மாவீரன் மஞ்சள் படை நிறுவனர் குரு கனலரசன் தலைமையில் !வன்னியர் சமூக  கலாச்சார, பண்பாடு, பொருளாதார கருத்தரங்கம் . 

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

வன்னியர் சமூக  கலாச்சார, பண்பாடு, பொருளாதார கருத்தரங்கம்  சிதம்பரத்தில் 24.12.2023 ல்  மாவீரன் மஞ்சள் படை நிறுவனர் குரு கனலரசன் தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்.மாநில அமைப்பு தலைவர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார்.

மேலும், மாநில பொதுச் செயலாளர் இரா புயல் பாபு ,மாநில அமைப்பு செயலாளர் வேல்முருகன், அரியலூர் மாவட்ட செயலாளர் ஆர் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.தவிர,

 இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், சிறப்புரையாற்றவும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கலந்துகொண்டு விழா நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளார். மேலும், மாவீரன் மஞ்சள் படையின் நிர்வாகிகள் மற்றும் வன்னிய சமூகத்தின் பல அமைப்புகள், சங்கங்களின் முக்கிய பொறுப்பாளர்கள், கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் .

இது வன்னியர் சமூகத்தின் கலாச்சார,  பண்பாட்டில் நம் முன்னோர்கள்  வாழ்ந்து மறைந்து இருந்தாலும் , அவர்களுடைய அடையாளத்தையும், வாழ்க்கையின் சிறப்பையும் ,இன்னும் இளைய சமுதாயம் அதை தெரிந்து கொள்ள வில்லை.

அது உழைப்பின் ,திறமையில் வளர்ச்சிக்கானது என்பதை உணர்த்தும் நோக்கத்தின் அடிப்படையில் தான் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இது ஏனென்றால் வளர்ச்சி அடைந்த சமுதாயம் ,இன்று சீரழிந்த சமுதாயமாக தவறான பாதையில் சென்று விட்டது .அதிலிருந்து மீண்டு  வன்னியர் சமுதாயத்தின் கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கை நெறிமுறைகளை தெரிந்து கொள்வது சமுதாயத்திற்கு அவசியமான ஒன்று. அது இக் கருத்தரங்கில் சமூகத்திற்கு ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.மேலும்,

இதற்கு தமிழகம் முழுதும் வன்னிய சமுகத்தினர் பெரும் திரளாக கலந்துக் கொள்ள உள்ளனர் என்று மாநில அமைப்பின் தலைவர் முத்து குமார் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *