மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் போட்டி போட்டாலும், வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் அடைய முடியுமா ?
விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க ,அதிகரிக்க மனித வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் குறைந்து கொண்டு தான் வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு, விஞ்ஞான வளர்ச்சி இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித வாழ்க்கையின் நிம்மதி ,சந்தோஷம் குறைந்துவிட்டது .உதாரணத்திற்கு செல்போன் வந்ததிலிருந்து, உறவுகளிடம் பேசுவதை விட ,செல்போனில் தான் மனித வாழ்க்கை சஞ்சரிக்கிறது. நண்பர்களிடம் பேசுவதை விட, செல்போனில் தான் மனித வாழ்க்கை செலவழித்து வருகிறது .
இப்போது செல்போனுக்கு அடுத்தது ரோபோ வந்துவிட்டது. ரோபோ வந்துவிட்டால், மனித உறவுகளின் அஸ்தி வாரமே ஆட்டம் கண்டுவிடும். வாழ்க்கை என்பது ஒரு நம்பிக்கை .அந்த நம்பிக்கையில் தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் .அந்த நம்பிக்கையில் தான் பாசம், நட்பு ,அன்பு, உறவு எல்லாவற்றையும் கேலிக் கூத்தாக்கும் செயலாக ரோபோ வந்துவிட்டால் ,செல்போனை வைத்துக் கொண்டிருப்பது போல, ரோபோவை அவரவர் வைத்துக் கொண்டிருந்தால், ரோபோவிடம் தான் மனிதன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் நிலைமை உருவாகிவிடும்.
அதனால் ,ரோபோவை மனித வாழ்க்கையில் பயன்படுத்துவது, வாழ்க்கையின் பின் விளைவு மோசமானதாக இருக்கும். மேலும், இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் பருந்துர் என்ற கிராமத்தில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பகுதி உள்ள இயற்கையை அழித்துவிட்டு, விமான நிலையம் அமைப்பது அரசாங்கத்திற்கு வருமானம் வரும் .பல கோடிகள் புழங்கும் .மக்களுக்கு அந்த நிலத்திற்கான மதிப்பீட்டில் இரண்டு மடங்கு அதிகமாக, அரசு விலை வைத்தாலும், இயற்கைக்கு விலை வைக்க முடியுமா? மனித வாழ்க்கையின் நிம்மதி, சந்தோஷத்திற்கு விலை வைக்க முடியுமா? அங்குள்ள ஆடு ,மாடுகள் வைத்து வாழ்க்கை வாழுகின்ற ஒரு நிம்மதி, சந்தோஷம் ,அந்த மக்களுக்கு பணமும், வேறு இடங்களையும் தேர்வு செய்து கொடுத்தால் ,அந்த சந்தோஷமும், நிம்மதியும் அவர்களுக்கு வருமா?
இது தவிர ,அவர்களோடு உறவுகள் வாழ்ந்த வாழ்க்கையின் சந்தோஷம், நிம்மதி, கலாச்சாரம் கோயில் வழிபாடு, இது எல்லாம் இந்த அரசாங்கத்தால் திருப்பித் தர முடியுமா? ஒரு மனிதன் ஆடம்பரமான வாழ்க்கையில் எந்த நிம்மதியும் ,சந்தோஷமும் இல்லாத ஒன்று, இந்த எளிமையான வாழ்க்கையில் அடைகின்ற நிம்மதி, சந்தோஷம் அதில் இல்லை .
ஒரு விவசாயி, விவசாயத்தை நம்பி வாழுகின்ற மக்கள், எந்தவிதமான ஆடம்பரம் இன்றி வாழ்க்கை ஒரு கஷ்டமான போராட்டத்தில் இருந்தாலும், அதில் வருகின்ற நிம்மதி ,சந்தோஷம், பணம், பதவி, பட்டம் இதில் எல்லாம் இருக்கிறதா? ஏனென்றால், ஒரு மனிதன் உயிர் வாழ வேண்டும் என்றால், இந்த பூமியை உழுது, அதில் நாற்று நட்டு ,களை எடுத்து, முற்றிய கதிரை அறுத்து, அந்த நெல்லை களத்தில் பார்க்கும் போது, அந்த விவசாயின் சந்தோஷம் எவ்வளவு பூரிப்பானது தெரியுமா?
ஆனால், இன்று விவசாயம் கேவலமாக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கமே தவறுகளை செய்து வருகிறது. ஒரு பக்கம் 100 நாள் வேலை திட்டம். மற்றொரு பக்கம் கிராமங்களில் இருந்து கம்பெனிகளுக்கு ஆட்களை கம்பெனி பஸ்கள் ஏற்றி செல்கிறது. இதனால், வேலையாட்கள் பற்றாக்குறையால் ,விவசாயம் பெருமளவு குறைந்து விட்டது .இருக்கின்ற கொஞ்சம் விவசாயத்தையாவது நாட்டில் காப்பாற்றப்பட வேண்டும் .அதைப் பற்றி யாருமே ,அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதால் ,நாட்டில் விலைவாசி உயர்வு, உணவு பஞ்சம் ஏற்பட்டால், மக்கள் வாழ்க்கை என்ன ஆகும்? என்பதை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்.
மேலும், பருந்துர் சுற்றி எவ்வளவு விவசாயம் நடக்கிறது? அந்த கிராமத்தில் மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? அதற்கு அருகில் தைல மரக் காடுகள், ஏரி, இவ்வளவு இயற்கையின் படைப்பை இறைவன் ஒருவனால் தான் உருவாக்க முடியும். இறைவனைத் தவிர ,இயற்கையை உருவாக்க விஞ்ஞானியால் முடியாது.
இயற்கையின் எழிலால், மனித வாழ்க்கை சந்தோஷமும், நிம்மதியும் அடைய முடியும். ஆனால், விஞ்ஞானத்தால் மனித வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியும் ஒரு காலம் அடைய முடியாது. வெளி உலகிற்கு வேண்டுமானால் தான் சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்ளலாம். ஆனால், மனதில் அந்த அளவுக்கு சந்தோஷம் இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். உதாரணத்திற்கு காரில் பயணம் செல்கிறோம், பயணம் செல்லும் போது ,ஒரு பயத்துடன் தான் பயணம் செய்கிறோம். அதேபோல் டூவீலரில் பயணம் செய்கிறோம், அதிலும் ஒரு பயத்துடன் தான் பயணம் செய்கிறோம் .ஆகக் கூடிய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு அத்தனைக்கும், மனித வாழ்க்கையில் ஆபத்து அதிக அளவில் உள்ளது.மேலும்,
இன்று இவையெல்லாம் இல்லையென்றால் ,நம்முடைய பயண நேரம் அதிகரித்து விடும். வாழ்க்கையில் பயணத்திலே வீணாகிவிடும். அப்போது இவ்வளவு வாகனங்கள் இல்லை. மனிதன் நடை பயணம் மூலம் தான் பல ஊர்களுக்கு சென்று இருக்கிறார்கள் .அப்போது மாட்டு வண்டி, குதிரை வண்டி, இது போன்ற வாகனங்களை தான் பயன்படுத்தினார்கள். அதில், இருக்கின்ற நிம்மதி, சந்தோஷம் இதில் இருக்கிறதா? என்பது இன்றைய கால மனிதர்கள் அதை உணர்ந்து இருப்பார்களா? என்பதும் தெரியவில்லை. காரணம் இப்போது வாழ்க்கையே ஒரு பரபரப்பு, வாழ்க்கையே ஒரு போராட்டம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் கேள்விக்குறியாக தான் உள்ளது என்பதை மறுக்க முடியாத உண்மை.
அதனால், விஞ்ஞானம் எவ்வளவுக்கு எவ்வளவு வளர்ச்சி அடைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு ,மனித வாழ்க்கையின் சந்தோசம், நிம்மதி, குறைந்துவிடும் என்பது உறுதி .மேலும், உண்மை, உழைப்பு, நேர்மை, மனசாட்சி ,சத்தியம் ,தர்மம் இவையெல்லாம் கடைபிடித்து வாழ்கின்ற மனிதன் நிச்சயம் நிம்மதி ,சந்தோஷம் அடைய முடியும். ஆனால், போலியான வாழ்க்கையிலும், பிறரை ஏமாற்றி வாழ்வதிலும் ஒரு காலும் மனிதன் சந்தோஷம் ,நிம்மதி அடைய முடியாது.