நாங்குநேரியில் அரங்கேறிய பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்திற்காக சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இது
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி அரங்கேறிய பள்ளி மாணவர்கள் இடையிலான சாதி மோதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத ரீதியான பாகுபாடுகளை அகற்றும் வண்ணம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை யினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அளித்துள்ள மனுவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை படிவத்தில் சாதி மத பிரிவு விவரங்கள் பெறுவதை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றிலுமாக அகற்ற வேண்டும், இட ஒதுக்கீடு மற்றும் கல்வி சலுகைகள் ஆகியவை குடும்ப வருவாய் சான்று அடிப்படையில் வழங்க வேண்டும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கைகள் இந்தியன் என்ற ஒரு அடையாளத்தில் வழங்கப்படும் என்ற திட்டத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமும் பள்ளி கல்லூரிகளிலும் அரசு சார்பில் விரைவான சர்வே நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். தவிர,
தங்களின் இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உதவி புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.