அமைச்சர் செல்லூர் ராஜுவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் வாழ்ந்த கோடீஸ்வரரின் தற்போதைய அவர் நிலைமை என்ன ? சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ள வீடியோ .

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஊழல் ஒரு தனி மனிதன் வாழ்க்கையும், சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு சமுக வலைத்தளத்தில் இவருடைய வாழ்க்கை ஒரு காட்டு .

இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் என்னுடைய நண்பர் பார்த்தீபன்மலேசியாவில் இருந்து இதை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தார் . மக்கள் இந்த வீடியோவை பார்க்கும் போது உண்மை என்னவென்று அவர்களுக்கு புரியும் .

ஆனால், இதிலிருந்து மனித வாழ்க்கை ஒரு நிலையானது அல்ல என்பது மனித குலத்திற்கு தெரிய வரும் உண்மை. தவிர, இவர் நன்கு படித்தவர்அமெரிக்காவில் தொழிலதிபராக இருந்து, ஒரு சாப்ட்வேர் பற்றி ஆய்வு செய்து, அதை சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து அதை தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், சமூக நன்மைக்காக போராடிய ஒரு தொழிலதிபர்.

 இன்று அவருடைய நிலைமை ஒரு நடுத்தெருவில் நிற்க வைத்து, வாழ்க்கையே ஒரு போராட்டமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது .ஒருவேளை இவரைப் பார்த்து தான் சிவாஜி ரஜினி படம் எடுத்தார்களா? என்று கூட நினைக்கத் தோன்றுகிறது .அதில் வரும் கதாபாத்திரமும், இவருடைய வாழ்க்கையும் ,ஒத்துப் போகிறது .அப்போதெல்லாம் அரசியல், மக்கள் வாழ்க்கை எல்லாமே மக்களின் தேவைக்காக இருந்தது .அதில் நிம்மதி, சந்தோஷம், கௌரவம் எல்லாமே மக்களின் வாழ்க்கையாக இருந்தது .

ஆனால், இன்று அரசியல், சினிமா, ஆட்சி எல்லாமே ,பணத்திற்காக ஒரு போலியான வாழ்க்கை மக்களிடம் இருக்கிறது .இந்த போலி வாழ்க்கைக்கு இறைவன் அவ்வப்போது இயற்கையின் உருவத்தில், இவர்களுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார் .இவர்கள் திருந்தவில்லை என்றால் முடிவு எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும் ?மக்கள் அதிகாரத்தை கொடுத்தவுடன், அந்த மக்களுக்கு நன்மை செய்யாமல், இவர்களும் இவர்கள் கட்சியும் ,கொள்ளை அடித்துக் கொள்ள யாருக்கும் அதிகாரம் மக்கள் வழங்கவில்லை.

 இது கூட தெரியாத முட்டாள்கள் அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும், சேர்மேன்களாகவும், பஞ்சாயத்து தலைவர்களாகவும், வருவதற்கு தகுதி இல்லை.   எப்படியோ எம்ஜிஆரால்,ஜெயலலிதாவால், கருணாநிதியால், இன்று மு க ஸ்டாலினால் பதவிக்கு வந்து விட்டார்கள் .ஆனால், கடவுள் என்ற ஒரு இயற்கை கொடுத்த பதவி அதிகாரத்திற்கு சரியான முறையில் நீ வேலை செய்தாயா? என்பதை மட்டும் தான் உன்னுடைய கணக்கு பார்க்கும். ஆனால், இவர்களுக்கு மக்கள் கொடுத்த அதிகாரம், அவரவர் கோடிக்கணக்கில் அரசியலில் கொள்ளை அடித்து, சொத்துக்களை சேர்க்க வந்தவர்கள் போல்  ஆட்சி ,அதிகாரம் ஆகிவிட்டது .

இதனால், வாக்களித்த மக்கள் முட்டாள்களாகவும், ஏமாளிகளாகவும், தோல்வியாளர்களாகவும், ஏமாற்றப்பட்டவர்களாகவும் ,இன்றைய அரசியல் ஆகிவிட்டது. இதைப் பற்றி சமூக ஆர்வலர்கள் மிகவும் வேதனைப்படுகிறார்கள். அதே போல், சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் வேதனைப்படுகிறார்கள். ஆனால், இந்த ஊழல் அதிகாரத்துடன் கைகோர்த்துக்கொண்டு, பாராட்டிக் கொண்டு, கார்ப்பரேட் மீடியாக்கள் வளமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது .இப்போதுதான் இந்த உண்மை எல்லாம் மக்களுக்கு கொஞ்சம் ,கொஞ்சமாக தெரிய வருகிறது.

 இது என் சொல்ல வேண்டிய முக்கியத்துவம் இருக்கிறது என்றால் இவ்வளவு பெரிய ஒரு கோடீஸ்வரர் இன்று நடுத்தெருவுக்கு வந்து நிற்கிற நிலைமை அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் இருந்த அமைச்சர் செல்லூர் ராஜ் இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவருடைய இந்த திட்டம் கூட்டுறவுத் துறையில் கொண்டு வந்து இருந்தால், கூட்டு துறையின் ஊழல்கள் தடுத்திருக்க முடியும் .ஆனால், இப்பொழுது அந்தத் துறையே தொடர்ந்து ஊழலாக தான் இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

 மேலும் ,ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை இவருடைய டெண்டரில் இவருக்கு தான் என்று இருந்த ஒரு முக்கியத்துவம் ,ஜெயலலிதா இறந்த பிறகு  ஆட்சி மாற்றத்தால் அந்த டெண்டர் கேன்சல் செய்து .யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மாற்றி இருப்பதால், இவருடைய வாழ்க்கை இன்று தலைகளாக மாறி உள்ளது .ஒரு கோடீஸ்வரருக்கு இந்த நிலைமை என்றால், சாதாரண பாமர மக்களின் நிலைமை என்ன?  என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 இந்த பாமர மக்கள் சமூகப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கு ஆட்சியாளர்களின் ஊழல் மிகப்பெரிய ஒரு கரும்புள்ளியாக இருந்து வருகிறது. இதை சட்டத்தாலும் களை எடுக்க முடியவில்லை. மக்களாலும் களை எடுக்க முடியவில்லை. நீதிமன்றத்தாலும் களையெடுக்க முடியவில்லை. இதை யார் தான் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது என்ற கேள்வி?  மக்களிடம் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி?  இந்த கேள்விக்கு அரசியலில் எந்த அரசியல் கட்சியாலும், நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரசியல் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

 சட்டத்தை ஏமாற்றுபவர்கள், சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பவர்கள் புத்திசாலிமையாகவும், உழைத்து திறமையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவன் முட்டாளாகவும், இந்த ஆட்சி அதிகாரத்தின் ஊழல் தொடர்கிறது. எப்போது இதற்கு நிரந்தர தீர்வு என்பது இதற்கு மக்கள் ஒவ்வொரு நாளும்  ஒவ்வொருவரும் சிந்திக்காமல் வாழ்ந்தால், வாழ்க்கை என்பது இப்படிப்பட்ட அரசியல், ஆட்சி ,அதிகாரத்தால் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டம் தான் என்பதை புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *