தமிழ்நாட்டில் வெள்ள நிவாரண தொகை முதல்வர் மு க ஸ்டாலின் 6000 ரூபாய் அறிவித்ததும் நெற்பயிருக்கு 17 ஆயிரத்து 500 ஹெக்டருக்கு அறிவித்தும் சில பகுதிகளில் கிடைக்கும் பல பகுதிகளில் கிடைக்காமலும் இருக்கிறது. மேலும் சென்னை பகுதிகளிலே நேற்று கூட குன்றத்தூர் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் இது பற்றி புகார் அளித்து கூட்டமாக வேதனை தெரிவித்து வந்தனர்.சில தினங்களுக்கு முன் ஆட்டோவில் சென்ற போது என்னிடம் கரையான் சாவடி பகுதி ஆட்டோ ஓட்டுனர் எனக்கு கூட வேலை நிவாரணத் தொகை வரவில்லை இவர்கள் கணக்கு காட்டி எடுத்துக் கொண்டனர் என்று குற்றம் சாட்டினார்.
அதாவது சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலே, இந்த மழை வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்று மக்கள் வேதனைப்பட்டு வருகின்றனர். அதனால், மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டுள்ள அவர் நிவாரண நிதியை மாநில அரசிடம் கொடுக்காமல், பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணத்திற்கு நேரடியாக சென்றால் மக்கள் பயனடைவார்கள்.
மேலும், திமுக அதை வைத்து தேவையற்ற வீடியோக்களையும், பேச்சுக்களையும் ,மத்திய அரசு மீது வாக்கு வங்கி அரசியலை நடத்த முடியாது. அதனால், பாதிக்கப்பட்ட மக்களும் பயனடைவார்கள். அங்கே தேவையற்ற அரசியலும் இருக்காது. மேலும், திமுகவின் எம்எல்ஏ எழிலரசன் பொதுமக்களிடம் பேசுகின்ற அரசியல் செய்யும் வீடியோ, இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிஜேபினயிர் புரிந்து கொண்டால் சரி .