தேர்தல் நிதியை அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களில் வாங்க உரிமை உள்ளதா ? அதைக் கேட்க மக்களுக்கு உரிமை இல்லையா? ஜனநாயக நாட்டில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளைப் பற்றிய உண்மை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களுடைய வெளிப்படுத்த தன்மை மக்களிடம் உறுதிப்படுத்த வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும்,
தேர்தல் நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கிக் கொள்ள 2018 ஆம் ஆண்டு பிஜேபி அரசு இத் திட்டத்தை கொண்டு வந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனம் வங்கி மூலம் தேர்தல் பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். தவிர, இந்த பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாகவும் வழங்கலாம். மேலும், இந்த பணம் யாரிடம் வந்தது ?யாரிடம் போனது ?என்பது மற்றவர்களுக்கு தெரியாது. ஆகக் கூடி இது ஒரு மறைமுகமான கணக்கு.
மத்திய அரசின்,இத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சந்திர சூட் முன்நிலையில் விசாரணைக்கு வருகிறது. இது ஒரு முக்கியத்துவமான வழக்கு . பொதுமக்களும், வாக்காளர்களும் இந்த வழக்கை இந்தியா முழுவதும் முக்கியத்துவமாக பார்க்கப்படும் வழக்கு .
காரணம் அரசியல் கட்சிகள் ,இப்படிப்பட்ட தேர்தல் நிதி என்று கம்பெனிகள், தனியார் அமைப்புகள், தனிநபர் நன்கொடை ,தனிநபர் தேர்தல் நிதி, அரசியல் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி, இப்படி பலதரப்பட்டவர்களிடமிருந்து தேர்தல் நிதி ,அரசியல் கட்சிகள் வசூலிக்கிறது, இதில் கருப்பு பணமும், வெள்ளையாக்கப்படுகிறது.தவிர,வசூலிக்கின்ற பணத்தை தேர்தல் நிதியாக பெற்றதை தேர்தல் காலங்களில், வாக்காளர்களுக்கு பல அரசியல் கட்சிகள் லஞ்சமாக கொடுக்கின்றனர்.
இப்படி லஞ்சமாக ஓட்டுக்கு, கொடுப்பதால், நாட்டில் நேர்மையான தேர்தல் நடத்தவும் முடியாது. தவிர ,பணம் கொடுத்து வாக்களிக்கும் ஒருவரது வாக்கு எப்படி ?அது ஒரு நேர்மையான வாக்கு ஆகும் ? பணம் கொடுப்பதும் தவறு, வாக்காளர்கள் பணம் வாங்குவதும் தவறு.
இது பற்றி தேர்தல் ஆணையம் இன்னும் கடுமையான சட்டம் கொண்டு வரவில்லை .இதனால், தகுதியானவர்கள் அரசியலுக்கு வர முடியாது. ஊழல்வாதிகளும், ரவுடிகளும், தான் பணம் கொடுத்து அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான், இந்த வியாபார பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மக்களிடம் முன்னிலைப்படுத்துகின்றன .
இதனால் மக்களுக்கு உண்மை தெரியாத தேர்தல், ஆட்சி நிர்வாகம், எல்லாம் ஒரு வியாபாரத்தின் அடிப்படையில் இன்றைய அரசியல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் ,தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகள் பணம் வாங்குவது தேர்தல் செலவுக்காக என்று வாக்காளர்களிடம் தெரிவித்தாலும், ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த கட்சியும், வேட்பாளரும் தேர்தல் ஆணையத்தில் செலுத்தி,. தேர்தல் ஆணையமே அனைத்து செலவுகளையும் வேட்பாளர்களுக்கு செய்ய வேண்டும்.தவிர
அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு கேட்பது, பணம் கொடுப்பது இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களை ஒவ்வொரு அரசியல் கட்சியும் என்ன சொல்ல வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்தின் மூலம் மக்களுக்கு அறிவிக்கலாம் .
மேலும், தேர்தல் ஆணையம் கிராமங்கள், நகரங்கள் தோறும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். வாக்காளர்கள் பணம் வாங்கினாலும் அல்லது அரசியல் கட்சியினர் பணம் கொடுத்தாலும் ,அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .இப்படி ஒரு திட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்து தேர்தல் நடத்தினால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியும். தவிர,
உச்சநீதிமன்றம் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்த முக்கிய வழக்குக்கு, இதில் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது? என்பதுதான் இந்திய வாக்காளர்களின் முக்கிய கேள்வி?