கார்ப்பரேட் மீடியாக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உள்ள ரகசிய ஒப்பந்தமே சலுகை, விளம்பரங்கள் இரண்டு பேருக்குமே லாபம் இருக்கிறது.அதாவது, மாவட்ட ஆட்சியர் சொல்லி ,அதை பிஆர்ஓ செய்வது தான் இன்றைய பத்திரிகைகளுக்கு கொடுக்கின்ற விளம்பரங்கள், எந்தெந்த பத்திரிகைகளுக்கு கொடுங்கள் என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது.இந்த சலுகை, விளம்பரங்கள் மக்களுடைய வரிப் பணம். அது குறிப்பிட்டு சில பத்திரிகைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?இதுதான் இருவருக்குள் உள்ள அரசியல்.மேலும்,
அரசியல் பேச்சு போட்டி ,ஒருவரைப் பற்றி ஒருவர் தாக்கிக் கொள்ளும் அரசியல் விமர்சனங்கள் தேவையற்றது. இதை சொல்லியே அரசியலில் மக்கள் யாரை நம்புவது என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். மேலும், இதை செய்திகளாக வெளியிடுவதில் ஒரு அரசியல் கட்சிக்கு லாபம், ஒரு அரசியல் கட்சிக்கு வீழ்ச்சி, ஆனால், மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் எது? அதுதான் தேவை. இவர்களுடைய அரசியல் பேச்சு போட்டி, ஒருவரைப் பற்றி ஒருவர் தாக்கிக் கொள்ளும் அரசியல் விமர்சனங்கள் தேவையற்றது.மேலும்,
மக்களுக்கான முக்கிய செய்தி எதுவோ அல்லது முக்கிய உண்மை எதுவோ அதை வெளிப்படுத்துவது தான் பத்திரிகைகளின் முக்கிய கடமை. ஆனால், அதை தவிர்த்து பல பக்கங்களை செய்திகளாக வெளியிடுவது வீண் .அதை வாங்கி படிப்பதும் வீண். இன்றைய அரசியலில் ஊழல் செய்ததை பக்கங்களாக வெளியிட்டு வியாபாரம் செய்வதும் வீண். ஆனால், பணத்திற்காக, தன் சுய லாபங்களுக்காக, அலட்சியமாக ஊழல்வாதிகளை தேர்வு செய்தவர்கள் செய்த தவறுதான்,
இன்று நாட்டில் நீதிமன்றம் ,காவல்துறை, பத்திரிக்கை துறை, பொதுமக்கள் அவர்களைப் பேச மற்றும் எழுத வேண்டிய அவலங்கள், இதைத்தான் மக்களுக்கு உணர்த்த வேண்டும். இந்த ஊழல்வாதிகளின் பேச்சுக்களை, பேட்டிகளை, உத்தமர்களாக மக்களிடம் கொண்டு செல்லும் கார்ப்பரேட் மீடியாக்களின் பக்கங்கள், மக்களுக்கு வீணான ஒன்று. மக்களும் அதன் உண்மை தெரியாமல் படித்து ,இது நாள் வரை ஏமாறுவது தான் நாட்டின் அரசியல். இதிலிருந்து மக்கள் வெளிவர வேண்டும்.
மேலும், பத்திரிகை பெயர்களால் ஒன்றுமில்லை. அதில் வெளிவரும் கருத்துக்கள், செய்திகள், உண்மைகள் அதுதான் மக்களுக்கு தேவை. இருப்பினும் தற்போது, இந்த பெயர்களை சொல்லியே கார்ப்பரேட் மீடியா நிருபர்கள் பந்தா காட்டிக் கொண்டிருப்பார்கள். அந்த பந்தா மக்களுக்கு தேவையற்றது. அதனால், எந்த பயனும் இல்லை. மக்கள் உண்மைகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு ஆதரவு தர வேண்டும். மக்களுக்கான செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் .பொதுநலம் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்.
உண்மை பேசுபவர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். அரசியல் கட்சி என்பது எதற்கு? என்ற உண்மையை தெரியாமல், தன்னை பொதுநலவாதி போல் பேசிக்கொள்வதில் ஒரு ஆத்தமற்ற வேலை .அந்த வேலை தான் இன்றைய ஊழல்வாதிகளும், ஊர் சொத்து கொள்ளையடிப்பவர்களும், அதற்கு துணை போகும் அதிகாரிகளும், செய்கின்ற வேலை. இது தெரியாமல் மக்கள் வாக்களிப்பது வீண் .உங்களுடைய வாக்குரிமையை காசாக்கி, அவர்கள் பணம் பண்ணும் வேலைக்கு நீங்கள் ஏழையாக இருங்கள். நாங்கள் பணக்காரராக அதாவது கோடிகளை பார்க்கும் கோடீஸ்வரர்களாக வலம் வருகிறோம். இதுதான் இன்றைய அரசியல்.மேலும்,
மக்கள் சமூக ஊடகங்களில் வரும் கருத்துக்கள் எது உண்மை? எது பொய் என்று கூட தெரியவில்லை என்கிறார்கள். ஆனால், அனுபவசாலிகள் அதை புரிந்து கொள்ள முடியும். அதனால், அரசியலில் மக்களுக்கு உண்மைகளை உங்களுக்குப் புரிய வைப்பது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. இங்கே, திருடனும், கொள்ளையடிப்பவனும் உத்தமர்கள் வேஷம் போடுகிறார்கள். இதில் உண்மை எது பொய்? எது உண்மை கண்டுபிடிப்பது தான் மக்களின் முக்கிய இக்கட்டான இன்றைய அரசியல். அதனால், இந்த இக்கட்டான அரசியலை, வெளி வேஷத்தை நம்பி ஏமாறாதீர்கள். எளிமையும், உண்மையும், நேர்மையும், உழைப்பும் எங்கே உள்ளது என்பதை தேடுங்கள்? அதுதான் அரசியல். அதுதான் மக்களுக்கு தேவை. மேலும்,
இயற்கை கூட ஒரு கொடிய நோயான கொரோனாவை கொண்டு வந்து பல கோடி பேரை அள்ளி சென்றது. அதை பார்த்தும் திருந்தவில்லை. இப்போது கடுமையான வெயிலை கொடுத்து வாட்டி வதைக்கிறது. அதை பார்த்தும் புரியவில்லை. ஆனால், புரிந்தவர்கள் இது ஒரு விஷ வெயில் என்று சில மெக்கானிக்கல்கள் பேசுகிறார்கள். இந்த வெயிலில் சென்று வேலை செய்துவிட்டு வரும்போது உடல் மிகவும் சோர்வடைந்து விடுவதாக தெரிவிக்கிறார்கள். மேலும்,சில பத்திரிகை நண்பர்கள், இந்த வெயிலில் சென்று வரும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து உரிஞ்சு விடுவதாக தெரிவிக்கிறார்கள்.இப்படி இயற்கை பல விதமான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இதனால் மக்கள் உழைக்கும் திறன் குறைந்து விடுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் மது கடைகள் திறந்து வைத்து அரசு வருமானத்தை பார்த்தால், மக்களின் உழைப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இங்கே உழைப்பவர்கள் இருந்தால்தானே, ஊரை ஏமாற்றுபவர்கள் சொகுசாக வாழ முடியும். எல்லோருமே ஏமாற்றுபவர்களாக இருந்தால், யார் உழைப்பவர்கள்? என்ற போட்டி வந்து விடும்.
அப்போது உழைக்காமல் யாருமே உண்ண முடியாது. அதனால்தான், இன்று தமிழ்நாட்டில் உள்ள வேலையாட்கள் பற்றாக்குறையால், வடநாட்டில் உள்ளவர்கள் இங்கே குடியேறி இருக்கிறார்கள், என்பதை தமிழக மக்களும், தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும், இந்த உண்மையை புரிந்து கொள்வார்களா?