கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் 13 கடலோர பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை ,முட்டம், மண்டைக்காடு, சங்குத்துறை, மணக்குடி தெங்கபுதூர், லெமோரியா கடற்கரை, சொத்தவிளை, குளச்சல், தேங்காய் பட்டினம், பெரிய காடு ,இறையன்புத்தன் துறை, சின்னத்துரை போன்ற இடங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், அந்தந்த பகுதி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அப்பகுதி உதவியாளர்கள் கலந்து கொண்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டுள்ளது.மேலும்,
இது எதற்காக? இந்த பண விதைகள் நடப்படுகிறது? இதனால் பொது மக்களுக்கு என்ன பயன்? என்பதுதான் மிக முக்கியமான கேள்வி? கடலோரப் பகுதிகளில் பனைமரம் இருப்பது சுனாமி போன்ற காலங்களில் மக்களை பாதுகாக்கும் ஒரு தடுப்பணை போன்றது. இது தவிர, மக்களுக்கு பனை நுங்கு பனங்கிழங்கு, பண ஓலை, இவை எல்லாம் மக்களின் பயன்பாட்டுக்கு ஒரு புறம், மற்றொரு புறத்தில் இயற்கையின் கடல் சீற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் .
மேலும் இது, அடுத்த தலைமுறைகளுக்கு மரத்தின் பெருமையும் ,காடுகளின் அவசியம் மனித வாழ்வியலோடு கலந்தது என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வு தான் இந்த பனை விதை நடும் தமிழக அரசின் முக்கிய திட்டம். இந்த திட்டத்தை மக்கள் சமூக அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும் .தவிர, இந்த பனைமர விதைகள் முளைத்து அது வளர்ந்து மரமாகும் வரை மனிதர்களோ, மிருகமோ அதை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
மேலும், குமரி மாவட்டத்தில் குறைந்து வரும் பனை மரங்களை இவ்வாறு பண விதைகளை நடுவதன் மூலம் ,நம்முடைய பாரம்பரிய வாழ்வியலோடு நாம் நெருங்கி இருந்த பனை மரங்களை வருங்கால சந்ததியினருக்கு இதை பொக்கிஷமாக நாம் விட்டுச் செல்ல முடியும் என்று ஒரு கோடி பனை விதை நடும் இயக்கத்தின் குமரி மாவட்ட பனை விதை நடும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுபத்ரா செல்லதுரை தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பகுதியில் ஒரு தன்னார்வலர் 100 பனை விதைகள் என்ற இலக்குடன், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பண விதைகள் இப்பகுதியில் நடப்பட்டுள்ளது. மேலும் ,இந்த நிகழ்ச்சியில் சுவாமி தோப்பு அன்பு வனம், தவத்திரு பால பிரஜாபதி அடிகளார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் ,கன்னியாகுமரி பேரூராட்சியின் தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.