இந்தியாவில் உழைக்காமல் சம்பாதிப்பவர்கள், அரசியல் கட்சிகளில் உள்ள ஊழல்வாதிகள். இவர்களுடைய சொத்து கணக்கை பார்த்து மக்கள் பிரமித்து போகிறார்கள். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இருந்த ஜெகத்ரட்சகன் இன்று பல லட்சம் கோடிக்கு சொத்து. அதேபோல், டி ஆர் பாலு, தமிழ்நாட்டின் மற்றொரு அதானி சன் டிவி கலாநிதி, மாறன் தயாநிதி மாறன், ஆ ராசா, கனிமொழி, ஸ்டாலின் குடும்பம் ,இந்தப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆரம்பத்தில் இவர்களுடைய சொத்து மதிப்பு என்ன?
இப்போது இவர்களுடைய சொத்து மதிப்பு என்ன? எல்லாம் லட்சம் கோடிகளில் எங்கிருந்து வந்தது? என்ன தொழில் செய்தார்கள்? அரசியலில் மக்களுக்காக சமூக சேவை செய்ய வந்தவர்களுக்கு எப்படி? இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் வந்தது ?என்பதுதான் தற்போதைய சமூக அலுவலர்களின் முக்கிய கேள்வி? மேலும், இவர்களுடைய சொத்து பல லட்சம் கோடிகளில் பெருகுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 8 லட்சம் கோடி கடன்? அப்படி என்றால் நாட்டை கடனாக்கி விட்டு ,இவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றதா?
மேலும், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ, தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இருப்பதும் ஒன்று, இல்லாததும் ஒன்று. அதனால், அதிகாரிகள் 100, 500 லஞ்சம் வாங்கினால் அவர்களை போய் பிடிப்பார்கள். கொள்ளையடிப்பவர்களை விட்டு விடுவார்கள். இந்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையில் சுமார் நான்காண்டுகளுக்கு முன்னரே இதை கட்டுரையாக கொடுக்கப்பட்டது.
இந்த சட்டம் கொண்டு வந்தால் தான் இந்தியாவுக்கு வளர்ச்சி . இல்லையென்றால், இவர்களுக்கு தான் வளர்ச்சி இதைவிட ஒரு கொடுமை உலக அளவிலே மிகப்பெரிய ஊழல்வாதி என்று பெயர் பெற்றவர் பா சிதம்பரம். இந்த ஊழல்வாதிகளை எல்லாம் பாராட்டும் ,கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், இதில் பாதி அவர்களுடையது. அதனால், அவர்களை பாராட்டுவார்கள். பாராட்டி கொள்ளட்டும். ஆனால், மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும். மேலும், இந்த சட்டம் கொண்டு வந்தால், பிரதமர் மோடியின் கனவு இந்தியா மிகப்பெரிய வல்லரசாகும்.
மேலும், இப்படி எல்லாம் கொள்ளை அடித்து அரசியலில் பல லட்சம் கோடிகளை பார்ப்பவர்கள், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுத்தால் நாட்டின் பொருளாதாரம் குறைந்து விடுமா? இதுதான் பத்திரிகைகளின் சமூக நீதியா?
மேலும், மத்திய அரசு பத்திரிகைகளின் தரத்திற்கு ஏற்றவாறு சலுகை, விளம்பரங்களை ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சி பத்திரிகைகள், வியாபாரம் நோக்கம் கொண்ட பத்திரிகைகள், இதற்கு எல்லாம் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்தினால், மக்களின் வரிப்பணம் கோடிக் கணக்கில் வீணடிப்பது தவிர்க்கலாம்.
மேலும் ,உண்மையான செய்திகளை, சமூக நலன் சார்ந்த செய்திகளை, சமூக நலன் பத்திரிகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த முடியும். இல்லையென்றால் ஊழல்வாதிகளின் பின்னணியில் நின்று கொண்டு, ஊழலுக்கு துணை போகும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் செய்திகளை பார்த்து மக்கள் ஏமாந்து கொண்டிருப்பார்கள்.
இதை நீதிமன்றம், மத்திய- மாநில அரசு செய்தி துறை அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று தான் சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை. மற்றும் சமூகநலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் நோக்கம் .