சனாதனதர்மம் ஒழிப்பது அரசியலுக்காக பேசும் வார்த்தை அல்ல. சனாதனம் என்பது ஜாதியை ஒழிப்பது அல்லது ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பது அல்லது பிராமணர்களுக்கு எதிரான கொள்கையை அரசியலாக்குவது, இது எல்லாம் சனாதன தர்மம் அல்ல.
சனாதன தர்மத்திற்கு அர்த்தம் தெரியாமல் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்ப்பதால், ஆட்சியே போனாலும் கவலையில்லை. சனாதனத்தை எதிர்க்க முடியாது. ஒழிக்க முடியாது. ஆனால், பேசிவிட்டு தான் போக முடியும். அதுதான் உண்மை.
சனாதனதர்மம் என்பது ஜாதி அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வைத்து சனாதனத்தை ஒழித்து விட முடியாது. இந்த ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றாலும், மனித வாழ்க்கையில் ஒற்றுமை இருக்காது. உதாரணத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இல்லை என்றால் ,அல்லது இவரே திமுகவின் அதிகார முக்கிய புள்ளியாக இல்லை என்றால், இவர் சொல்வதை யார் கேட்பார்கள்? அப்போது இந்த ஏற்றத்தாழ்வு எங்கிருந்து வருகிறது? மனித வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு வாழ்வியலோடு கலந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக பேசும் விஷயம் அல்ல. இதை யோசித்துப் பேசுகின்ற விஷயம். நீங்கள் சொல்லும் கருத்துக்கும், தெய்வீகத்திற்கும் சம்பந்தம் இல்லாத ஒன்று .
மேலும், கடவுள் மறுப்பாளர்கள் இதைப் பற்றி பேசுவது முட்டாள்களின் வாதமாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஒரு பக்கம் சனாதனத்தை பற்றி மக்களிடம் இழிவாக பேசிக்கொண்டு, மற்றொரு பக்கம் கோயிலுக்கு சென்று சாமியை கும்பிட்டுக் கொண்டு, தன்னை பக்திமானாகவும் காட்டிக் கொண்டு, அரசியல் நாடகம் போடுவதை அறிவார்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேலும், சனாதனம் என்பது வாழ்க்கை நெறி ,தெய்வீக நெறி ,சமயநெறி, மூதாதையர்கள் சொன்ன பழக்கவழக்கங்கள் நெறி ,இதையெல்லாம் விட இந்து மத தர்மத்தின் நெறி ,ஒழுக்கம், ஜீவகாருண்யம் கடைப்பிடித்தல், இவை எல்லாம் வாழ்வியலோடு கலந்த வாழ்க்கை நெறி, இதையெல்லாம் துளி கூட தெரியாத உதயநிதி, சனாதனத்தை பற்றி எதிர்ப்பதாக, அழிப்பதாக பேசுவது முட்டாள்தனம், கடவுளின் நம்பிக்கை சனாதனம், கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒருவர், எப்படி சனாதனத்தை பற்றி பேச முடியும்?
மேலும் சனாதனத்தை பற்றி உதயநிதி பேசியது உலக அளவில் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மலேசியா தமிழர்கள் மற்றும் ஆன்மீக நெறியாளர்கள் மலேசியா நாட்டுக்கு வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்கிறார்கள். இதுபோன்று உலகில் பல நாட்டு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.மேலும்,
இதற்கு அர்த்தம் தெரியாமல் ஒரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் போன்று திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டுகள் இதை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கும், சனாதனத்திற்கும் சம்பந்தமில்லை. அரசியல் என்பது மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், திட்டங்கள், வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற நிர்வாகம், சமூகத்தின் அமைதி, இதுதான் தேவை.
ஆனால், சனாதனம் என்பது ஆன்மீக வாழ்வியலோடு கலந்த ஒன்று. இன்று பக்தி என்பது மக்களிடம் வேஷம் ஆகிவிட்டது .அதனால், சனாதனத்தை ஒழித்து விடுவோம் என்று உதயநிதி பேசுவது அரசியலுக்காக அல்லது அதிகாரம் இருப்பதாலோ பேசி அதை ஒழிக்க முடியாது. இதனால் உங்களுடைய அரசியல் வேரோடு அழியும் என்பதை வருங்காலத்தில் அறிந்து கொள்வீர்கள் .
மேலும், கடவுள் இல்லை, கடவுள் என்பது ஒரு மூடநம்பிக்கை, என்று பேசி வளர்ந்த கட்சி தான் தி.க ,திமுக. இதனுடைய அடிப்படை சித்தாந்தம் தீண்டாமை ஒழிப்பு, ஜாதிய பாகுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் இதைப் பற்றி பல வகையில் மக்களிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் பேசி வளர்ந்த இந்த இயக்கம் ,இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.ஆனால்,
அதே கடவுள் இருக்கிறார் என்று பிஜேபி யின் அரசியல், ஆன்மீக சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் நம்பிக்கை வைத்து, இந்த கட்சிக்கு எந்த சனாதனத்தை எதிர்ப்போம் என்கிறார்களோ, அதே சனாதனத்தை வைத்து தான் பிஜேபி தமிழ்நாட்டில் வருங்காலத்தில் ஆட்சி அமைக்க போகிறது. அப்போது சனாதனத்தின் உண்மையை திமுக, தி.க புரிந்து கொள்வார்கள். எல்லாம் காலத்தின் கட்டாயத்தில், காலமே இதற்கு பதில் சொல்லும்.