சமூக அக்கறையில்லாமல் செயல்படும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுப்பாரா ? தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின்- திருவாரூர் மாவட்ட மக்கள்.

அரசியல் சமூகம் செய்திகள் தமிழ்நாடு தலைப்பு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திருவாரூர் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக இருந்து வரும் சுரேஷ்குமார் சமூக அக்கறை இன்றி செயல்படுவதால், இவர் வந்த காலத்திலிருந்து இது நாள் வரை, இந்த மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அதிகரித்த வண்ணம் உள்ளது என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

 இது தவிர, ரவுடி கேங்குகளில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போட்டி. அதிலும், சாதிய தொடர்பான ரவுடிகள், அரசியல் கட்சி ரவுடிகள், இப்படி போட்டி, போட்டு மக்களுக்கு பிரச்சனைகளும், வெறுப்புக்களும், ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், காவல்துறை என்றால் மக்கள் இடத்தில் ஒரு பாதுகாப்பு, தைரியம் ஏற்படுத்த வேண்டும். அது சுத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 இதற்கு காரணம், காவல்துறையின் கரப்ஷன் என்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் துளி கூட கவலைப்படாத மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், இவரது அலுவலகத்தில் முதன்மையான வழியில் பொதுமக்கள் யாரும் இவரைப் பார்த்து மனு அளிக்க முடியாது. மாறாக பொதுமக்களை பக்கவாட்டு வழியாக தான் மனு அளிக்கவோ அல்லது சந்திக்கவோ அனுமதிக்கப்படுகிறார்கள். இது என்ன அதிகாரத்தின் உச்சமா? இது இவருடைய செயல்பாடுகளில், பொது நலனில் அக்கறையின்மையை எடுத்துக்காட்டுகிறது. மேலும், பொதுமக்கள் இவரை சந்தித்து மனுக்களை அளிப்பதற்கு கூட ஒரு பயத்தை உருவாக்குகிறது.

இப்படி இருந்தால் யார் ,வந்து இவரிடம் தங்களுடைய குறைகளை சொல்லுவார்கள்?  அல்லது மனுக்களை கொடுப்பார்கள்?  ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரி, பொதுமக்களிடம் எளிமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், தங்களுடைய குறைகளை பொதுமக்கள் தைரியமாக வந்து எடுத்துச் சொல்லி மனு அளிப்பார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மாவட்ட மக்களுக்கு  புதியதாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

 காரணம் இதற்கு முன் இந்த மாவட்டத்திற்கு வந்து பணியாற்றிய மாவட்ட கண்காணிப்பாளர்கள் யாரும், இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பதை தெரிவிக்கிறார்கள். அதனால், இப் பிரச்சனை குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மீது முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திருவாரூர் மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *