சீமான் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். பொதுவெளியில் ஊடகங்களில் பேசும்போது, ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கிறார். ஒருவரைப் பற்றி ஊழல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கும் போது இவர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கருத்து . சீமானுக்கு பணம் எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது ?அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரண வேலை அல்ல.
மேலும், விஜயலட்சுமி, சீமான் விஷயம் அவர்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயம் என்றாலும், இந்த விஷயம் பொதுவெளிக்கு வந்துவிட்டது. இங்கே, சீமானும் ,விஜயலட்சுமியும் மானசீகமாக வாழ்ந்தார்கவாழ்ந்தார்களா? அல்லது கணவன் மனைவியாக வாழ்ந்தார்கவாழ்ந்தார்களா? அல்லது மறைமுகமாக வாழ்ந்தார்களா ? இவர்கள் எப்படி இருவரும் வாழ்ந்திருந்தாலும், விஜயலட்சுமி காவல்துறையில் புகார் கொடுக்கும் போது அல்லது நீதிமன்றத்தில் இவரை பற்றி புகார் கொடுக்கும் போது, ஒரு பெண் நடிகையாக இருந்தாலும், எல்லாஇடத்திலும், நடிக்க முடியாது. அங்கே எவ்வளவு கேள்வி கேட்பார்கள்? அந்த கேள்விக்கெல்லாம் ,ஏதோ ஒரு பொய்யை சொல்ல முடியாது .இது ஒரு முக்கியமான விசாரணையின் அடிப்படை ஆதாரம் .
தவிர, சீமான் பேசிக் கொண்டிருப்பது அரசியல் தலைவனாக தன்னை காட்டிக் கொண்டு ,மக்களுக்கு தன்னை ஒரு போராளியாக கற்பனை செய்து கொண்டு, பேசி வரும் வார்த்தைகள் தானே ஒழிய, வேறொன்றுமில்லை. இவர் பேசியதை தவிர, வேற என்ன செய்துவிட்டார்? வாயிலே திட்டி விட்டு, ஆளும் கட்சிகளை விமர்சனம் செய்துவிட்டு, போய்க் கொண்டிருப்பது தான் சீமானின் அரசியல். இதுவல்ல அரசியல்.
அரசியல் என்றால் மக்களின் பிரச்சினைகளுகாக நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். ஏதோ நாம் பேசினால் ஒரு கூட்டம் கைதட்டி விசில் அடித்துக் கொண்டிருக்கிறது. நமக்காக ஒரு கூட்டம் நம்மை பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு அரசியல் என்றால் என்ன? என்று ஆ, இ,கூட தெரியாது .கூட்டம்,கூட்டிக்கொண்டு, பொது மேடைகளிலும், ஊடகங்களிலும் பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம், இவர்களை வைத்து அரசியல் தலைவன் என்று பேசிக் கொள்வதில் அர்த்தமில்லை.
ஒரு அரசியல் தலைவன் என்றால் அதற்குரிய தகுதி, திறமை, பணிவு, அடக்கம், செயல்பாடு, ஒழுக்கம், நேர்மை ,எல்லாவற்றிற்கும் மேலாக தலைமை பண்பு எல்லாமே இருக்க வேண்டும். இவையெல்லாம் சீமானிடம் இருக்கிறதா? ஆனால், பேசுவது மட்டுமே நாடக அரசியலாக சீமானிடம் இருக்கிறது. சீமானும், விஜயலட்சுமியும் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும், வாழவில்லை என்றாலும், அந்த பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். உன்னால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இது உண்மை.
இப்படி உன்னால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதுவும், இலங்கை தமிழ் பெண் அதை ஏமாற்றி அனுபவித்துவிட்டு, கை கழுவி விட்டால் அவள் எங்கே போவாள்? ஒரு ஆதரவற்ற பெண்ணுக்கு ஆதரவளிப்பது தான், அதுவும் அரசியலில் ஒரு கட்சியை நிறுவிய தலைவனுக்கு முக்கியமானது. கைவிடுவது ஒரு கட்சியின் நிறுவனருக்கு அழகு அல்ல.மேலும்,
சீமான் சொல்வது போல நான் லட்சியங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது உண்மையாக இருந்தால், நிச்சயம் விஜயலட்சுமிக்கு பணமும், பொருளும் கொடுத்து அதை செட்டில்மெண்ட் செய்திருக்க வேண்டும். இல்லை ,அதை பொதுவெளியில் வராத அளவிற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்திருக்க வேண்டும். பேசுவது உபதேசம், செய்வது உல்லாசம், இதுதான் சீமானின் கொள்கை .
மேலும், சீமான் கஷ்டப்பட்ட காலங்களில் சீமானுக்கு கைகொடுத்து உதவியிருக்கிறார் விஜயலட்சுமி. அந்த நன்றி விசுவாசம் கூட இல்லை என்கிறார்கள் சீமானுடன் இருந்தவர்கள். இது ஒரு கட்சித் தலைவனுக்கு அழகு அல்ல. விஜயலட்சுமிக்கு மனிதாபிமான முறையிமுறையிலாவது உதவி செய்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை .
இது வெத்து வெட்டு வேலைகள் அல்ல. வெத்து வெட்டுகள் தான் ,இப்போது ஒன்று பேசும், மறுநாள் ஒன்று பேசும், எப்படியும் பேசும், மனசாட்சி இல்லாமல் பேசுவது ஒரு கட்சித் தலைவனுக்கு அழகு அல்ல. இதை எல்லாம் சீமான் கடைபிடிக்காமல், ஏதோ ஒரு குருட்டு அதிஷ்டத்தில் நாம் தமிழர் கட்சி என்ற ஒரு கட்சியை ஏற்படுத்தி விட்டார்.
அதில் தமிழ் தேசியம் என்ற ஒரு கொள்கையை பேசிக்கொண்டு வந்திருக்கிறார். வந்தவர்கள் எத்தனை பேர் ,அதில் கொள்கை பிடிப்பாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது .
சீமானை போன்று லட்சியங்களுக்காக வந்தவர்களா? அல்லது லட்சத்தை அடைய வந்தவர்களா? என்பதும் தெரியாது. சீமானே கொள்கையுடன் வாழாத போது, இந்த கூட்டம் எப்படி கொள்கையுடன் வாழும்…? ஆனால் ,ஒன்று மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .தமிழ்நாட்டில் அது என்னவென்றால்? கொள்கையுடன் வாழ்ந்த தலைவர்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுவே அரசியல் மூலதனமாக,அவர்களுடைய கொள்கையை பேசி, மக்களை முட்டாளாக்கி ,அரசியலில் பணம் பண்ணும் வேலை தான் பார்க்கிறார்கள். இந்த சூட்சும அரசியல் தான் தமிழ்நாட்டில், கொள்கையுடன் வாழ்ந்த தலைவர்களைப் பற்றி பேசி, பேசி, அரசியல் தெரியாதவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு போலித்தனமான அரசியல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இது ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு. இந்த விஷயத்தில் பெண்கள் சிந்திப்பார்கள். இது ,சீமானின் அரசியல் பொது வாழ்க்கைக்கு பின்னடைவு தான். தவிர,பெண்கள் ஓட்டு இனி சீமானுக்கு விழுமா? என்பதும் சந்தேகம். ஏனென்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு பெண். அதனால், பெண்கள் நிச்சயம் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை ஆதரிக்க மாட்டார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
அதனால், தமிழக அரசு பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி விஷயத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, தமிழக அரசின் கடமையாகும்.