சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் .

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .இந்த பதவிக்காக சசிகலா பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.

தற்போது இப் பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு, சசிகலாவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் ? அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி இடம் கொடுக்க மாட்டார். அடுத்தது, ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிற்கு எதிராக என்ன பிரச்சாரங்களை முன்வைக்க போறார்?  இதில் ஓ .பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன், சசிகலா மூன்று பேருமே அதிமுகவின் உச்சபட்ச அதிகாரத்தில் இருந்தவர்கள். இன்று அவர்கள் மூவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு.

 அடுத்தது, அதிமுக மக்கள் செல்வாக்கு இழந்த ஒரு கட்சி. அதை எடப்பாடி பழனிசாமி தூக்கி நிறுத்த முடியுமா?  என்னதான் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமை யை  அக்கட்சியினர் ஏற்றுக் கொண்டாலும் , பொதுமக்கள் ஏற்றுக் கொள்வது மிகவும் கஷ்டமான காரியம் .தவிர, அந்தந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள், தன்னுடைய சமூகத்தில் உள்ளவர்களை தூக்கிப் பிடிப்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது அந்த கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் ஏற்றுக் கொள்வார்கள். பொதுமக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்.

 மேலும், மக்களிடம் அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சி என்று பெயர் வாங்கி விட்டது. அந்தப் பெயரை இவர்களால் சரி செய்ய முடியுமா?  ஏனென்றால் இந்த பக்கமும் சில அமைச்சர்கள் மீது லஞ்சக ஊழல் வழக்குகள் அதாவது ரமணா, விஜய் பாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்தது, மத்திய அரசு திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன் ,துரைமுருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது .

இரண்டு கட்சிகளிலும் ஊழல் என்பது மக்களிடம் பேசுபொருள் ஆகிவிட்டது. இதில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டார். இதற்குப் பிறகு அதிமுகவில் மக்களிடம் இவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக வளம் வர முடியுமா? மேலும் சரிந்த செல்வாக்கை மக்களிடம் நிலை நிறுத்த முடியுமா? மக்கள் இதையெல்லாம் பார்க்க மாட்டார்கள். பணத்தை கொடுத்தால் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இவர்களுடைய அரசியல் இதுவரையில் இருந்தது .

இனிமேல் வரும் காலத்தில் ஊழல்வாதிகளும் ஊழல் அமைச்சர்களும் அரசியலில் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்க முடியுமா ? அரசியலில் மக்களின் விழிப்புணர்வு எந்த அளவிற்கு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது ?என்பது வருகின்ற இளைய தலைமுறை இடம் இந்த அரசியல் எடுபடுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *