இந்திய அரசியலமைப்பு சட்டம்  ஒரு முழுமை பெறாத ஆவணம் – தமிழக ஆளுநர் ஆர். என்.  ரவி.

அரசியல் இந்தியா உலகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து தமிழக ஆளுநர் R.N. ரவி பேசியது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று வரை அது ஒரு முழுமை பெறாத ஆவணமாக தான் உள்ளது .அதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும், சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும் .காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் மனநிலை மாறுபடுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு மக்களின் செயல்பாடு, எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நடை ,உடை, பேச்சு, உணவு பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், எல்லாமே இப்போது வாழுகின்ற மக்களின் மனநிலை, பேச்சு , கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், எல்லாமே மாறுபட்டு உள்ளது.

 

அன்றைய மக்களின் மனநிலை உழைத்து ,நேர்மையோடு ,கௌரவத்தோடு வாழ வேண்டும். இன்றைய மக்களின் மனநிலை உழைக்காமல், சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி கவுரவத்தோடு பதவி, அதிகாரத்தில் வாழ வேண்டும். எந்த அளவுக்கு மனநிலை மாறி இருக்கிறது? என்பது எங்களைப் போன்ற பத்திரிகை ஆய்வாளர்களால் எடுத்துக்காட்ட முடியும்.

 மேலும், இன்றைய சட்டம், அதன் ஓட்டைகள் யாருக்கு சாதகமாக இருக்கிறது? அது யாருக்கு பாதகமாக இருக்கிறது? அடுத்தது, அடித்தட்டு மக்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கிறதா? அவர்களுக்கு நீதி என்பது இன்றுவரை கிடைப்பது அரிதாக தான் உள்ளது. அவர்களால் பணக்கார வர்க்கத்தை எதிர்த்தோ அல்லது அதிகார வர்க்கத்தை எதிர்த்தோ போராட முடியாமல் வேதனையோடு புலம்பித் தவிக்கிறார்கள்.

 ஒரு பக்கம் வாக்களித்து ஏமாற்றப்படுகிறோமோ என்ற வேதனை .மற்றொரு பக்கம் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள், கிடைக்கவில்லையே என்று எத்தனை கோடி அடித்தட்டு மக்கள் புலம்பித் தவிக்கிறார்கள். இந்த உண்மை எங்களைப் போன்ற சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள், பத்திரிக்கையை நடத்துபவர்கள் எவ்வளவு வேதனைப்படுகிறோம்?

 இந்த வேதனையின் அர்த்தம் தெரியாமல் செய்தித் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். பத்திரிக்கை என்பது ஆட்சி அதிகாரங்களின் சுயநலமா? அல்லது பொது நலமா?

 இந்தக் கேள்விக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களில் செய்தியாளர்களாக, பத்திரிகையாளர்களாக பத்திரிக்கையில் பணியாற்றுகிறார்கள். சிலர் எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கை நடத்துகிறார்கள்?  என்பதும் தெரியவில்லை. அதன் விளைவு தகுதியான பத்திரிகையாளர்களுக்கும், சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும், இன்று வரை மத்திய மாநில அரசின் சலுகை, விளம்பரங்கள் கிடைக்கவில்லை. பத்திரிகைகளுக்கு சமூக நீதி கிடைக்காதபோது, மக்களுக்கு எப்படி கிடைக்கும்?

 எனவே, கவர்னர் ஆர். என். ரவி சொன்னது 100 சதவீதம் இந்திய நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியத்துவமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை தான் மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

 சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதேபோல், பத்திரிகைகள் துறை இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு, அதன் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். 50 வருடத்திற்கு முன் எவ்வளவு பத்திரிகைகள் இருந்தது? தற்போது எவ்வளவு பத்திரிகைகள் இருக்கிறது? எவ்வளவு சமூக நோக்கம் கொண்டது? எத்தனை வியாபார நோக்கம் கொண்டது? எத்தனை அரசியல் கட்சியின் நோக்கம் கொண்டது? எல்லாவற்றிற்கும் சர்குலேஷன் என்ற அடிப்படை சட்டம் எப்படி பொருந்தும்?

( 2017 ல் பத்திரிகைகளின் சர்குலேஷன் நிலைமை டேட்டா இது என்றால்! தற்போதைய பத்திரிகைகளின் சர்குலேஷன் நிலைமை என்ன என்பது அதிகாரிகளுக்கு புரிந்து இருக்குமா ? )

இதைவிட எந்த பத்திரிகையிலும், இதற்கான விளக்கத்தை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், இதுவரை பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் ,ஆட்சியாளர்களுக்கும் தெரிவிக்கவில்லை. அதனால், மத்திய அரசும் ,மாநில அரசும் பத்திரிக்கை துறையின் காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிகைகளை தரம் பிரித்து ,மக்களின் வரிப்பணத்தை கோடிக் கணக்கில் கொடுத்தனால் குறிப்பிட்ட சில பத்திரிகைகள் தான் பலனடைந்தது. மக்கள் அடைந்த பயன் எதுவும் இல்லை.

இது பற்றி RTI யில் கேட்ட கேள்விக்கு  செய்தித் துறையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும், இது சம்பந்தமாக Tamil nadu social journalist federation சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி அவர்களுக்கும், செய்தித் துறை உயர் அதிகாரிகளுக்கும், அதேபோல், மத்திய அரசின் செய்தித்துறை உயர் அதிகாரிகளுக்கும், பிரதமர் மோடிக்கும் இது பிரச்சனைகள் குறித்து கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளோம் .இதற்கு என்னதான் தீர்வு என்பதை ஆட்சியாளர்களா? அல்லது நீதிமன்றமா? என்பது தான் எமது முப்பது ஆண்டுகால பத்திரிக்கை வாழ்க்கை போராட்ட வேதனையின் வெளிப்பாடு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது பொது மக்களுக்கும் தெரிய வேண்டும் .

 ஏனென்றால், இது மக்களின் வரிப்பணம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அந்த வரிப்பணத்தை வீணடிக்காமல் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் முக்கியத்துவமாக வழங்கப்பட வேண்டும்.  

தவிர, ஆளுநர் R.N. RAVI இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா? என்பது குறித்து விவாதிக்க வேண்டும். அதன் அர்த்தம் எங்களை போன்ற  பத்திரிகைகள் ,பத்திரிகையாளர்கள் அதற்கு உதாரணம். மேலும், சாதாரண மக்களுக்கு நீதியின் விலை உயர்ந்ததாக உள்ளது. அதுமட்டுமல்ல, நீதிமன்றங்கள் மட்டுமின்றி, பல்கலைக்கழகங்களிலும், அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் .

மேலும், சுதந்திரத்திற்காக போராடும்போது, நாம் ஒற்றுமையாக இருந்தோம். தற்போது அவரவர் தாய் நிலம் என்றும், தாய்மொழி என்றும், பிரிந்துள்ளோம். மாநிலங்கள் என்ற அளவில் பிரித்து நாம் அனைவரும் வைக்கப்பட்டு உள்ளோம். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துக்கள் இங்கே பரவி உள்ளது. இவ்வாறு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் R.N.RAVI பேசியுள்ள கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *