சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை  தமிழக அரசு ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு அமைத்துள்ளது. இப்பொறியாளர் குழுவால்  ஆக்கிரமிப்பு அகற்ற முடியுமா?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சென்னையில் ஏற்பட்ட  மழை வெள்ள பாதிப்பு  குறித்து ஆய்வு செய்ய தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்து பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மழை வெள்ளநீர் தேங்க ,முக்கிய காரணம் என்ன? எதனால், சென்னையில் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா? காரணம்

எந்தெந்த பகுதியில் இந்த மழை வெள்ளநீர் சென்னையில் தேங்க காரணமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது? என்பதை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு இது பற்றி ஆய்வு செய்து வருகிறது, ஆனால் , இதில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. அதை பொறியாளர்கள் குழு வெளியில் கொண்டு வருமா? அல்லது அதை வெளிவராமல் செய்து விடுவார்களா?

அதாவது1910 ல் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகளில் உள்ள வரைபடம் ,அதற்கு முன்னர் உள்ள வரைபடம், தற்போது உள்ள ஏரிகளின் வரைபடம், இது எல்லாம் அதிகாரிகள் எந்த வரைபடத்தை பார்த்து, அவர்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?  அதுதான் தற்போது உள்ள மிகப்பெரிய கேள்வி?  அதாவது 1910க்கு முன்னர் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகளின் வரைபடம் , அதற்கு பிறகு வந்த வரைபடம்? தற்போது உள்ள வரைபடம்? இந்த மூன்றில் எந்த வரைபடத்தை பார்த்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்?

 இதைப் பற்றி சிரிப்பதா? அல்லது இவ்வளவு கேவலமான ஆட்சி நிர்வாகத்தை அதிமுக, திமுக ஆட்சியில் ஏரி, குளம்,குட்டைகளின் ஆக்கிரமிப்பு இருந்துள்ளது என்பதை நினைத்து வேதனைப்படுவதா? அதாவது 1910இல் ஏரி நடுவிலே எத்தனையோ பேர் பட்டா வாங்கி வீடு கட்டி உள்ளனர். அப்படி என்றால் அப்போதிலிருந்து ஆக்கிரமிப்பு ஏரிக்குள் வந்துவிட்டது .அந்த வரைபடங்களை எல்லாம் மாற்றி இருக்கிறார்கள்.இதில் கல்லூரிகள் ஆக்கிரமிப்பு, சர்ச்சுகள் ஆக்கிரமிப்பு, பள்ளிகள் ஆக்கிரமிப்பு,

 இது ஒரு புறம் ,அடுத்தது வருவாய்த் துறையில் விஏஓ ,ஆர் ஐ ,தாசில்தார் இவர்கள் எப்படி அந்த இடத்திற்கு பட்டா கொடுத்தார்கள்? எவ்வளவு பெரிய தவறு. வருவாய்த்துறை செய்துள்ளது? அதேபோல், அதற்கு மின் இணைப்பு கொடுத்துள்ள மின்சார வாரியம் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. காசு கொடுத்தால் ஏரியாக இருந்தாலும், பரவாயில்லை. குட்டையாக இருந்தாலும் பரவாயில்லை. குளமாக இருந்தாலும் பரவாயில்லை. இப்படி சென்னையை சுற்றியுள்ள ஏரி ,குளங்கள் பட்டா போட்டுவிட்டு, இன்றைக்கு மழை வெள்ளம் வந்தால், அது எங்கு நிற்கும்? அது நிற்க வேண்டிய இடத்தில் தான் நிற்கும்? இது தெரியாமல் எத்தனை அதிகாரிகள் அதை ஆய்வு செய்து என்ன பயன்?

 சென்னை மக்களுக்கு இதனால் என்ன நன்மை ஏற்பட போகிறது? மேலும் தற்போதைய ரியல் எஸ்டேட் ஓனர்கள் ,அரசியல் பின்னணியில் இருப்பவர்கள் ஏரி, குளம், குட்டைகளை மடக்கி வீட்டுமனை பிரிவுகளை போட்டு விட்டார்கள். அதற்கு அதிகாரிகள் கையூட்டு வாங்கி, தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பி விட்டார்கள் .இப்போது மக்கள் யாரை திட்டுகிறார்கள்? என்றால் ஆட்சியாளர்களை தான் திட்டுகிறார்கள்.

இது திமுக ஆட்சியில் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது? அதிமுக ஆட்சியில் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து புள்ளி விவரங்கள் எடுத்தால்தான், இந்த உண்மை தெரியவரும். இது தவிர, இந்தப் பொறம்போக்கு இடங்களை மடக்கி வைத்திருந்தவர்கள், அதற்கு பட்டா கேட்பதும், அந்த இடங்களை விற்பனை செய்வதும் , இன்றும் சென்னை ஏரிகளை ஓட்டியுள்ள ஆக்கிரமிப்பு பகுதியில், இது நடந்து வருகிறது.

இதையெல்லாம் ஓட்டு வங்கிக்காக ஒவ்வொரு ஆட்சியிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு, இன்று சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது .தற்போது  உள்ள திமுக அரசு இதை அகற்றாமல் சென்னையில் மழை வெள்ள பாதிப்பு சரி செய்ய முடியாது .மேலும், இது பற்றி உயர்நீதிமன்றத்தில் கூட பொதுநல வழக்குகள் இன்னும் கிடப்பில் இருந்து வருகிறது. இதையெல்லாம் அரசு நிர்வாகம் கிடப்பில் போட்டு வருவதன் நோக்கம் எதனால்? அலட்சியம், ஆக்கிரமிப்பு, இன்று வீடுகளுக்குள் வெள்ள மழை நீரால் குமுறும் மக்களின் வேதனையை, தமிழக அரசு எப்படி சரி செய்யப் போகிறது?  இதுதான் சென்னை வாழ் மக்களின்மிகப்பெரிய கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *