பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு, இழைக்கின்ற கொடுமைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை .

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 10 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வந்துள்ளனர் .அவர்கள் அரசின் தேர்விலும், தேர்ச்சி பெற்று பணியாற்றி வரும்போது, கடந்த அதிமுக ஆட்சியிலும், அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. தற்போது உள்ள திமுக அரசிலும் அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.

 இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுடைய வயது வித்தியாசம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலும், அல்லது 50 ஆண்டுகளை நெருங்கியும் தற்போது பணியாற்றி உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அந்த ஆசிரியர்களின் வேதனை உண்மையிலேயே மிகவும் கொடுமையானது. ஏனென்றால், இதற்காகவே அவர்கள் படித்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து பணியாற்றி வந்தவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், இந்தப் போராட்டத்தை அரசாங்கம் வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி வெளியில் போட்டு கைது செய்துள்ளது. பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 அவர்கள் வன்முறை போராட்டங்களில் ஈடுபடவில்லை .அறப்போராட்டத்தில் தான் ஈடுபட்டார்கள். அந்த அறப்போராட்டத்தையும், அரசாங்கம் அவர்களுக்கு இல்லை என்று மறுத்து கைது செய்துள்ளது .ஆசிரியர்கள் உழைப்பினால் தான் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்த முடியும். ஆனால், தரமான ஆசிரியர்களை அமர்த்தாமல், காசு கொடுப்பவர்களை எல்லாம் பணியாமத்திக் கொள்கிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், ஆசிரியர் ,திறமை, தகுதி அதற்கு ஏற்றவாறு தான் மாணவனின் கல்வி  திறமை, தகுதி இருக்கும். அதிலும் அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் கல்வி தரம் ஏன் குறைந்துள்ளது ? இது பற்றி எந்த அரசாங்கமும் கவலைப்படுவதில்லை. மக்களும் கவலைப்படுவதில்லை.காரணம் கல்வி என்பது தனியாரிடம் வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது .

அதனால், அந்த தனியாரின் கல்வி வியாபாரத்தில் ,மக்கள் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் இழந்து கல்வி கற்கிறார்கள்.இதையெல்லாம் சரி செய்யாமல், இலவசத்தை கொடுத்து பயனில்லை .இலவச உணவு கொடுத்து பயனில்லை. மக்களுக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ ,அதை திமுக அரசு கொடுக்க தவறிவிட்டது.

மேலும்,ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில், நல்ல நிர்வாகம், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி இதையெல்லாம் கொடுக்க தவறி, இன்று மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் அளவிற்கு நாட்டில் கஞ்சா, டாஸ்மாக் ,பான் ப்ராக் போன்ற பல பொருட்கள் உபயோகப்படுத்துகிறார்கள். இதைவிட ஒரு கொடுமை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் கடின உழைப்பால் சம்பாதித்த வடநாட்டு தொழிலாளர்களை மடக்கி, இந்த கஞ்சா பேர்வழிகள், குடிகாரர்கள் பகலிலே பணத்தை பிடுங்குகிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது . அங்கே காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா ?

அதனால், நாட்டில் எது வளர்ந்துள்ளதோ, இல்லையோ போதை அதிக அளவில் வளர்ந்துள்ளது என்கிறார்கள் பொதுமக்கள். மேலும், நடந்து முடிந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கஞ்சா, போதை பொருட்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், மக்கள் பத்திரிகைகளில் பார்த்தது தான் இந்த செய்தியை ஆறுதல் அடைய வேண்டி இருக்கிறது.

 ஆனால், நடைமுறையில் அது சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. அதனால் ஆட்சி நிர்வாகம், மக்களின் எதிர்பார்ப்பு என்ன ? என்பதை பற்றி தெரியாமல் ஆட்சி நடத்தி பயனில்லை. மேலும், இந்த பட்டதாரி ஆசிரியர்களின் வேதனை மிகவும் கொடுமையானது. அரசு அவர்களின் கோரிக்கையை சரி செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *