நாட்டில் நீதிமன்றம், பத்திரிக்கை துறை ஊழல்வாதிகளுக்கு துணை போகாமல் இருந்தால் ,மக்களுக்கான ஆட்சி நிலை நிறுத்த முடியுமா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகள் செய்கின்ற மிகப்பெரிய ஊழல்கள் ,மக்களாட்சி நிர்வாகத்தின்  அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது.

எல்லாரும் ஆட்சியைப் பற்றியும், அரசியல் கட்சியை பற்றியும், பேசிக் கொண்டிருப்பது முட்டாள் தனமான சுயநல ஊடகங்களின் வேலை .அதுதான் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் செய்து கொண்டிருக்கும் வேலை. ஆனால், அவர்கள் தான் சமூக கடமை ஆற்றுவதுபோல மழை வெள்ள பாதிப்புகளை படம் பிடித்துக் காட்டிக் கொண்டு, அரசு செய்தி தகவல்களை தந்து கொண்டு, மக்களிடம் முக்கிய ஊடகங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 அதில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவானது, எதிர்க்கட்சிக்கு ஆதரவானது, இப்படி எல்லாம் பங்கு பிரித்து அரசியல் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் .அதில் தற்போது youtube சேனல்களும் வந்துவிட்டது .சில திமுக ஆதரவு, சில அதிமுக ஆதரவு ,சில பிஜேபி ஆதரவு, இப்படி வகை படுத்தி பார்க்க வேண்டிய அளவிற்கு ஊடக கலாச்சாரம் போய்க்கொண்டிருக்கிறது.

 இதில் பத்திரிகை என்றால் என்ன என்று தெரியாத பொதுமக்கள், நிருபர்கள்,சிறிய பத்திரிகை நடத்திக் கொண்டு, ஐடி கார்டு விற்பனை செய்பவர்கள், இவர்கள் எல்லாம் facebook, whatsup பத்திரிக்கை நடத்திவிட்டு நாங்களும் பத்திரிகை என்கிறார்கள் .இதில் நேற்று உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடிக்கு குறைந்தபட்ச தண்டனையாக மூன்றாண்டு சிறை தண்டனை 50 லட்சம் தலா இவருக்கும் மனைவிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இது அவருடைய உடல்நிலை கருத்தில் கொண்டும் ,வயது கருத்தில் கொண்டும் இந்த தண்டனை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கி உள்ளார். இதில் சட்டத்தின் மாண்பை நீதிமன்றம் காப்பாற்றி விட்டது. ஆனால், பத்திரிக்கை துறையை சார்ந்த சிலர் யூடியூப் சேனல் நடத்துபவர்கள், ஸ்டாலின் நினைத்திருந்தால் அமைச்சர்களை காப்பாற்ற முடியும். எப்படி முடியும்? ஒரு அமைச்சர் மீது, எம்எல்ஏ மீது, உயர் அதிகாரி மீது, குற்றச்சாட்டு வருகிறது என்றால் ,ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை சொல்ல முடியாது.

 இதை பொன்முடி ஏற்றுக் கொள்வாரா?  இத்தனை ஆதாரங்கள் நீதிமன்றத்தில் பக்கம் பக்கமாக தாக்கல் செய்யும்போது அவரால் உண்மையை மறைக்க முடியாது. அது நீதிபதியாக இருந்தாலும், அதை மறைக்க முடியாது. ஆனால், இவர்கள் அரசியல் கட்சியினர் போல், ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இதில் வேற மூத்த பத்திரிகையாளர் என்கிறார்கள். பத்திரிகையாளர் என்றால் நடுநிலையாளர்களுக்கு மட்டும் தான் அது பொருந்தும்.

 ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர்களுக்கு ,அவர்களுடைய ஏஜெண்டுகளைப் போன்று பேசுபவர்களுக்கு, பத்திரிகையாளர் என்ற பெயர் பொருந்தாது. நீங்களும் பேசுகிறீர்கள், கட்சிக்காரனும் பேசுகிறான், இரண்டு பேருக்கும் சிறிது வித்தியாசம் இருக்கும்.அவன் நேரடியாக பேசுவான். நீங்கள் மறைமுகமாக பேசுவீர்கள். இவ்வளவுதான் வித்தியாசம். பத்திரிகை ,தொலைக்காட்சிகள் இந்த நிலைமைதான் தற்போதைய தமிழ்நாட்டின் நிலைமை.

 இதில் உண்மை யார் பக்கம் இருக்கிறதோ, அந்த உண்மையை சொல்ல வேண்டியது பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் முக்கிய கடமை. இதில் பெரிய பத்திரிக்கை, சிறிய பத்திரிக்கை ,எந்த பத்திரிக்கையாக இருந்தால் என்ன?  மக்களுக்கு உண்மையை யார் சொல்கிறார்களோ, அவர்கள் தான் பத்திரிக்கை. அதுதான் பத்திரிகை.

 மேலும், முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றிக் கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும்போது, அமைச்சர்களை எப்படி அவர்கள் காப்பாற்ற முடியும்?  திமுக ஆட்சி நிர்வாகம், ஊழல் என்ற வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது .இதில் நீதிமன்றம் நீதியை நிலை நாட்டாமல், அநீதியை நிலைநாட்டினால், நீதிக்கும் நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும், ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதிமன்றம் ,மக்களாட்சியில் மக்களை ஏமாற்றம் வேலை ஆகிவிடும்.

மேலும், மக்களாட்சியில் 140 கோடி மக்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தி, தங்களுக்கான ஒரு பிரதிநிதியை தேர்வு செய்கிறார்கள் .அவர்கள் எதற்காக தேர்வு செய்தார்கள்? அந்த பொறுப்பு, அதிகாரம் மக்கள் கொடுத்தது எதற்கு? என்பதை சிந்திக்காமல், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ,அதாவது மக்கள் கொடுத்த பொறுப்பு, அதிகாரம் தவறாக பயன்படுத்தி, சொத்துக்களை சேர்த்துக் கொள்ள, இவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை .

இவர்களை எம்எல்ஏவோ, உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகவோ, மக்கள் யாரும் தேர்வு செய்யவில்லை. அவர்களுக்காக பேசுகின்ற அரசியல் கட்சியினர் ஊழலுக்கு துணை போகிறவர்கள். அவர்களுக்காக பேசுகின்ற ஊடகங்கள் ஊழலுக்கு துணை போகிறவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ஒரே மைனஸ் பாயிண்ட் என்னவென்றால், ஊழல்வாதிகள் நீதிமன்றத்தை நம்பி இருந்தார்கள் .நாம் எவ்வளவு கொள்ளை அடித்தாலும், நாம் நீதிமன்றத்தில் வயதா வாங்கி ,சட்டத்தின்  ஓட்டையில் தப்பித்து விடலாம். இதில் தப்பித்தவர்களும் உண்டு. அதற்கு சில நீதிபதிகள் துணை போயிருப்பார்கள்.

 அப்போது மக்களுக்கு நீதிமன்றத்தை பற்றி விமர்சனம் இல்லாமல் இருந்த ஒரு காலம் .இப்போது நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி தவறான தீர்ப்பு கொடுக்கிறார் என்றால், அதை கீழிருந்து மேல்மட்ட நீதிமன்றம் ஆய்வு செய்கிறது .உயர் நீதிமன்றம் தவறான தீர்ப்பு தந்தால், உச்சநீதிமன்றம் அதை கண்காணிக்கிறது. இப்படி பல நிலைகள் நீதிமன்றத்திலும் வந்துவிட்டது.

 ஆனால், பத்திரிக்கை துறையில் இன்று வரை அந்த நிலை இல்லை. இதைதான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து பத்திரிக்கை,தொலைக்காட்சிகளை வகைப்படுத்த வேண்டும். அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் குளிர் காய்ந்து கொண்டு, சமூக ஊடகங்களை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உயர் அதிகாரிகள் அவர்களுடைய எடுபிடிகளாக தான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் அரசியல் ஆட்சி, அதிகாரம். மற்றொரு பக்கம், இந்த கார்ப்பரேட் செய்யக்கூடிய உயர்மட்ட அரசியல்.

இதுதான் இந்த பத்திரிகைகளை வளர விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால், இந்த முறை நிச்சயம் நீதிமன்றத்தின்  கதவைத் தட்ட பலர் காத்திருக்கிறார்கள். செய்தித் துறையின் நிர்வாகம் என்ன செய்யப் போகிறது?   என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் ,அரசியலில் ஊழல்வாதிகளை அடையாளம் காண வைப்பது பத்திரிகை, ஊடகங்கள், அதற்கான தண்டனையை கொடுப்பது நீதிமன்றம் .மக்கள் தகுதியானவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு வாக்களித்து ,தனது வாக்குரிமையை பணத்திற்காக விலை போகாமல், ஜனநாயக கடமையை ஆற்றினால், இவ்வளவு சட்டப் போராட்டம் எதற்கு? நீதிமன்றத்தின் நேரம், காவல்துறையின் நேரம், பத்திரிகைகளின் நேரம் வீணடிப்பது எதற்கு?

 காமராஜர் ஆட்சி காலத்தில், எந்த மந்திரியாவது ஊழல் செய்தார் என்ற புகார் வந்ததா? எந்த உள்ளாட்சி பிரதிநிதிகளாவது ஊழல்வாதிகள் என்று பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் வந்ததா? இல்லை .அல்லது எதிர்க்கட்சிகளாவது பேசியிருக்கிறார்களா? இல்லை .அப்போது படிப்பு அறிவு இல்லாத மக்கள்.

இப்போது மாடு மேய்ப்பவன் கூட பட்டத்தை போட்டுக் கொண்டிருக்கிறான். செல்போனில் ,உலக நடப்புகளை எல்லாம் தட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தகுதியான, நேர்மையான தேர்வாளர்களை சமூக நல நோக்கத்துடன்  தேர்வு செய்ய தகுதியற்றவர்களாக தான் மக்கள் இருக்கிறார்கள். அதனால் தான், மக்கள் இந்த ஆட்சியாளர்களிடம் அதிகாரத்தை கொடுத்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஊழல் செய்த மந்திரி, எம் எல் ஏ, எம் பி போன்றவர்களுக்கு நேரடி ஆதரவாகவும், மறைமுக ஆதரவாகவும் பேசுகின்ற ஊடகங்கள், மக்களாட்சியை பற்றியும், வாக்களித்த மக்களுக்காகவும், எத்தனை ஊடகங்கள் பேசுகிறது? என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *