நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடுகள் மாநிலம் முழுதும் நடைபெற்றுள்ளது. மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு, ஏற்றி செல்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இது தவிர,இதில் என்ன சட்ட ஓட்டை? என்றால், மணல் எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதியை விட மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இதில் இத்தனை மீட்டர், எத்தனை லோடு என்றுதான் அனுமதி வழங்கப்படுகிறது. இதை நீர்வளத்துறை மட்டுமே கொடுக்கவில்லை, நீர்வளத்துறை ,வருவாய்த்துறை ,கனிமவளத்துறை மூன்று துறையும் இணைந்து மாவட்ட ஆட்சியருக்கு அந்த கோப்பு அனுப்புவார்கள் .அந்த கோப்பிற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிப்பார்.
இதில் தற்போது நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் ஆற்று மணல் உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதையெல்லாம் அதிகாரத்தால் காவல்துறையை வைத்து அடக்கி விடுகிறார்கள் அல்லது அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள் .இப்படிப்பட்ட ஒரு நிலைமைதான் இந்த மணல் கொள்ளையில் தமிழ்நாட்டில் தொடர்கிறது .இதில் நீர்வளத் துறையின் அதிகாரிகள் சிலர், அரசியல்வாதிகளாகவே மாறிவிடுகிறார்கள் .அவர்கள் கரைவேட்டி ஒன்றுதான் கட்டவில்லை. அந்த அளவிற்கு மணல் வியாபாரிகளுடன் நெருக்கமாகி விடுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை குறைந்த ரூபாய்க்கு ஏலம் விட்டு ,கோடிக்கணக்கான ரூபாயை அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதைப் பற்றியும் அமலாக்கத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். இதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. இவர்கள் அந்த கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து, இப்படிப்பட்ட ஊழல் முறைகேடுகளை செய்து வருகிறார்கள்.
மேலும், தற்போது தமிழகம் முழுதும் மணல் வியாபாரிகள், அரசு நிர்ணயத்தை அளவை விட, ஆற்றையே காலி செய்யும் அளவிற்கு ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுள்ளது .அதாவது சுமார் 300 கோடிக்கு மேல், முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கும் தகவல். இதற்கு நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா மற்றும் நீர்வளத்துறை திருவள்ளூர் மாவட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது .இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை அமலாக்கத்துறை ஊர்ஜிதம் செய்துள்ளது.
அதனால் ,எந்தெந்த மணல் குவாரிகளில் இப்படிப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளது? என்பதை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை பொறியாளர்களுக்கு பண மோசடி தடுப்பு சட்டம் பிரிவு 50 இன் கீழ் விசாரணைக்கு ஆஜராக சமான் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அரசு நிர்ணயித்த அளவைவிட மணல் குவாரிகளில் முறைகேடு நடந்துள்ளது என்பதை பொதுமக்கள் தரப்பில், அந்தந்த கிராமங்களில் சாட்சி அளிக்கவும், முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. தவிர,
இதற்கு சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை பொறியாளர்கள் யாரும் நேரில் ஆஜராகாமல், கடிதம் மூலமாக விளக்கம் அளித்து அமலாக்கத்துறை நடத்திய சோதனை தவறானது. நாங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அமலாக்க துறையும் அதற்கு மீண்டும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. அப்போதும் இவர்கள் அலட்சியமாக இருந்து வருகிறார்கள்.
இதனால், அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இப் பிரச்சனையில் மேல் நடவடிக்கை எடுக்கவும், சட்ட விதிகளின்படி இவர்களை கைது செய்யவும், தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.