முதன்முறையாக அரசியல் கட்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் போர்வையில், அரசியல் கட்சி ஏஜென்ட்களாக செயல்படுபவர்களை  மக்களிடம் அடையாளம் காட்டியுள்ளது – சமூக நல பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் வரவேற்பு.

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

THANKS, PALIMER NEWS.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இப் பிரச்சினையை, தொடர்ந்து இணையதளம் மற்றும் பத்திரிக்கையில் ஐந்தாண்டுகளாக இத் துறையை பற்றி ஆய்வு செய்து உண்மைகளை எடுத்துரைத்து வருகிறது. இக்கட்டுரைகளை பாஜக தலைவர் அண்ணாமலை உன்னிப்பாக கவனித்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையில்  பத்திரிக்கை துறை பற்றிய உண்மைகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வெளியிட்டு வரும் செய்திகள், செய்தித் துறை உயர் அதிகாரிகளே அதை ஏற்றுக் கொண்டார்கள். என்னிடமே இது பற்றி கடந்த ஆட்சியில் இணை இயக்குனராக இருந்த ஒருவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தற்போதும் மனம் திறந்து பேசி இருக்கிறார்கள். நான் சில விஷயங்கள் கேட்கும் போது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஆர்டிஐயில் கேட்டிருக்கிறேன் அதற்கும் பதில் சொல்ல முடியவில்லை. இப்படி பத்திரிக்கைத்துறை இவர்களுடைய சுயநலத்திற்கு மாற்றி இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை .அதுமட்டுமல்ல,, தற்போது இணை இயக்குனர் ஒருவர் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களை கூட பத்திரிகை நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கவில்லை என்பது அவரே மனம் வருத்தப்பட்டார்.

 ஏனென்றால் இவர்களுக்கு ஆர். என். ஐ.மத்திய அரசு கொடுத்துள்ளது. இவர்களுக்கு அரசு அடையாள அட்டை இருந்தால்தான் நாங்கள் பத்திரிகையாளர் நல வாரியத்தில் சேர்ப்போம் என்கிறார்கள். இந்த பத்திரிகை நல வாரியம் பத்திரிகையாளர்களுக்கா?  அல்லது திமுக ஆட்சி மற்றும் கட்சியினருக்காக? பத்திரிகை நடத்துபவர்களுக்காகவா ? என்பதை நீதிமன்றம் தான், நீதி சொல்ல வேண்டும் . மேலும் ,பத்திரிகை என்றால் ஆட்சியாளர்களுக்காகவும் ,கட்சியினருக்காகவும் பத்திரிகை நடத்தி அதில் லாபம் பார்ப்பது தான்  பத்திரிக்கை என்றால் ,அந்த பத்திரிகைகளால் எப்படி  மக்களிடம் உண்மைகளை கொண்டு சேர்க்க முடியும்?

 மேலும், பத்திரிகைத்துறை என்பது நடுநிலையோடு மக்களிடம் உண்மைகளை சேர்க்க வேண்டிய பணி. இந்தப் பணிக்கு இப்படிப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எப்படி அதற்கு தகுதியானது ? அவை எப்படி பெரிய பத்திரிகைகள் என்று தீர்மானித்துக் கொள்கிறார்கள்?  மேலும்,  உண்மைகளை சேர்க்கும் பத்திரிகைகளை ஒழித்து விட்டால், நாம் மக்களிடம் அரசியல் கட்சியினர் சொல்கின்ற பொய்களை எல்லாம் உண்மையாக்கி,மக்களை முட்டாளாக்கி ஏமாற்றிக்கொண்டு, மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து இன்னும் நம்முடைய வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

 இதில் இந்து ராம் போன்ற பெரிய பத்திரிக்கை செய்தி ஆசிரியர் என்ற பந்தா காட்டலாம் . அதே போல் அண்ணாமலை சொன்ன மாதிரி மீசை இருக்கும் அளவிற்கு நக்கீரன் கோபாலுக்கு மூளை இல்லை. அது உண்மை .ஏனென்றால் இவர் பத்திரிக்கை துறையில் லேஅட் என்று சொல்லக்கூடிய வேலையை பார்த்தார் என்று தான் பத்திரிக்கை வட்டாரம் தெரிவிக்கிறது . மேலும் ,வீரப்பன் பணம் இல்லை என்றால் ,இவர் பத்திரிகை துறையில் எப்போதோ இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் இருப்பார் என்பது பத்திரிக்கை வட்டாரத்திற்கு தெரிந்த ஒன்று.

 உண்மை  செய்திகளை மக்களுக்கு எப்படி கொடுக்க வேண்டும்?  எந்த ,எந்த செய்திகள் கொண்டு சேர்க்க வேண்டும் ? எப்படிப்பட்ட செய்திகள், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ? என்பது தான் பத்திரிக்கை . மேலும், இந்த பெரிய பத்திரிகைகள் என்று சொல்லக்கூடிய, தற்போது மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள் அனுபவிக்க கூடிய பத்திரிகைகள் அனைத்திலும் எந்த செய்திகள், எந்தெந்த பத்திரிக்கையில் மக்களுக்காக எத்தனை செய்திகள் வெளியிடுகிறார்கள் ? தினசரி பத்திரிக்கையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் வெளியிட்ட செய்தியின் நோக்கம் ,என்ன ? 

அதேபோல் ,இந்து நாளேடு என்று பந்தா காட்டுகின்ற செய்தியாளர்கள், youtube பேச்சாளர்கள் ,ஒரு கட்சியையும் ,ஆட்சியாளர்களையும் புகழ்வது பத்திரிக்கை துறையின் நடுநிலை என்று அந்த நாளேடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ,பத்திரிக்கை துறை மக்களிடம் வியாபாரம் செய்வதற்கு அல்ல, மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்வதற்கு ,அது ஆட்சியாளர்களாக இருக்கட்டும், அதிகாரிகளாக இருக்கட்டும், நடுநிலை நாளேடு என்று சொல்வதில் அதற்கான தகுதியும், தரமும் அந்த பத்திரிக்கையில் அதன் செய்திகள் எதிரொலிக்க வேண்டும்.

 அப்படி இல்லாமல் , இங்கே கட்சி சார்ந்த பத்திரிகைகள் ,எப்படி நடுநிலையோடு மக்களுக்கு உண்மைகளை நடுநிலையோடு கொடுக்க முடியும்? அதேபோல் வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எப்படி நடுநிலையோடு மக்களுக்கு செய்திகளை கொடுக்க முடியும் ? சிறிய பத்திரிக்கை ,பெரிய பத்திரிக்கை என்பது சர்குலேஷனில் அல்ல. சர்குலேஷன் என்பது பணம் சார்ந்தது. செய்தி அறிவு சார்ந்தது .இது எல்லாவற்றையும் புள்ளி விவரத்தோடு மக்கள் அதிகாரம் பத்திரிகை இந்த ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது .மேலும்,   

இதைத்தான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், இந்த பத்திரிகைகளை தரம் பிரிக்க வேண்டும். தரம் பிரிக்காமல் மக்களையும் ஏமாற்றி, மக்களுடைய வரிப் பணத்தையும், கொள்ளையடித்துக் கொண்டு ,சர்குலேஷன் என்ற ஒரு விதிமுறையை இதற்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக தற்போது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கும், தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் அனுப்பப்பட்டுள்ளது .

மேலும், தமிழ்நாட்டில் தகுதியான பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அரசு அடையாள அட்டை வழங்காமல் , தகுதியான பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் வழங்காமல், தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து அவர்கள் தான் பத்திரிக்கை, பத்திரிகையாளர்கள் என்று இன்றைய தமிழ்நாடு செய்தித்துறை அங்கீகரித்திருக்கிறது. அது மட்டுமல்ல, தினசரி பத்திரிகை என்று 100 பேப்பர் கூட அடிக்காத பத்திரிகைகள் பஸ் பாஸ் சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மத்திய அரசின் செய்தி துறை உயர் அதிகாரி அண்ணாதுரை இடமும் எடுத்துரைத்திருக்கிறேன் .அவர்களும் இதற்கு ஒரு நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார்கள் .

மேலும், அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சி தலைவர் பாஜக அண்ணாமலை முதன்முறையாக தமிழ்நாட்டில் இந்த பத்திரிகைகளை பற்றியும், அவர்களுடைய செய்தியாளர்களை பற்றியும் ,மக்களிடம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள துணிச்சல் வரவேற்க வேண்டிய ஒன்று.  இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவரும் ,இந்த உண்மையை மக்களிடம் வெளிப்படுத்தவில்லை .மேலும் பத்திரிக்கை துறையில் போலிகளும், மக்களிடம் உண்மைகளைப் போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் .அதன் பத்திரிகை மற்றும் அதன் பத்திரிக்கையாளர்கள்  இதுதான் பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .ஏனென்றால் அவர்களுக்கே இந்த உண்மை தெரியுமா?  என்பது தெரியவில்லை .

தவிர, இது பற்றி சமீபத்தில் கூட ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன் .அதில் ஊழலை பற்றி தெரியாத பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் எப்படி ஊழலுக்கு எதிராக போராடுவார்கள் ? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். மேலும், இது மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய பத்திரிகைகளுக்கு கொடுக்க வேண்டிய எல்லா சலுகை, விளம்பரங்களும் இந்த பத்திரிகைகள் அனுபவித்துக் கொண்டு ,ஆட்சியாளர்களை, அரசியல் கட்சிகளை புகழ்ந்து கொண்டு ,பத்திரிகை நடத்தி வருவது மக்களை முட்டாளாக்கி வரும் செயல் என்பதை தொடர்ந்து மக்கள் அதிகாரத்தில் எழுதி வருகிறேன் .

பத்திரிக்கை என்றால் என்ன?  என்று தெரியாதவர்களிடம், எதை சொன்னாலும் புரியாதவர்களிடம், நீங்கள் என்ன எழுதினால் தெரியப்போகிறது?   என்ன சொன்னால் புரியப்போகிறது?   தெரிந்தவர்களிடம் பேச வேண்டும் .அவர்கள் அதற்கு தக்க பதில் சொல்வார்கள். அப்படி தான் நினைக்கிறேன் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பதில்.மேலும், இப்படிப்பட்ட பத்திரிகையின் அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அதற்கான முடிவுரையும் எழுத கேட்டுக்கொள்கிறேன்.

 ஏனென்றால் ,மக்களுடைய வரிப்பணத்தில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது எப்படி நடுநிலை ஆன பத்திரிகைகள் என்று நீங்கள் முடிவு எடுக்கலாம்?   மேலும், இது இவர்களுடைய கொள்கை முடிவா?   இவர்களுடைய கொள்கை முடிவுக்கு பத்திரிகை நடத்தும் பத்திரிகைகளுக்கு  மட்டும் தான் நாங்கள் சலுகை ,விளம்பரங்கள் கொடுப்போம் என்பது எப்படி கொள்கை முடிவாகும் ?  அது கொள்கை முடிவு அல்ல, ஆட்சியாளர்களின் சொந்த முடிவு.

மேலும், உங்கள் கொள்கை முடிவுக்கு தான் பத்திரிக்கை நடத்த வேண்டும் என்பது பத்திரிகைகள் என்று அதை எப்படி ஏற்றுக் கொள்வது?   இனியாவது இந்த பத்திரிகைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் விளம்பரம், சலுகைகளை கொடுப்பது நிறுத்தவில்லை என்றால், நிச்சயம் நீதிமன்றத்தில் அதற்கான பதிலை அதிகாரிகள் சொல்லி ஆக வேண்டும் என்பதை பாஜக தலைவர் அண்ணாமலை இப் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் ,அப்போதுதான் இந்த நடுநிலை என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள், தினசரி என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள், ஆட்சியாளர்களுக்காக பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கும் இந்து ராம் போன்ற பத்திரிகைகள், அதனுடைய உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும், இந்த பத்திரிகை துறையில் தகுதியற்றவர்களும், பத்திரிகை என்று சொல்லிக் கொள்கிறார்கள் .தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவா (Press council of India)? அல்லது நீதிமன்றமா ? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *