கடந்த காலங்களில் மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும், தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் அல்லது மத்திய அரசின் கம்பெனிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் வேலை செய்யவில்லை. ஆனால், தற்போது தான் ரயில்வே மற்றும் மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வட இந்தியர்களை முழுக்க முழுக்க பணியமத்தியுள்ளது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அடுத்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி செய்த தவறு ,யார் வேண்டுமானாலும் இந்த மாநிலத்தில் அரசு பணிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்ற அரசாணை போட்டதாக தெரிவிக்கின்றனர். இதுவும் ஒரு தவறான ஒன்று.
மேலும், திமுக ஆட்சியில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் போன்ற பொறுப்புகளில் வட இந்தியர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அது கூட, இங்க தமிழ்நாட்டில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் களுக்கு முக்கியத்துவம் தராமல், வடநாட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? என்றால், ஒருவர் கூட தமிழக மக்களை பற்றி சிந்திக்கவில்லை.பிஜேபி இங்கே ஆட்சிக்கு வருவதற்கு முன்னே, வட இந்தியர்களை அரசு வேலைவாய்ப்பில் ஈடுபடுத்தி இருப்பது வேதனை. மேலும்,
இதை வட இந்தியர்கள் தமிழக மக்களை அரசு பொறுப்பில் அமர்த்திக் கொள்ள ஏற்றுக் கொள்வார்களா? அதனால், மாநிலத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, சுயாட்சி கொள்கை, மாநில கொள்கை இவர்களுடைய எல்லா கொள்கையும், சுயநல கொள்கையாக தான் இருக்கிறது .
அதனால், பொது நலக் கொள்கைகளில் பேசுகின்ற பிஜேபி மற்றும் தமிழக நலனில் அக்கறை காட்டும் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை, இதைப் பற்றி கருத்தில் கொண்டு பேச வேண்டும். இதற்கு என்ன நடவடிக்கை தேவை? என்பதை பிரதமர் மோடி இடமே இப்ப பிரச்சனையை வலியுறுத்தி சொல்ல வேண்டும். மேலும் ,தமிழ்நாட்டில் தமிழக மக்கள் நலனில் அக்கறை எடுத்து மத்திய அரசு பணிகளில் தமிழக மக்களுக்கு தான் முக்கியத்துவம் வேலைவாய்ப்பில் கொடுக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் முக்கிய கோரிக்கை.
மேலும், திமுக ,அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டு வந்த இலவச திட்டங்கள், அந்த இலவச திட்டங்களில் ஊழல்கள், இலவசத்தின் மூலம் தமிழக மக்களுக்கு அதிக வரி விதிப்பு, மக்களின் அன்றாட தேவைகளின் பொருட்கள் விலை உயர்வு, இது எல்லாம் தேவையில்லை. அதனால், இனி
தமிழக மக்களுக்கு இலவச திட்டங்கள் வேண்டாம் .இலவச அறிவிப்புக்கள் வேண்டாம். ஆனால், வரி குறைப்பு செய்யுங்கள், வேலை வாய்ப்பை பெருக்குங்கள். தமிழகத்தின் கடனை அடையுங்கள் இல்லையென்றால் பிற்காலத்தில் தமிழகம் திவாலாகும்.
மேலும்,
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அதிமுக, திமுக ,பிஜேபி போன்ற எந்த கட்சிகளாக இருந்தாலும் மக்களுக்காக ஆட்சி நடத்தினால், ஊழல் இருக்காது, ரவுடியிசம் இருக்காது. ஆனால், தங்களுடைய சொந்த கட்சிகளுக்கும், தங்களுக்கும் ஆட்சி நடத்தினால், ஊழல் இருக்கும், ரவுடியிசம் இருக்கும் .கடந்த காலங்களில் இருந்த அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மக்களுக்காக ஆட்சி நடத்தியது. அப்போது ஊழல் கிடையாது, ரவுடியிசம் கிடையாது.
எப்போது அரசியல் தங்கள் கட்சியினருக்காகவும், தங்களுக்காகவும் மாற்றினார்களோ,அப்போதுதான் தமிழ்நாட்டில் ஊழல் ஆரம்பித்தது, ரவுடியிசம் ஆரம்பித்தது. அப்பொழுதுதான் இலவசங்கள் ஆரம்பித்தது அது அதுவரையில் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சிதான். இதை பற்றி அரசியலில் இருப்பவர்கள் பொதுமக்கள் சிந்திப்பார்களா?