வண்டிப்பாதையை அகற்ற உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ்.

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

(வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ளவரிடம் அகற்ற போராடும் அரசு பணியாளர் பரந்தாமன் )

திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள வண்டிப் பாதையை அகற்றுவதற்காக சுமார் 8 ஆண்டுகளாக போராடும் நிலைமை தான் இந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின்ஜான் வர்கீஸ் நிர்வாகம். இவர் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், கண்டு கொள்ள மாட்டார் .அப்படிதான் இந்த மாவட்ட நிர்வாகத்தின் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் நிர்வாகம் இருந்து வருகிறது.

இவரைப் பற்றி பொதுமக்கள் எவ்வளவு புகார் அனுப்பினாலும், முதல்வர் மு க ஸ்டாலின் இவரை திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து மாற்ற மாட்டார். காரணம் இவர் குடும்ப உறுப்பினர்களுடன் நட்புடன் இருந்து வருவதாக தகவல்.

மேலும், இது ஒரு சாதாரண பிரச்சனை .இந்த பிரச்சனைக்கு சிப்காட் அதிகாரி பரந்தாமன் இவரிடம் மனு அளித்து, வட்டாட்சியரிடம் மனு அளித்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்து, பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டு, இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் ஏற்படவில்லை என்று இவர் ஹைகோர்ட்டில் சென்று அதற்கான உத்தரவும் வாங்கி வந்தார்.

அப்போதும் அந்த உத்தரவையும் கிடப்பில் போட்டு வைக்கிறார் என்றால்! இவர் எப்படிப்பட்ட மாவட்ட ஆட்சியர்? இவருடைய நிர்வாக திறமையை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். மேலும்,நீதிமன்றமும் இதில் தலையிட்டு இருப்பதால், நீதிபதிகளும் இவருடைய திறமை என்ன?  என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வண்டிப் பாதை பிரச்சனையே இவரால் தீர்க்க முடியவில்லை என்றால்! வேறு பெரிய பிரச்சனைகளை எப்படி இந்த மாவட்ட ஆட்சியர் தீர்ப்பார் ?அதுவும் ஒரு சாதாரண சின்ன சின்ன விஷயத்திற்கு மக்கள் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது? என்பது திமுக ஆட்சி நிர்வாகம். மக்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *