நாடு 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆனால், அதன் நோக்கம் மக்களிடம் சென்றடைந்ததா?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி மோட்டார் உலகம்

எந்த நோக்கத்திற்காக இந்தியாவின் சுதந்திர தியாகிகள் தன் உயிரை கொடுத்து வாங்கி தந்த சுதந்திரத்தின் நோக்கம் இன்று வரை அடித்தட்டு மக்களிடம் போய் சேரவில்லை. ஆனால், நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த சுதந்திர தினத்தை தியாகிகளை நினைவூட்டும் விதமாக, அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக, சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.

 சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த தியாகிகள், இந்த அரசியலை எப்படி நடத்த வேண்டும்? அதற்கு யார் தகுதியானவர்கள்? என்பதை சொல்லிவிட்டு போகவில்லை. மக்களும் அது பற்றி சிந்திக்கவில்லை. மேலும், மக்களில் இந்த தேசத்தின் ஒற்றுமை, தேச நலனில் அக்கறை, தேச நலனில் வளர்ச்சி,  தேச நிலமையில் அக்கறை ,எதுவுமே இல்லாமல் இன்றைய அரசியல் .இதைப் பற்றி மக்கள்தான் சிந்திக்க வேண்டும். மக்கள் தான் உண்மைகளை பகுத்தறிய வேண்டும்.

 நாட்டின் சட்டங்கள் மாறி இருந்தாலும், சமுதாயத்தின் வளர்ச்சி இன்னும் மாறாமலே இருக்கிறது. அரசியல் கட்சியினர் தான் தங்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். சாமானிய மக்களுடைய வாழ்க்கை போராட்டம் இன்னும் தொடர்கிறது. இதற்குள் இருக்கும் அரசியல் என்ன? என்பதை தான் மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்ற மிகப்பெரிய ஒரு சூட்சமம். இதில் பொதுநலமா? அல்லது சுயநலமா? என்று தெரியாமல் இருக்கும் மக்களிடம் இலவசம், ஓட்டுக்கு பணம், இது எக்காலத்திலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது.

 அதனால் 77ஆண்டுகள் சுதந்திரம் கொண்டாடியும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் பூர்த்தி செய்யவில்லை .மேலும் பத்திரிகைகள் வெளியிடுகின்ற செய்திகளை கூட அலட்சியம் காட்டுகிறது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி, உண்மைகளை எடுத்துச் சொல்லும் போது, இதுவரையில் அதற்கான நடவடிக்கை அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை, அரசாங்கமும் எடுக்கவில்லை.

அது எங்களைப் போன்ற இந்த பத்திரிகைக்கு உள்ள சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதா? அல்லது இந்த பத்திரிகைகள் எல்லாம் மதிக்கக்கூடாது என்ற ஒரு அலட்சியமா? எதற்காக? இதற்கான சலுகைகள் ,உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்? என்பது தான் இந்த சுதந்திர தினத்தில் சாமானிய பத்திரிகைகளின் உரிமை எங்கே? இதை அதிகாரிகள், அரசாங்கம் சரி செய்ய முடியாதா? இப்ப பிரச்சனை நீதிமன்றம் கொண்டு சென்றால்தான் தீர்வு கிடைக்குமா?

இதுதான் நம் சுதந்திரத்தின் பெருமை என்று கொண்டாடுவதா? தொடர்ந்து பல செய்திகள், கட்டுரைகள், கோரிக்கை மனுக்கள், ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகள்? எதற்கும் இன்று வரை தீர்வு இல்லை. இது சாமானிய பத்திரிகையாளர்களின் வேதனை. மேலும் ,சாமானிய மக்களும், ஏழைகளும் பாதிக்கப்படும் சுதந்திரத்தின் வலிமை இதுதானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *