பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஆம் என்று நிரூபிக்கிறாரா? அதாவது ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கிய வங்கிக் கடன் இலட்சக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தான் உள்ளது .அதிலும், சில தொழில் முனைவோருக்காக பிரதமர் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கடன் திட்டத்தில், ஆயிரக்கணக்கான பேர் தொழிலில் நலிவளைந்து சிக்,ஆகிய தொழில் முதலீட்டாளர்கள் வங்கி கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள் .அவர்களுக்கெல்லாம் பிரதமர் மோடி கடன் தள்ளுபடி செய்யவில்லை.
ஆனால், பல ஆயிரம் கோடிகளை வாங்கிய கிங்பிஷர்ஸ் விஜய் மல்லையா, கீதாஞ்சலி ஜேம்ஸ், மெகுல் சாக்ஷி, ஏஜிபி ஷிப்பியர்ட், ரிஷி கமலேஷ் அகர்வால் ,விஸ்டம் டைமண்ட்ஸ் ஜதின் மேத்தா, உட்பட பல பேருடைய கடன்கள் 25 லட்சம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில் 20 14 லிருந்து 25 லட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் 2012 -13 நிதியாண்டுகளில் 15 . 31 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இது தவிர ,வேறொரு புள்ளி விவரத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 10 . 5 7 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது .
அதாவது ரிசர்வ் வங்கி தெரிவிக்கின்ற புள்ளிவிவரம், மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் வெவ்வேறாக உள்ளது ஏன் ? என்பதுதான் தற்போது பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் இந்த கடன் தள்ளுபடி புள்ளிவிவரத்தின் குழப்பம்.
மேலும், ஊழலுக்கு எதிரான ஒரு கட்சியாக நாட்டில் பிஜேபியை மக்கள் பார்க்கும் போது, சாமானிய மக்களுக்கு ஏழை நடுத்தர மக்களுக்கு ஏன் இந்த சலுகைகள் இல்லை? மேலும் 20,000 50,000 கரவை மாடுகள் முதல் விவசாய கடன்கள் மற்றும் 10 லட்சம் ரூபாய் கடன்களை எல்லாம் மத்திய அரசு தள்ளுபடி செய்யாமல்,
இந்தப் பெரும் முதலாளிகளுக்கு ஏன் 25 லட்சம் கோடி வரக் கடனை தள்ளுபடி எப்படி செய்துள்ளது? இது இந்தியா முழுதும் பொதுமக்கள் மத்தியில் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி . பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு என்ன பதில் சொல்வார்கள் ?