நாட்டில் வருமான வரித்துறை ,அமலாக்கத்துறை ,மந்திரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், இவர்கள் மீது ரெய்டு நடத்தி என்ன பயன்? பிஜேபி அரசு திமுக சொல்வது போல், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? அல்லது உண்மையிலேயே இவர்கள் சொத்து குவிப்பு ரெய்டா? நாட்டு மக்களுக்கே தெரிந்திருந்தும், ஏன் இதுவரை இந்த சொத்துக்கள் முடக்கி நாட்டுடைமையாக்கப்படவில்லை? என்பது தான் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிக முக்கிய கேள்வி?
மேலும், ஆங்காங்கே ரைய்டு நடத்தி, மத்திய அரசின் அதிகாரம் இருப்பதை காட்டுவதால், யாருக்கு என்ன லாபம்? மக்களுடைய வரிப்பணத்தை தவறான முறையில் பதவி ,அதிகாரத்தால் கொள்ளையடித்து, சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டு இருப்பதை நாட்டுடைமை ஆக்கப்படுவதில், மத்திய அரசுக்கு என்ன சிக்கல்? மேலும், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு சென்று, பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடத்திக் கொண்டு, நீதிபதிகள் வாய்தா போட்டு,இவர்களை நிரபராதி ஆக்குவதற்கு தான் நீதிமன்றமா? மேலும், பொதுமக்களுக்கு இவர்களுடைய சொத்துக் குவிப்பு நன்றாகத் தெரிந்தும் ,அது நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும் ஏன் தெரியவில்லை?
ஜெகத்ரட்சகன் எம்பி ஒரு சாதாரண வாடகை வீட்டில் குடி இருந்தவர். அவருக்கு எப்படி பல லட்சம் கோடி வருமானம் வந்தது? ஏ.வா.வேலு ஒரு பஸ் கண்டக்டர் அவருக்கு எப்படி இவ்வளவு கோடி சொத்துகள் வந்தது? பொன்முடி ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் அவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது ?செந்தில் பாலாஜி வெளிநாடுகளில் பணத்தை பதுக்கும் அளவிற்கு எப்படி சொத்துக்கள் பணம் வந்தது?அப்படி என்றால் நீதிமன்றத்தில் இவர்களை எப்படி நிரபராதி ஆக்குகிறார்கள்? இது ,எல்லாம் தமிழக மக்களே தற்போது கேள்வி கேட்கிறார்கள்?மேலும்,
இந்த ஊழல் பணத்தை வாங்கிக்கொண்டு நிரபராதி ஆக்குகிறார்களா? அல்லது சட்டப்படி இவர்களை நிரபராதி ஆக்குகிறார்களா? இல்லை சட்டத்தின் ஓட்டையைகளை வைத்துக்கொண்டு நிரபராதி ஆக்குகிறார்களா ?இதுதான் தமிழக மக்களிடையே ஊழல்வாதிகள் எப்படி நீதிமன்றங்களில் விடுதலை ஆகிறார்கள் என்பது முக்கிய கேள்வியும், சந்தேகமும் வலுத்து உள்ளது?
மேலும், வருமானவரித்துறை ஆதாரம் இருக்கிறது என்று ரைடு நடத்துகிறது. அமலாக்கத்துறை ஆதாரம் இருக்கிறது என்று ரைடு நடத்துகிறது. ஆனால், அந்த ஆதாரங்கள் எல்லாம் நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும் காணாமல் போய்விடுகிறதா? இதில் நீதிபதிகள் தவறுகளா? அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் தவறுகளா? அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் தவறுகளா? யார் தவறுகள்? வாக்களித்த மக்கள் தவறுகளா? பொதுமக்களுக்கு எழுந்துள்ள முக்கிய சந்தேக கேள்விகள்.
மேலும்,பதவி அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்து ,சொத்துக்களை குவித்தவர்களை கைது செய்து மக்களிடம் காட்சிப்படுத்துவது பெரிய காரியம் அல்ல .அவர்களிடம் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுடைமைமையாக்குவது தான் அதிகாரிகளுக்கும், நீதிபதிகளுக்கும் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.மேலும்,
நாட்டில் ஒருவர் தொழில் செய்து சம்பாதிப்பதை விட, அரசியலில் சம்பாதிப்பது எப்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் பல கோடிகள் வருகிறது?அது சாதாரண ஒரு பஞ்சாயத்து தலைவர் முதல் அமைச்சர்கள் வரை ,இவர்களுக்கெல்லாம் இந்த நிலை ஏன் ? மேலும், இப்படிப்பட்ட சொத்துக்கள் உடனடியாக நாட்டு உடைமையாக்க பிரதமர் மோடி சட்டம் கொண்டு வருவாரா? இதுதான் தற்போதைய இந்திய வாக்காளர்கள் அனைவரின் எதிர்பார்ப்பு.
மேலும் திமுகவை மட்டும் குறி வைத்து பிஜேபி வருமான வரி துறை, அமலாக்கத் துறை ரைய்டு என்பது ஒரு அரசியல் பழிவாங்கும் நோக்கமாக இல்லாமல், அனைத்து கட்சிகளிலும் உள்ள சொத்து குவிப்பாளர்கள், மீது இந்த ரெய்டு நடத்த வேண்டும் என்பதுதான் தமிழக வாக்காளர்களின் முக்கிய ஆதங்கம்.