மத்திய அரசின் ஒரே நாடு ,ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன .இதற்கு காரணம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தால், தமிழகம் போன்று சில மாநிலங்களில் ஐந்தாண்டு காலம் முடிவதற்கு முன்பே இந்த தேர்தல் வந்து விடுகிறது. இது ஒருபுறம், மற்றொருபுறம் ,ஒரு முக்கியமான அரசியல்!
அதாவது மாநிலங்களுக்கும், மத்தியில் ஆளும் கட்சிக்கும் இடையே ஒரு பிரிவினவாத அரசியல், மக்களிடையே செய்ய முடியாது. பெரும்பாலான மக்களுக்கு இந்த அரசியல் பற்றி தெரியாமல் இருக்கிறது. அதுதான் இவர்களுக்கு உள்ள ஒரு சாதகம் .படிப்பறிவு இல்லாத மக்கள், அரசியலைப் பற்றி அனுபவம் இல்லாதவர்கள், ஆனால், இவர்கள் எல்லாம் அரசியல் கட்சியில் சேர்ந்து, இன்று அடியாள் வேலை பார்ப்பதற்கும் ,எடுப்பு வேலை பார்ப்பதற்கும், அந்த, அந்த பகுதிகளில் மக்களிடம் தான், ஒரு பெரிய அரசியல் கட்சி புள்ளி என்று காண்பித்துக் கொள்வதற்கும் ,அரசியலில் பதவி, பொறுப்புகளை போட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால், அதற்கான தகுதி தான் அவர்களிடம் இருக்கிறதா ?என்று தெரியவில்லை. அதாவது ,இன்றைய சில பத்திரிகைகளில் உள்ள நிருபர்கள் பத்திரிக்கை அடையாள அட்டை தான், நிருபர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்தி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை .அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய வேலையும் இல்லை, ஆக கூடி உழைக்காமல் நிருபராக வேண்டும்.
அதுபோல்தான், இன்றைய அரசியல் நிலைமை மக்களுக்காக உழைக்காமல் ரவுடிசம் கட்சி பெயர் சொல்லி, பந்தா காட்டிக் கொண்டு, கோடிகளைப் பார்க்க வேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் அரசியல் தெரியாத முட்டாள்களாக இருக்க வேண்டும்.அதே போல தான் ,அவர்களும் ,கட்சி என்பது மக்களுக்கு சமூகப் பணியாற்றுவதற்கு பதிலாக ,அந்தக் கட்சியின் மூலம் எவ்வளவு வருமானம் வரும்? எந்தெந்த வழிகளில் வருமானத்தை பெற முடியும்? உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்கு வந்தால் எத்தனை கோடி சம்பாதிக்கலாம்? இப்படிப்பட்ட கனவுகளில் தான், இன்றைய அரசியல். மேலும்,
இவர்கள் ஒயிட் அண்ட் ஒயிட்டில் பந்தா காட்டும் போது பார்க்க வேண்டும், மேடைப் பேச்சுகளில் பேசும்போது பார்க்க வேண்டும், கட்சி தலைமையை புகழ்ந்து கொண்டு, எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்து கொண்டு, மக்களை முட்டாளாக்கி கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட அரசியல் நாட்டுக்கு தேவையில்லாத ஒன்று. மக்கள் அரசியலை படிக்க வேண்டும். இல்லையென்றால், தொடர்ந்து உங்களை அரசியல் அடிமை ஆக்கிக் கொண்டிருப்பார்கள்.
மேலும், ஒரே நாடு ,ஒரே தேர்தல் வைக்கும்போது தேர்தல் செலவு ஒரு தடவை மட்டுமே நாடு பூரா நடத்தப்படுகிறது. ஆனால், அதே தேர்தல் இரண்டு தடவை நடத்தும் போது, இரு தடவை அந்த செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தேர்தல் ஆணையம் உள்ளது .அதனால், இது ஒரு வகையில் தேர்தல் மூலம் ஏற்படும் செலவு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களுக்கு கொடுக்க முடியும்.
மேலும், தேர்தல் செலவு குறைந்தால் நல்லது. அதேசமயம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறைக்கப்படுகிறது. இந்த திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்று.