தமிழ்நாட்டின் அரசியல் மிக மிக கேவலமாக இருக்க மக்கள் ஏமாளிகளா? அல்லது அவர்கள் திறமைசாலிகளா?

அரசியல் இந்தியா சமூகம் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டின் அரசியல் ஆளும் கட்சியின் ஊழல்கள், எதிர்க்கட்சியின் ஊழல், தவிர,நாம் தமிழர் கட்சி சீமானின் காதல் விவகாரங்கள் அனைத்துமே, சந்தி சிரிக்கும் நிலையில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட அரசியலில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை எப்படி மக்களுக்கு கொடுக்க முடியும்?

 அமைச்சர்களே ஊழலில் இருந்து எங்களை காப்பாற்ற உங்கள் திறமையை பயன்படுத்துங்கள். இதை சொல்வதற்கு அந்த அமைச்சருக்கு துளி கூட வெட்கம் இல்லையா ?

அமைச்சருக்கான தகுதி ,கவுரவம், இவை எல்லாம் இல்லாத ஒரு நபரிடம் (கே. என். நேரு) கொடுக்கும் போது ,அந்த பதவிக்கும், மரியாதை இல்லை. கொடுத்த மக்களுக்கும் மரியாதை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 திமுக ஆட்சியின் நாண்கு ஆண்டு காலத்தில் மக்கள் சந்தோஷத்துடன் இருக்கிறார்களா? இல்லை இவர்கள்தான் சந்தோஷத்தில் இருக்கிறார்களா?இவர்களும் இல்லை. மக்களும் இல்லை. அந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள். வரி விதிப்பு, எல்லாவற்றையும் இரண்டு மடங்கு அதிகமாகவே ஏற்றி விட்டார்கள். இது எல்லாம் மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் அதிகப்படியான வரி விதிப்பு.

இந்த வரி விதிப்புக்கள் சாமானிய மக்கள் முதல் வருமான வரி செலுத்தும் மக்கள் வரை வேதனையில் தான் இருக்கிறார்கள். சுயநலத்திற்காக ஆட்சியும், அதிகாரமும் இருந்தால், அது, ஆட்சி கொடுங்கோன்மை ஆட்சியாக தான் இருக்கும். ஆட்சியாளர்கள் மீடியாவில் அரசியல் வசனம் பேசுவதை நிறுத்தி,  பொதுநலத்தில் ஈடுபட முடியுமா ?

அது ஒரு காலம் முடியாது .இந்த பொது நலம் என்பது அவரவர் ரத்தத்தில், மனதில் ஊறி வரவேண்டிய ஒன்று. அது வாயிலே பேசிவிட்டு போவதல்ல, அதற்காக கடுமையான போராட்டங்களையும், உழைப்பையும் ஒரு மனிதன் தன்னை தியாகத்தால் அர்ப்பணிக்க வேண்டும் .அப்போதுதான் அது சாத்தியமாகும்/ வெறும் சினிமா டயலாக், அரசியல் டயலாக் பேசிக் கொண்டிருந்தால்  மக்கள் தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைப்பது தவறு.

 அதனால், திமுக ஆட்சி தேவையற்ற பேச்சுக்களுக்கும், பிரச்சனைகளுக்கும் ஆளாகி இருக்கிறது. தற்போது கூட உதயநிதி சனாதன தர்மத்தை அழித்தே தீருவோம் என்று  சொல்கிறார். சனாதன தர்மம் மக்களின் வாழ்வியலோடு கலந்தது. அதை மக்களிடத்தில் இருந்து பிரிக்க முடியாது. அழிக்கவும் முடியாது. அது பாரம்பரியமாக இருந்து வருகின்ற கலாச்சாரம் .இதை அழிக்க நினைத்தால், திமுக தன் அழிவை தானே தேடிக் கொள்கிறது.

 அதனால், சனாதான தர்மம் என்பது இந்துக்களின் வாழ்வியலோடு கலந்தது. இந்த தர்மம் யுகங்களாக இருந்து வருகிறது. இதன் அர்த்தம் தெரியாமல் பேசிவிட்ட உதயநிதி, சனாதனத்தை பற்றி நன்கு தெரிந்து கொள்வது நல்லது. அதேபோல், திருமாவளவன் இதை எதிர்ப்பதற்கு முன் இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது. மேலும்,

பிஜேபி சமாதானம் தர்மத்தை எதிர்ப்பவர்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்து டெல்லியில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர பிஜேபியின் வழக்கறிஞர்  அணியை சேர்ந்த அசுத்தாமன் உதயநிதி மீது புகார் அளித்து, வழக்கு தொடர (ஆர் .என். ரவி) கவர்னரிடம் மனு செய்துள்ளார். கவர்னர் ஒப்புதல் இன்றி,  அவர் மீது வழக்கு தொடர முடியாது. காரணம் அவர் அமைச்சராக இருந்து வருகிறார். எனவே ,இனி சனாதன தர்மத்தை வைத்து அரசியல் செய்வதை எதிர் கட்சிகள் நிறுத்திக் கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *