மீண்டும் மழை வந்தால், சென்னை தாங்குமா ? தமிழக அரசு தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக அரசு சென்னை வாழ் மக்கள் ஏற்கனவே பெய்த மழையால் தேங்கி இருக்கின்ற மழை நீரால் மக்கள் கொதிப்படைந்து, வெறுப்புடன் பேசி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மீண்டும் மழை வந்தால் சென்னை தாங்குமா? தமிழக அரசு, இந்த மழை வெள்ள நீர் வெளியேற்ற சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டு. இது தவிர

மழை வெள்ளநீர் சில இடங்களில் வடிந்தும், வடியாமலும் இருந்து வரும் நிலையில் ,மீண்டும் சென்னைக்கு மழையின் ஆபத்து உள்ளது என்று வானிலை ஆய்வு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடிய தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ? இது எப்படி தடுக்கப் போகிறார்கள்  ?அதிகாரிகள் எந்தவிதமான திட்டமிடுதலும் இல்லாமல், இதை தடுக்க முடியாது.

 காரணம், மழை நீர்  வெளியேறும் அத்தனை பகுதிகளும் ,ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது .அதை அகற்றாமல் எத்தனை மோட்டார் பம்புகள் வைத்து நீரை வெளியேற்றினாலும், வெளியேற்ற முடியாது .அது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதை வேண்டுமானால் செய்யலாம் . எல்லா பகுதியிலும் மோட்டார் பம்ப் வைத்து தண்ணீரை வெளியேற்றினால், அது வெளியேறாது. அங்கே தான் சுற்றி தெரியும் .

மேலும், திமுக ஆட்சியில் இது பற்றி புரிதல் இல்லாமல், திட்டமிடாமல் மீடியாக்களால் பேசி, அரசியல் செய்து கொண்டு ,நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் .இதற்கு எந்தெந்த பகுதியில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது  ?எங்கே வரவு கால்வாய் உள்ளது ? எங்கே நீர் நிலை பகுதி உள்ளது ? அந்த இடங்களை எல்லாம் உடனடியாக கண்டுபிடித்து, அதை யாரெல்லாம் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் ? அதை உடைத்து, அந்த நீரை வெளியேற்றினால் தான்,  சென்னை வாழ் மக்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

 இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றைய கல்வியாளர்கள் என்று சொல்லக்கூடிய பல கல்லூரிகள்,பல பள்ளிகள், ஏரிகளில் ஆக்கிரமித்து கட்டி இருக்கிறார்கள் .அதே போல் வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருக்கிறார்கள். ஏரிகளுக்கு வரக்கூடிய  நீர் வரவு கால்வாய்கள், எந்தெந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள்  ? அதை எல்லாம் உடனடியாக அகற்ற வேண்டும் .அது மட்டும் அல்ல,

 மழைநீர் கழிவுநீர் கால்வாயில் தங்கு தடை என்று செல்வதற்கு ,வழிவகை ஏற்படுத்த வேண்டும். அதேபோல், ஏரி கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியே வந்தாலும், அந்த கால்வாய்கள் அடைப்பு ,ஆக்கிரமிப்புகள், எதுவாக இருந்தாலும் அகற்றப்பட வேண்டும் .அது மட்டும் அல்ல, இந்த தண்ணீர் கடலில் கலக்கும் இடங்களில் ,அது உடனடியாக கலக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் எந்தெந்த கால்வாய்கள் தூர்வராமல் இருக்கிறதோ, அதை எல்லாம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி ,மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

 இவையெல்லாம் செய்யாமல், மீடியாக்களில் இதைப் பற்றி பேசியோ, அல்லது அரசியல் செய்தோ, மக்களுக்கு எந்த அரசியல் கட்சிகளாலும் நன்மை ஏற்படப்போவதில்லை. ஆட்சி அதிகாரம் கையில் உள்ள திமுக அரசுதான், இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சென்னை வாழ் மக்களை, இந்த மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *