ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் சொல்லப்பட்ட செய்தி .காவல்துறை அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. அந்த ரௌடி கருக்கா வினோத் சாலையில் தான் பெட்ரோல் குண்டு வீசினான் என்று தெரிவிக்கிறது.
ஆனால், திமுக அமைச்சர் ரகுபதி இந்த ரவுடியை பாஜகவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தான் இவரை பெயிலில் எடுத்தார் என்று சொல்கிறார்.
சபாநாயகர் அப்பாவு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவின்ருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கிறார். ஆக கூடி ஒரு கவர்னருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது .இதில் இவர்களுடைய செய்தி பாஜகவின் மீது தூக்கி போட்டு விட்டால், எதுவும் பேச முடியாது .இது திமுகவின் கைவந்த அரசியல் . யார் குற்றும் சுமத்துகிறார்களோ, அவர்கள் மீதே அதே குற்றத்தை போடு ,குற்றம் சுமத்துபவனின் வாயை அடைத்து விடலாம்.இதை தான் கருணாநிதி செய்து கொண்டு இருந்தார். அதை தொண்டர்கள் பின்பற்றுகிறார்கபின்பற்றுகிறார்களா? இது அரசியல் செய்ய பேசுகின்ற இடமில்லை .
மேலும், மத்திய இணைய அமைச்சர் வேல்முருகன் சொல்வது போல், இந்த சம்பவத்தை சிபிஐ அல்லது என்ஐஏ கையில் எடுத்தால் தான் உண்மை தெரியவரும். இதற்குப் பின்னணியில் யாருடைய அரசியல்? எப்படிப்பட்ட அரசியல் இருக்கிறது? மேலும், அந்தக் காலத்திலிருந்து திமுக ஒரு சீப்பஸ்ட் அரசியல் செய்து வந்துள்ளது .அது படிப்பிரிவு இல்லாத மக்களிடம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால், இதை விவரமானவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை .நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு ,எப்படி வேண்டுமானாலும் பேசுவது அரசியல் அல்ல. அதற்கு முட்டாள்கள் தான் தகுதியானவர்கள் . அந்த செய்திகளையும்,மக்களிடம் உண்மை போல் காட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள், மக்களில் சுய சிந்தனை உள்ளவர்கள், அதை ஏற்கவில்லை. படித்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள் .விவரமானவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். அரசியல் தெரிந்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள் இதை விமர்சனம் செய்கிறார்கள்.
எனவே, இது போன்ற தவறான அரசியலை திமுக செய்துவிட்டு, இப்போது ஆளாளுக்கு அறிக்கையும், கார்ப்பரேட் ஊடகங்களில் பேசுவதால் மக்கள் உண்மை என்று நம்பி விடுவார்களா? பத்திரிகைகளுக்கே இது குழப்பமாக இருக்கும்போது, மக்களுக்கு எப்படி உண்மை தெரிய வரும்?