நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் கூட்டணிகளை பற்றிதான் பார்க்கிறதே ஒழிய மக்கள் நலனை பார்ப்பதில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், இந்த சுதந்திரம் எதற்காக வாங்கி கொடுக்கப்பட்டது? என்ற அங்கீகாரம் தெரியாமல் வாக்களிக்கும் வாக்காளர்கள், அரசியல் கட்சியில் உள்ள பிராடுகளையும் ,கிரிமினர்களையும், தான் ஊழல் செய்ய தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால், அவர்களுக்கு வாக்களிப்பது வீண். வாக்காளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அர்த்தம் தெரியாமல் அவர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் பின் விளைவு,வாக்களித்தவர்களுக்கே இது ஏமாற்றம்தான்.
ஏனென்றால், தேர்வு செய்யும் போது தகுதியானவர்களை தேர்வு செய்யாமல், அரசியல் கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், யார் நல்லவன்? யார் கெட்டவன்? எதுவும் தெரியாமல், பணம் கொடுத்து 100 தடவை கையெடுத்து கும்பிட்டு, காலில் விழுந்து ஓட்டுப் பிச்சை கேட்பவர்கள் எல்லாம் இந்த மக்கள் தேர்தல் விழிப்புணர்வு இல்லாமல் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவன் இந்த மக்களுக்காக உழைப்பவன், இந்த மக்களுக்காக நல்லது செய்ய வருபவன், எதற்காக பணம் கொடுக்க வேண்டும்? எப்படி கொடுப்பார்கள்? இன்ற சிந்தனை கூட இல்லாதவர்கள் வாக்களிப்பது வீண் .அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்ததும் வீண் .
மேலும், இந்த அரசியல் கட்சிகள் மக்களுடைய வாக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தான் போட்டி போடுகிறார்களே ஒழிய, அவர்களுக்கு சேவை செய்ய யாரும் முன்வருவதில்லை. தேர்தல் நேரத்தில் நல்லவர்களாக, நயவஞ்சகமாக பேசி ஓட்டுகளை வாங்கி விட்டால், பிறகு அதிகாரம் கையில் வந்தவுடன், வாக்களித்த மக்களை காலால் உதைத்து, மிதித்து கொண்டு இருக்கலாம் .அல்லது அவர்களை அடிமையாக்கி ,கொள்ளையடித்துக் கொண்டிருக்கலாம்.இதுதான் இன்றைய அரசியல்.
இதிலிருந்து மக்கள் எப்படி மாறப் போகிறார்கள்? இந்த அரசியலை மாற்றப் போகிறார்கள்? ஏனென்றால், இந்த 50 ஆண்டுகால அதிமுக, திமுக அரசியல் இந்த மக்களுக்கு பணம் கொடுத்து, அவர்களும் பணம் வாங்கி வாக்களிக்கும் பழக்கத்தில் ,அவர்களுடைய மனநிலை மாறி இருக்கிறது.அந்த மன நிலையில் இருந்து அவர்களே மீட்டு வருவது மிகவும் கடினமான வேலை . ஏனென்றால் ,இந்த தொலைக்காட்சி, பத்திரிகைகள், சோசியல் மீடியாக்கள் எல்லாமே அரசியல் கட்சிகள் யாரை கைகாட்டினாலும், அவர்களைப் பற்றி தான் முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்பார்கள் .
உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்கள், பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு வந்து கொடுத்தால் என்ன? ஊழல் செய்து கொடுத்தால் என்ன? திருடிக் கொண்டு கொண்டு வந்து கொடுத்தால் என்ன? எங்களுக்கு தேவை பணம். எத்தனை ஓட்டு இருக்கிறது ?இப்படிப்பட்ட மக்கள் மனநிலை மாற வேண்டும் .இவர்கள் தான் நாட்டில் ஊழல்வாதிகளை தேர்வு செய்கிறார்கள் .இவர்கள் தான் நாட்டில் ரவுடிகளை தேர்வு செய்கிறார்கள். இவர்கள்தான் வன்முறையாளர்களை தேர்வு செய்கிறார்கள். இவர்கள்தான் மனசாட்சி இல்லாதவர்களை தேர்வு செய்கிறார்கள் இவர்கள் தான் சமூக அக்கறை இல்லாதவர்களை தேர்வு செய்கிறார்கள்.
இவர்களுக்கு மனநிலை மருத்துவ சிகிச்சை செய்யாத வரை, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதாவது இவர்களுக்கு இந்த அரசியல், அரசியல் கட்சி, இது பற்றிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். அதை யார் கொடுப்பது? தேர்தல் ஆணையமா ?இல்லை சமூக ஆர்வலர்களா ?அதற்கான முயற்சி சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு எடுக்க உள்ளது.
இந்த மாற்றம் உடனடியாக அவர்களிடம் ஏற்படுத்த முடியாது. இந்த மக்களை புரிய வைப்பது மிகவும் கடினமானது. காரணம் சுயநலத்தில் ஊறிப் போய் இருக்கிறார்கள். பொதுநலம் தெரியாதவர்கள் .இவர்களால் நாட்டில் அரசியலுக்கு தகுதியற்றவர்கள் எல்லோரும் ,அரசியலில் பல கோடிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஊழலுக்கான அஸ்திவாரமே இப்படிப்பட்ட மக்கள்தான் .அதனால், இந்த மக்கள் திருந்தாதவரை, இந்த ஊழல் ஒழிப்பது மிகவும் கடினம் .இவர்கள்தான் குற்றவாளிகள்.இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் நிராகரிக்க சட்டத்தில் வழிவகை உள்ளதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது நல்லது .
மேலும், அரசியல் கட்சிகள் யார் அதிகம் பணம் வைத்திருக்கிறார்கள்? எந்த வேட்பாளர் அதிகம் கொள்ளையடித்து பணத்தை செலவு செய்வார் ?என்பதை மட்டுமே பார்த்து, அவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கிறார்கள். அரசியல் கட்சியும் தவறு செய்கிறது .இவர்களுக்கு அப்படிப்பட்டவர்கள் தான் கட்சியின் தலைமைக்கு வருமானத்தை கோடிக்கணக்கில் கொடுப்பார்கள். ஆக கூடி இவை எல்லாம் தேர்தல் வியாபாரத்தின் முதலீடுகள் ஆகிவிட்டது.
அதனால், இந்த நாட்டு மக்களை அரசியலும், இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சி ,சமூக ஊடகங்களும் ,போய் சொல்லி இவர்களிடம் வருமானத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள் .இதிலிருந்து எங்களைப் போன்ற ஏதோ ஒன்று ,இரண்டு பத்திரிகைகள் உண்மையை சொன்னால் ,அதுவே பெரிய விஷயம். அதை ஏற்றுக் கொள்வது எவ்வளவு பேர்? அலட்சியம் செய்பவர்கள் எவ்வளவு பேர்? ஆனால், உண்மை நிரந்தரமானது. நிதானமானது ,
போலி அரசியல் கட்சியினர், உங்களை வாழ்க்கை என்ற போராட்டத்தில் தள்ளி விட்டு, இந்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாவது மட்டுமல்ல. பாதிக்கப்படும்போது சமூக நீதி கிடைக்காமல், அழுது வேதனை படும்போது, அந்தத் துன்பத்தின் வலி ,உங்கள் குடும்பம் அனுபவிக்கும் வலி ,இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால், அவர்கள் கொடுக்கின்ற பணம், எத்தனை நாளைக்கு வரப்போகிறது?
குடிகாரர்கள் குடிப்பதற்கு எத்தனை நாளைக்கு கொடுப்பார்கள்? நமக்குத் தேவை மது பாட்டல், பிரியாணி, அன்றாடம் ஒரு 500 இதுதான். இந்த குடிகாரர்களின் வாக்கு தகுதி. இதிலிருந்து இவர்களை எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது ? இதையெல்லாம் எத்தனை குடிகாரர்களிடம் சொன்னால், அவர்கள் திருந்த போகிறார்கள்.
அந்த குடிகாரர்களும் ஒரு நாள் தன்னுடைய குடும்பத்துடன் காவல் நிலையத்தில் சமூக நீதி வேண்டி அழும் போது, அப்போதாவது அவர்களுக்கு இந்த உண்மை புரியுமா? பல ஜாதி கட்சிகள், ஜாதியை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அதுவாவது இவர்களுக்கு தெரியுமா? அது மட்டுமல்ல, எத்தனை ஜாதி கட்சிகளில், உங்களுக்காக நன்மை செய்தவர்கள்? இல்லை ஊருக்கு நன்மை செய்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உங்களால் பதில் சொல்ல முடியுமா?
மேலும், அரசியல் கட்சிகளில் எத்தனை பேர்? இந்த மக்களுக்காக ,மக்கள் நலனுக்காக பாடுபட்டவர்கள் ?சேவை செய்தவர்கள் எத்தனை பேர் ?என்பது தெரியுமா? எதுவுமே தெரியாது .பணம் கொடுத்தால், கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பது, நீங்கள் அனைவரும் பாழும் கிணற்றில் உங்களை இந்த அரசியல் கட்சிகள் தள்ளி கொண்டு இருக்கிறது என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்? அரசியல் விழிப்புணர்வு இல்லாமல், மாற்றமில்லை .இதை தமிழக வாக்காளர்கள் புரிந்து கொண்டால் சரி .