பலமுறை தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் அதிகாரம் சார்பில் மக்களின் கருத்துக்களை பல கட்டுரைகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் என்பது நாட்டு மக்களுக்கு ஒரு சம்பிரதாயத்திற்கு நடத்தப்படும் தேர்தல் அல்ல. நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு ,மக்களின் பொருளாதார வளர்ச்சி, அமைதி, நேர்மையான நிர்வாகம், இதன் அடிப்படையை கருத்தில் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ,அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.
தகுதியானவர்களை தேர்வு செய்வது மக்களாக இருந்தாலும், அந்த மக்களிடத்தில் பணத்தைக் கொடுத்து, ஊழல்வாதிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். இதனால், நேர்மையான நிர்வாகிகள் மக்களுக்கு கிடைக்கவில்லை. இந்த ஊழல்வாதிகளை களை எடுக்க இதுவரை தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தவிர, இந்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதை தடுக்க என்ன வழி, என்பதை இதுவரை சிந்திக்கவில்லை. அதை செயல்படுத்த எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
மேலும், சச்சின் டெண்டுல்கரை வைத்து, தேர்தல் பரப்புரையின் என்ன கருத்து இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட கருத்து மக்களிடம் சேர்க்க வேண்டும்? அதைக் கூ,ட இன்று வரை மக்களிடத்தில் தேர்தல் ஆணையம் செய்யாமல் இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும், மக்களின் வரிப்பணத்தை பல ஆயிரம் கோடிகளை வீணடிக்கும் போது ,இதற்கான சில கோடிகளை ஏன் செலவு செய்யக்கூடாது?
மேலும், இன்டர்நெட் வசதி இருந்த போதும், அதை எல்லாம் தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடாது? இதை வைத்து அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடாது? மேலும், வேட்பாளர்களின் செலவு கணக்கு அதிகமானால் ,அது பற்றிய நடவடிக்கை ஏன் கடுமையாக்க கூடாது? ஒவ்வொரு கூட்டத்திற்கும் அந்தந்த அரசியல் கட்சிகளின் செலவு கணக்குகளை அதில் ஏன் வரவு வைக்க கூடாது?
மேலும், வேட்பாளர்கள் கொடுக்கின்ற சொத்துக்கணக்கு தவறாக இருந்தால், அவர்களை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது? இப்படிப்பட்ட பல விதிமுறைகள் தேர்தல் ஆணையம் கடுமையான விதிமுறைகளை வகுத்து செயல்படாமல் பேருக்கு அல்லது கணக்கிற்கு அல்லது சம்பிரதாயத்திற்கு தேர்தல் நடத்துவது வீண்.