தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை .லெட்டர் பேடு கட்சியில் இருந்து ஜாதி கட்சி, மத கட்சிகள் வரை எல்லாம் ஊடகங்களில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது .ஆனால், பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை .
மேலும், பொதுநலத்திற்கு, சுயநலத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் கட்சிக்கு வருகிறார்கள் .இதில் விஜய் சினிமாவில் நடிகராக இருந்துவிட்டு, அரசியலில் என்ன சாதிக்கப் போகிறார்? எப்படிப்பட்ட அரசியலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப் போகிறார்? அரசியல் என்பது கடும் போராட்டம், தியாகம், உழைப்பு, நேர்மை இதைக் கொண்டுதான் கடந்த காலத்தில் அரசியல் நடந்தது .
இப்போது ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது, நல்லவர்கள் வேஷம் போடுவது, இதுதான் அரசியல் .இந்த அரசியலில் இருந்து விஜயால் மக்கள் எதிர்பார்க்கும் கடந்த கால அரசியலை கொடுக்க முடியுமா? அதற்கு அவர்களுடைய கட்சியினர் தியாகம் செய்ய தங்களை தயாரா? மேலும் ,தமிழ்நாட்டில் கிரிமினல்கள், மோசடி பேர்வழிகள், பிராடுகள் அரசியல் கட்சிகளின் கூடாரமாக உள்ளது .
அவர்களை எதிர்த்து போராடவும், வெற்றி பெறவும், பேசவும், களத்தில் நின்று இதையெல்லாம் எதிர்கொள்ளவும், இவர்களுடைய கட்சியினர் தங்களை தயார் படுத்திக் கொள்வார்களா? இப்படி பல கேள்விகள் தற்போதைய அரசியலில், அரசியல் தெரிந்தவர்கள் பேசுகின்ற கருத்து. இதை எல்லாம் எப்படி சமாளித்து ? இந்த கட்சியை தமிழகத்தில் தமிழக வெற்றி கழகமாக மாற்றப் போகிறார்? என்பது தான் மிகப்பெரிய சவால்கள்.