  அவர்களைக் கேட்டுப் போட்டார்களா? அல்லது அவர்கள் சொன்னபடி செய்தார்களா? இது இரண்டும் தான் நடந்திருக்க வேண்டும் . RNI கொடுப்பது மத்திய அரசு.

ஆனால், அதற்கு மாற்று அரசாணை போடுவதற்கு மாநில அரசாகத்திற்கு உரிமை உள்ளதா? இல்லையா? சட்டப்படி இது செல்லுமா? செல்லாதா? எதன் அடிப்படையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது? இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது? ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரனுக்கு ஒரு சட்டம் இதுதான் பத்திரிக்கை துறையின் சட்டமா? என்று சட்ட வல்லுநர்கள் சிரிக்கிறார்கள். நாட்டில் சமூக நீதிக்காக போராடும் பத்திரிகைகள் விரல் விட்டு தான் எண்ண முடியும்.

அப்படி பட்ட பத்திரிகைகளை தேர்வு செய்து, சலுகை, விளம்பரங்களை கொடுத்தால், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கும். ஆனால், இவர்களுடைய ஊழல்களுக்கு, ஒத்துஊதும் பத்திரிகைகளுக்கு மட்டுமே.  சலுகை, விளம்பரங்கள் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதனால், மக்களின் வரி பணம் கோடிக்கணக்கில் அரசாங்கத்தால் வீணடிக்கப்படுகிறது. செய்தி துறை அதிகாரிகளுக்கு இது பற்றிய இந்த உண்மை தெரியுமா ?தெரியாதா?

 தெரியாமல் எதற்கு? அந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டு, உங்களுடைய பதவி, அதிகாரங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தால், சமூகத்தில் போராடிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கும், ஏழை எளிய நடுத்தர மக்களின் பிரச்சினைகளுக்கும், அரசாங்கத்தின் உரிமைகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கும், எப்படி தீர்வு கிடைக்கும்? தவிர, அரசு ஊழியர்களுக்கு கூட, அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கும் இதே நிலைமைதான்.இதில் சிபிஐ விசாரணை வைத்தால் தான் ,இந்த பத்திரிகையின் ஊழல் கோடிக்கணக்கில் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

(சமூக ஆர்வலர், வழக்கறிஞர், முன்னாள் சிபிஐ அதிகாரி வரதராஜன், தற்போதைய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளை பற்றி அவர் தரும் விளக்கம்.)

மேலும் ,மத்திய மாநில அரசின் செய்தித்துறை விதிமுறைகளால் குறிப்பிட்ட சில பத்திரிகைகள் மட்டுமே லாபம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஒரு மிகப்பெரிய சிறப்பு என்றால், அரசு அடையாள அட்டை வழங்குவதற்கு கூட( RNI )பருவ இதழ்களுக்கு சென்னையில் தான் பதிவு செய்திருக்க வேண்டும். சென்னையில் தான் அவர்கள் வெளியீடு செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் தான் நாங்கள் அரசு அடையாள அட்டை கொடுப்போம். என்றால், பத்திரிகை யாருக்கு? அரசியல்வாதிகளுக்கா? ஆட்சியாளர்களுக்கா? மக்களுக்கா? இதில் யாருக்கு? என்பதை செய்தித் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் .

மேலும், இது பத்திரிகை சுதந்திரமா? இல்லை இவர்களுடைய அரசியல் அதிகார சுதந்திரமா ?அடுத்தது தினசரி நாளேடுகளில் பணியாற்றக்கூடிய செய்தி துறை ஆசிரியர் மற்றும் செய்தியாளர்களுக்கு 60 வயது கடந்தாலும் அவர்களுக்கு அரசு அடையாள அட்டை கொடுக்கலாம் .ஆனால், இவர்களுக்கு 60 வயது ஆனால் அந்த அடையாள அட்டை விண்ணப்பிக்க தகுதி இல்லை.இவர்கள் என்ன அரசு ஊழியர்களா? இது எப்படி இந்த பருவ இதழ்கள் நடத்தும் வெளியிட்டார்கள் ஏற்றுக் கொள்வார்கள்?

 மேலும், நானும் இதைப்பற்றி தொடர்ந்து ஐந்தாண்டுகளாக இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறேன். ஆனால், இதுவரை செய்தித் துறை இதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவிர, பருவ இதழ் நடத்துகின்ற வெளியீட்டாளர்களும், குறைந்தபட்சம் ஒரு 50 லிருந்து 100 பேராவது இந்த செய்திகளை பார்த்து காப்பி அடித்ததாவது போடுவார்களா? என்று நினைக்கிறேன் அவர்களும் போடவில்லை. அப்படி இருந்தால், எப்படி இந்த பத்திரிகைகளுக்கான உரிமைகள் பெற முடியும்?

 இங்கே தினசரி பத்திரிகைகளில் கட்சி சார்ந்தது, வியாபாரம் சார்ந்தது, அதற்கு தகுதியற்றது ,எல்லாவற்றிற்கும் சலுகை ,விளம்பரங்கள் பஸ் பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தகுதியானவர்களுக்கு, தகுதியான பத்திரிகைகளுக்கு எந்த சலுகையும் கொடுக்கவில்லை. இதை தான் நீதிமன்றம், இந்த கருத்தை  மத்திய, மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டும்.

 பெரும்பாலும் இதனுடைய பி ஆர் ஓ கள் அரசியல் பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பத்திரிகையின் சட்ட நுணுக்கங்கள் எதுவும் தெரியாது. ஒரு அரசியல்வாதிக்கு என்ன தெரியுமோ, அதுதான் தெரிகிறது. அதனால், பஸ்சிலும் ரயிலிலும் சீட்டு கிடைத்துவிட்டால், சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டு பயணிப்பவர்கள் போல, அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமோ அல்லது இந்த கார்ப்பரேட் பத்திரிகையின் செய்தியாளர்களிடமோ ,ஒரு பத்திரிகையை நடத்த சொல்லி கொடுத்கொடுத்தால், அப்போது தெரியும். இவர்களுடைய திறமை, தகுதி மற்றும் அந்த வலியின் வேதனை  எப்படி இருக்கும்? என்று தெரிந்து கொள்வார்கள் .

அதனால், இது பற்றி, நேற்று கூட சில செய்தித்துறை உதவி இயக்குனர்களிடம் பேசினேன் .ஒருவர் எழுந்து நின்று கொண்டார். அவர்களால் இந்த உண்மைகளை புறக்கணிக்க முடியவில்லை. ஆனால், இந்த துறைக்கு வந்ததற்கு, இதனுடைய உண்மைகளை எடுத்து வைத்திருக்கிறேன். அது அடுத்த தலைமுறைகளாவது, இந்த பத்திரிகை துறைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்ளாத என்பதுதான் என்னுடைய கருத்து. மேலும், இந்தத் துறையில், இப்படிப்பட்ட தேவையில்லாத விதிமுறைகள் மற்றும் தவறான விதிமுறைகள் மூலம் கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள் அனைத்திற்கும் சிபிஐ விசாரணை வைத்தால் மட்டுமே, பத்திரிகை துறையில் சமூக நீதி கிடைக்கும் என்பது சமூக நலனுக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *