அரசியல் கட்சிகள் நாட்டில் எதற்காக இருக்கிறது? அவர்களின் நோக்கம் என்ன? அவர்களின் செயல்பாடு என்ன? இதைப் பற்றி தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.
இந்த அரசியல் கட்சிகளின் செயல்பாட்டையும் ,பேச்சுக்களையும், நோக்கத்தையும், தெரிந்து கொள்ளாமல் முட்டாள்களின் கூட்டம், சுயநலவாதிகளின் கூட்டம், ரவுடிகளின் கூட்டம் இதற்கு தலைமையேற்று நடத்துகின்ற கூட்டமாக தான் சில கட்சிகள், இன்று தமிழ்நாட்டில் பேசி வருகிறது. முட்டாள்களுக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. எதை சொன்னாலும் கைதட்டி, விசில் அடிக்க தெரியும் .அவர்களுக்கு ஒரு கொள்கையும் கிடையாது.
பணம் தான் கொள்கை .பதவி தான் கொள்கை. கட்சியை வைத்து பிழைப்பு நடத்த வந்தவர்கள். கட்சியை வைத்து பணம் சம்பாதிக்க வந்தவர்கள். இதை வைத்துக்கொண்டு, அடுத்தவனை அந்த ஏரியாவில் மிரட்டிக்கொண்டு, பந்தா காட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பது இன்றைய அரசியல் கட்சிகளின் தொழிலாகிவிட்டது. இவர்களுக்கெல்லாம் என்ன பெயர் கட்சித் தொண்டன். இந்த கட்சித் தொண்டன் வேலை என்ன சமூகப் பணியா? அல்லது அந்தந்த ஏரியாவில் தாதா பணியா? அல்லது பொது சொத்துக்களை கொள்ளையடிக்கும் வேலையா? அல்லது மக்களிடம் நல்லவர்களாக நடிக்கும் வேலையா? எது என்பது அந்தந்த ஏரியாவில் யார், யார் எந்தெந்த கட்சியில் எப்படி செயல்படுகிறார்கள்? என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும், இன்றைய அரசியல் என்பது ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் குறை சொல்வது மட்டுமே அரசியல் என்கிறார்கள். தவிர, திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பேன் என்கிறார். இவருக்கு சனாதனத்தை பற்றி தெரியாமல் பேசினாரா? அல்லது தெரிந்தே பேசினாரா? என்பது தெரியவில்லை. ஆனால் ,உலகத் தமிழர்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இங்கு இருக்கின்ற அரசியல் கட்சிகள், அவரவர் கொள்கைகளை மக்களிடம் பேசி வருகிறார்கள்.
இந்த கொள்கை, கோட்பாடு உங்கள் கட்சிக்குள் வைத்துக் கொள்ளுங்கள். மக்களிடம் அதை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அரசியல் என்பது வேறு ,உங்களுடைய அரசியல் கட்சி என்பது வேறு. தற்போதைய ஆளும்கட்சியான திமுக செய்ய வேண்டிய வேலைகளை ,செயல்பாடுகளை செய்யாமல், சனாதனத்தை வைத்து மத மோதல்களை உருவாக்குகிறதா? சனாதனத்திற்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
இங்கே பதவிக்கு வந்த அமைச்சர் எப்படிப்பட்ட நிர்வாகம் மக்களுக்கு தரவேண்டும்? என்னென்ன திட்டங்கள் அறிவித்தீர்கள்? செயல்படுத்தியது எத்தனை? செயல்படுத்தாமல் இருப்பது எத்தனை? அதைப்பற்றி பேச வேண்டும். அதை விட்டுவிட்டு, சனாதனத்தை ஒழிப்பேன் என்றால்! சனாதனத்திற்கும், அரசுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் அரசாக இருக்கிறீர்கள். மேலும், மக்களுக்கு அரசியல் தெரியாது என்று அரசியல் கட்சிகள் வந்த வரைக்கும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த பொய்யையும் கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகள் போட்டு வியாபாரம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இதில் தங்களுக்கான பல சோசியல் மீடியாக்களை வைத்துக்கொண்டு, அதை ஐடி விங் மூலம் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள் .எல்லோரும் அரசியல் தெரிந்தவர்கள் இல்லை. தெரியாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எது உண்மை? எது பொய்? என்று தெரியாது .அவர்களிடம் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இன்றைய சோசியல் மீடியா மக்கள் அதிகாரம் அதை எல்லாம் உடைத்து உண்மையை மக்களிடம் கொண்டு செல்கிறது .நீங்கள் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், உங்கள் கட்சி என்ன தவறு செய்தாலும் அது சரி.. ஆனால், மற்ற கட்சிகள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது, அவர்களுடைய பொழுதுபோக்கு அரசியல் வேலை .மேலும்,
பத்திரிக்கை விமர்சகர்கள் அதைப் பற்றி சோசியல் மீடியாக்களில் ஒரு சிலருக்கு சாதகமாகவும், ஒரு சிலருக்கு பாதகமாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடுநிலையோடு பேசுகின்ற பத்திரிக்கை விமர்சகர்கள் மிகவும் குறைவு. அதேபோல், நடுநிலையான பத்திரிகையும் மிகவும் குறைவு. உண்மையை மக்களிடம் வெளிப்படுத்தும் பத்திரிகையும் மிக மிகக் குறைவு. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தின் அரசியல் களம் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்களா ? தவிர, இன்றைய அரசியல் மக்களிடம் சமூக நோக்கத்தை விட ,அரசியல் கட்சிகளின் வியாபாரம் தான் முக்கிய நோக்கம். தமிழ்நாட்டில் மக்களிடம் பேசுவதை மட்டுமே மூலதனமாக உள்ள ஒரு அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ,பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, மதிமுக, இப்படி எண்ணற்ற பல கட்சிகள், தவிர்த்து ,பல லெட்டர் பேடு கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டில் பத்திரிகை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும், கட்சி மேடைகளிலும், அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் கட்சிகள்,
மக்களுக்கு இவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வி? நேற்று கூட ஒரு கம்பெனியின் H R பேசும்போது, இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டில் மீடியாக்களில் பேசிக் கொண்டு, ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து கொண்டு, ஒருவரைப் பற்றி ஒருவர் சண்டைக்கு இழுத்துக் கொண்டு, தங்களை மீடியாவில் பெரிய அரசியல்வாதியாக காட்டிக் கொண்டு, மக்களை முட்டாளாக்கும்வேலை என்கிறார் நான் இதைப் பற்றி தமிழக மக்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை அரசியல் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும், அரசியல் என்றால் ஏமாற்றும் வேலை அல்ல, என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்,அரசியலில் பேச்சுப்போட்டி நடத்த இவர்களை மக்கள் அழைத்தார்களா ? அல்லது ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்ல இவர்களை கூப்பிட்டார்களகூப்பிட்டார்களா? இதையெல்லாம் எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? எவ்வளவு வியாபாரம் செய்யலாம் ?என்று கார்ப்பரேட் ஊடகங்களின் பத்திரிகை வியாபாரத்தின் மூலதனமா ? அதனால், மக்களுக்கு என்ன பயன்? அவர்கள் தெரிந்து கொண்ட உண்மை என்ன? மேலும்,
மத்திய அரசு முப்பத்தி மூன்று சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது .அது ஒரு நல்ல விஷயம் தான் .ஆனால், அதையும் குறை சொல்வது தான் எங்கள் திறமை என்று சீமான் பேசுகிறார். இப்படி பேசிக் கொண்டிருப்பது, இவர்கள் மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த விளம்பரத்தை கார்ப்பரேட் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகிறது.
இதனால் மக்களுக்கு உண்மை தெரியாமல், அரசியல் என்பது என்ன? என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், எல்லா அரசியல் கட்சிகளும், தேர்தல் என்று வந்தால்! யார் யாருடனும் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். இவர்களுக்கு கொள்கை என்பது கிடையாது. ஆனால், மக்களிடம் மட்டும்தான் கொள்கையை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். மேலும், கடந்த 50 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சியில் ,தமிழ்நாட்டில் மக்களுக்கு செய்தது என்ன? இதில் பயனடைந்தவர்கள் மக்களா? அல்லது அரசியல் கட்சியினரா?
தவிர ,இலவசமாக சோறு போட்டு அதை மக்களிடம் பெருமையாக பேசிக் கொள்வது சாதனையா ? அந்த சாதனைகளை மக்களிடம் சொல்லி ஊடகங்கள் அரசு விளம்பரங்களும், சலுகைகளும் பெற்றுக் கொண்டது ஊடகங்களின் சுயநலம். ஆனால், அந்த அளவிற்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல்,இலவசம் என்ற பெயரில் ஊழல் .அடுத்தது சாராயத்தை வியாபாரம் ஆக்கியது, கல்வியை வியாபாரம் ஆக்கியது, மருத்துவத்தை வியாபாரம் ஆக்கியது, இதையெல்லாம் திமுக, அதிமுக அரசியல் கட்சியின் எம் எல் ஏ, மந்திரிகள், எம்பிக்கள் இவர்கள் செய்த சாதனை. இன்று வரை அதற்கு ஏமாந்த தமிழனாக, இந்த அரசியல் கட்சிகளிடம் ஓட்டுக்கு பணம் வாங்கி, கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக தான் இன்றைய தமிழக மக்களின் நிலை. எப்போது இந்த உண்மையை புரிந்து கொள்வார்கள்? – தமிழக மக்கள் .