திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் டாக்டர் சுரேஷ் பாபு அமலாகத்துறையின் மதுரை அதிகாரி அங்கித் திவாரியை, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் லஞ்சம் கேட்டதாக புகார் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்ப பிரச்சனை இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது .
மேலும் இப்ப பிரச்சனையில்,தற்போது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ,சிபிஐ எல்லாம் இவரை தோண்ட ஆரம்பித்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது, டாக்டர் சுரேஷ் பாபு மீது ஏற்கனவே அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையில் 2018 இல் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது .மேலும், இவரது மனைவி ஸ்ரீநிவாச பிரீத்தா திண்டுக்கல் பழனி ரோட்டில் சத்திய சுபா என்ற மருத்துவமனை நடத்தி வருகிறார். மேலும்,
இவர் பணியில் சேர்ந்தது முதல் இதனால் வரை வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்ட விவரங்கள் 2007 முதல் 2011 வரை உள்ள காலத்தில் இவருடைய வருமானம், மனைவியின் வருமானம், அசையும்,அசையா சொத்துக்கள் 18 லட்சத்திற்கு குறைவானமதிப்பிலான சொத்துக்களே இருந்துள்ளதாக கணக்கு காட்டி உள்ளனர்.
அதற்குப் பிறகு சுரேஷ்பாபு தன்னுடைய மனைவி பெயரில் 2.42 கோடி சொத்து வாங்கியது தெரியவந்துள்ளது. இதற்காக இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யப்பட்டு, அந்த புகார் நிலுவையில் இருந்து வந்துள்ளது. மேலும், இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி சுரேஷ்பாபு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .
இப்பிரச்சினை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு தெரிந்து , அமலாக்கத்துறை இதில் உள்ளே வருவதாக சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு இருவருக்குள் பேரம் நடந்துள்ளது. இந்த பேரத்தில் சுரேஷ் பாபு இவரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ய ,போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இது மத்திய அரசுக்கும் ,மாநில அரசுக்கும் மோதல் காரணமாக நடந்த அரசியல் சூழ்ச்சியா?
என்ற சந்தேகம் எழக்காரணம் ஏற்கனவே, தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் கொள்ளை விவகாரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இப்பிரச்சினை மத்திய அரசின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வந்தது ,ஆவணங்களை பார்த்தது, இவையெல்லாம் அவர்களுடைய அதிகாரத்திற்கு எல்லை மீறிய செயல்.
மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தருபவர் யாராக இருந்தாலும் ,அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுப்பார்கள். இவர்கள் மறைந்திருந்து சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பார்கள் இதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், அங்கித் திவாரியை கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரை பணம் கொடுத்த இடத்தில் பிடிக்காமல் காரில் துரத்தி சென்று பிடித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இப் பிரச்சனை வழக்கத்திற்கு மாறான நிலை ஒரு பக்கம் நடைபெற்றுள்ளது. இது குறித்து மத்திய அரசு விசாரிக்க வாய்ப்புள்ளது . மேலும், வழக்கின் விசாரணை அடுத்த கட்ட நகர்வை பொருத்து, இது எங்க போய் முடியும் என்பது யாருக்குத் தெரியும் ?