போலி பத்திரிகைகளை ஒழிக்க, மத்திய அரசின் நடவடிக்கை பிரிதிகளை அலுவலகத்தில் சமர்ப்பிப்பது மட்டும் தானா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மத்திய அரசு இன்று போலி பத்திரிகைகளை ஒழிக்க அந்தந்த பத்திரிகைகள் தங்களுடைய பிரதிகளை அவப்பொழுது அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரஸ் இன்பர்மேஷன் ப்ரோ ( pib) ல்  கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற அதே சலுகை, சாமானிய சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதாவது அச்சுப்பிருதிகளை சமர்ப்பிப்பதற்கு உத்தரவு போடும் அதிகாரிகளும், அமைச்சர்களும் சலுகை விளம்பரங்களுக்கு ஏன் அந்த உத்தரவை போடக்கூடாது? மேலும்,

 கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள், மக்களின் வரிப்பணத்தில் பத்திரிக்கை நடத்துவார்கள். நாங்கள் சொந்த பணத்தில் சமூக நலன்களுக்காக, பத்திரிக்கை நடத்தி போராடிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்? தவிர,

கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு ஒரு சலுகை, சாமானிய சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு ஒரு சலுகை, இதில் வியாபார நோக்கம், அரசியல் கட்சி சார்ந்தது, இதை எல்லாம் தரம் பிரிக்காமல், இன்றைய காலகட்டத்தில் இந்த பத்திரிகைகளுக்கு மட்டும் போலி பத்திரிகைகள் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. அப்படியே பலர் இருக்கலாம்.

ஆனால், கார்ப்பரேட் நிறுவன பத்திரிகைகளில் எத்தனை பொய் செய்திகள் ?போலி செய்திகள்? வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதுபோன்ற போலி  செய்திகள் வெளியிடும் பத்திரிகைகளுக்கு கூட, கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தால், மத்திய அரசின் சலுகை ,விளம்பரங்கள் அதற்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுதான் பத்திரிகை சட்டமா? மேலும்,

அது வியாபார பத்திரிக்கையாக இருக்கலாம் .அல்லது அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகையாக இருக்கலாம். அவர்களெல்லாம் சர்குலேஷன் என்ற ஒரு பிம்பத்தை வைத்து மக்களையும், அரசாங்கத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் மட்டும்தான் வெளியிடப் பட்டு வருகிறது. உண்மை சொல்வதில் தயக்கம் இல்லை . தவிர,

அந்த சலுகை, விளம்பரங்கள் எந்தெந்த பத்திரிகைகளுக்கு கொடுக்க வேண்டும்? என்று அரசு உத்தரவு வழங்க வேண்டும். மேலும், இன்று பத்திரிகைகள் வாங்குபவர்கள் குறைந்துவிட்ட போதிலும், இந்த சர்குலேஷன் விதிமுறையை எப்படி? மத்திய -மாநில அரசுகள் இன்றும், அதே பழைய ஓட்டை சட்டத்தை பத்திரிக்கை துறையில் வைத்துக் கொண்டிருக்கிறது?  காரணம், எல்லாம் டிஜிட்டல் மீடியா என்ற நிலை பத்திரிக்கை துறையில் வந்துவிட்ட பிறகு, இதற்கான தீர்வு என்ன?மேலும்,

மக்களுக்காக, மக்களின் நலன்களுக்காக, போராடும் பத்திரிகைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், வியாபார நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சி சார்ந்த நிறுவனங்களுக்கும், பத்திரிக்கை துறையில் முன்னுரிமை அளிப்பது சட்டத்தை, சமூகத்தை, ஏமாற்றும் செயல் .இதைப் பற்றி மத்திய -மாநில அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அமைச்சர்களாவது இதைப்பற்றி கண்டு கொள்வார்களா? என்று சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் தொடர்ந்து போராடி வருகிறது. இன்னும் இந்த பத்திரிகையின் செய்திகள் அதன் உண்மை தன்மைகள் பற்றி ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தகுதி இல்லையா?

 மேலும், சமீபத்தில் கூட மத்திய செய்தி துறை இணையமைச்சர் எல் முருகனுக்கு இது பற்றிய செய்திகள் அவருடைய ஈமெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து இப்படிப்பட்ட செய்திகள் அமைச்சருக்கு அனுப்பி கொண்டு தான் இருப்பேன். இவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையா? என்பது தெரியாது. இறுதியில் பிரதமர் மோடிக்கு இந்த தகவலை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளேன்.

 மேலும், மத்திய மாநில அரசு உயர் அதிகாரிகள் கூட தகுதியான பத்திரிகைகளுக்கு கொடுங்கள் என்று தான் நாங்கள் போராடி வருகிறோம். அதை மத்திய- மாநில அரசுகள் இதனால் வரை, பத்திரிகையின் சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்வது போல,

திமுக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையை தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்களே ஒழிய,  அதை பொதுநலத்திற்காக, மக்கள் நலன்களுக்காக போராடும் பத்திரிகைகளுக்கு, மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள் தகுதியான பத்திரிகைகளுக்கு சென்றடைவதில்லை. மேலும்,

அதைப்பற்றி செய்தித்துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? அல்லது பத்திரிகையின் செய்திகள் என்பது விளம்பரப்படுத்தும் வேலையா? அல்லது அரசுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் வெளியிடுவது தான் பத்திரிக்கையா? இதைப் பற்றி எல்லாம் ஆய்வு செய்ய தகுதி இல்லாதவர்கள் எப்படி செய்தித் துறை அதிகாரிகளாக இருக்க முடியும்?

மேலும், ஆட்சியாளர்களுக்காக கட்சி பத்திரிகைகள் போல செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு தான் சலுகை விளம்பரம் என்றால், இவர்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக இருப்பதற்கு பதிலாக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ,அந்த கட்சியின் நிர்வாகியாக கரை வேட்டி கட்டிக்கொண்டு வந்துவிடலாம். ஏனென்றால் ,அவர்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் அரசு அதிகாரி என்று சொல்கிறீர்கள் .அவர்கள் சொல்லவில்லை அவ்வளவுதான். இனியாவது, மத்திய- மாநில அரசின் அதிகாரிகளுக்கு உண்மை புரிந்திருக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *