திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியாளராக இருந்து வரும் சாரு ஸ்ரீ, ஒரு சாமானிய டீக்கடைக்காரர் மீது அதிகாரத்தை பயன்படுத்தி இருப்பது வேதனையானது.
இது திருவாரூர் டீக்கடைக்காரர் செல்வகணபதிக்கும், மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீக்கும் இடையே அப்படி என்ன ஒரு பகை? அல்லது ஒரு வெறுப்பு ?இது பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? திருவாரூர் விளமல் பகுதி ஏ ஆர் கிரவுண்ட் அருகில் கடந்த ஏழு ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருபவர் செல்வகணபதி.
சில நாட்களுக்கு முன்பு செல்வ கணபதியை பார்த்து கடைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் காரை நிறுத்தி ,கடைக்காரர் செல்வபணபதியிடம் நீ போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைத்திருக்கிறாய் உடனே காலி பண்ணு என்று அடாவடித்தனமாக சத்தம் போட்டு இருக்கிறாராம். கடைக்காரர் எதுவும் பேசாமல் நின்று இருக்கிறார்.
மேலும், சம்பவம் நடந்த மறுநாள் இரவு சுமார் 8 மணி அளவில் முன்னறிவிப்பு இல்லாமல் ,கடைக்கு வந்த துணை தாசில்தார், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சிலரை கட்டாயப்படுத்தி அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, உள்ளே இருந்த சாமான்கள் கூட அந்த கடையின் உரிமையாளர் செல்வகணபதி எடுக்க விடாமல், கடைக்கு சீல் வைத்து விட்டனர்.
கடைக்காரர் செல்வகணபதி ஏன் கடைக்கு சீல் வைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, ஆட்சியர் உத்தரவு .அதனால், சீல் வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். உடனே நீங்கள் சென்று ஆட்சியரை பாருங்கள் என்று மிரட்டல் ஆகவும் தெரிவித்துள்ளனர். இது பற்றி செல்வகணபதி இடம் போனில் தொடர்பு கொண்ட போது, போட்ட பாத்திரங்கள், உணவு பொருட்கள் அப்படியே இருந்துள்ளன.
மேலும், நான் கடந்த ஏழு ஆண்டுகளாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு எந்தவித போக்குவரத்து இடையூறும் இல்லாமல், டீக்கடை நடத்தி வந்துள்ளேன். என்ன காரணம் என்று தெரியவில்லை? மேலும், என் மீது என்ன காழ்ப்புணர்ச்சியோ தெரியவில்லை? ஆனால், இது என் மனதை வேதனைப்படுத்துவதோடு, பழிவாங்கும் விதமாகவே மாவட்ட ஆட்சியர் செயல்பட்டார் .
தவிர, சமூகவிரோதிகள் யாராவது கடையில் உள்ள சிலிண்டர்கள் மீது சிகரெட் அல்லது தீப்பிடிக்கும் பொருட்களை போட்டுவிட்டால் சிலிண்டர் வெடித்து தீ விபத்தும் ஏற்படுத்தலாம். இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது .அதற்கு மாவட்ட ஆட்சியரே ஒரு காரணமாக இருக்கலாமா? மேலும்
ஒரு மாவட்டத்தின் நிர்வாக அதிகாரி எந்த நடவடிக்கை எடுத்தாலும் ,முறையாக நோட்டீஸ் விட வேண்டும். அதையும் மீறி நான் காலி செய்யவில்லை என்றால், என்னுடைய கடைக்கு சீல் வைக்கலாம். அந்த சீல் வைக்கும் போது கூட ,என் கடையில் இருக்கின்ற பொருட்களை எடுப்பதற்கு கால அவகாசம் தர வேண்டும், ஆனால், எதுவுமே முறையாக இல்லாமல், அரசியல் கட்சிகளின் அடியாட்கள் போல செயல்பட வேண்டிய காரணம் என்ன?
மேலும் ,ஒரு மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் சாமானிய என்னை போன்ற டீக்கடைக்காரன் மீது காட்டுவது சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர் கட்டி இருக்கிறது என்பது ஆளும் திமுக ஆட்சியின் வேதனை என்கிறார் டீக்கடைக்காரர் செல்வகணபதி .