இயற்கை என்பது ஒரு இறை சக்தி. காற்றுக்கு காது இருக்கிறதா? என்றால் இருக்கிறது. நாம் பேசுவது ஒலியின் வடிவில் காற்றிடம் செல்கிறது. அது மற்றொருவருக்கு கேட்கிறது. அதுதான் இறைவனை பிரார்த்திப்பதும், மந்திரங்கள் ஒலி எழுப்புவதும், வேதங்கள் ஒலி எழுப்புவதும், இப்படித்தான் காற்று என்ற இயற்கையின் மூலம் யாகங்கள், பூஜைகள், இறைவனுக்கு போய் சேருகிறது.
அப்படி என்றால் இறைவன் சிலை வடிவிலா? அல்லது இயற்கை வடிவிலா? பஞ்சபூதகங்களே இறைவன் . இறைவன் உருவமும் ,அருவம் ஆனவன். கல்லாக பார்த்தால் அது சிலை, கடவுளாக பார்த்தால் கடவுள். இதில் பார்ப்பவரின் நிலை என்னவோ, அதில் தான் கடவுள் இருக்கிறான். இந்த உலகம் காற்று, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம் மொத்த உருவம் தான்.
இதில் மனித உடலும், அதன் இயக்கமும், நவ கோள்களின் இயக்கமும் , மனித வாழ்க்கை, உயிர்களின் பிறப்பு, இறப்பு அதன் நன்மை, தீமைகள், கர்மாவின் கணக்கு, உலக இயக்கங்கள் இதற்குள் அடக்கம். அதாவது இதுவே உலகில் மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டும் இருக்கிறது. அதுதான் காப்பவன், அழிப்பவன் அவனே. இப்படிப்பட்ட இயற்கை என்ற கடவுள், நமக்கு சுத்தமான காற்று, நிலம், நீர், ஆகாயம், எல்லாவற்றையும் படைத்து, மனித குலத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறான்.
அப்படிப்பட்ட அந்த இயற்கைக்கு எதிராக மனித வாழ்க்கை செயல்படும்போது, இயற்கை மனிதனை தண்டிக்கிறது .அதாவது பலமுறை எழுதி இருக்கிறேன் இயற்கையை மனிதன் அழித்தால், மனிதனை இயற்கை அழித்துவிடும். இந்த மனித உடம்பு வெறும் எலும்பும் ,சதையும் ஆனது. இது ஆணவத்தால், அதர்மத்தால் செய்யக்கூடிய கர்மாக்களால் ,இயற்கை வேடிக்கை பார்க்காது. இயற்கையின் சக்திக்கு முன் எந்த ஒரு செயற்கை சக்தியும் பலன் அளிக்காது. செயலற்று விடும். மனித வாழ்க்கை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் படிப்பறிவு இல்லாமல் வாழ்ந்த காலத்தில், மக்கள் இயற்கையோடு பயணித்தார்கள் .
அவர்களுக்கு இயற்கை, வாழ்க்கை என்ற ஒரு சந்தோஷம், நிம்மதி ,நிறைவைக் கொடுத்தது. இப்போது பதவி, அதிகாரம், சொகுசு வாழ்க்கை, எதுவுமே மனித வாழ்க்கையில் நிறைவும், சந்தோஷத்தையும், கொடுக்கவில்லை. இது அந்த நேரத்திற்கு வேண்டுமானால் அதை உணரலாம். ஆனால், மனித மனம் அதன் போதையில் தள்ளாடுகிறது .அது பதவி, அதிகாரமாக இருந்தாலும், பணம், சொத்து, சுகம் எதுவாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான பேராசை மனிதனை நிம்மதி இழக்க வைத்து விடுகிறது .
அதனாலே அவன் துன்பப்படுகிறான். இல்லை என்று வாழ்பவன் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறான் .இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, இன்று பல வியாதிகளில் ,நோய்களில் அந்த துன்பத்தை அவனுக்குள் அவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். கடவுள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு காரணங்களுக்காக தான் படைக்கிறார். அந்த படைப்பை ஒரு சிலரே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும்போது, அதனுடைய பலன் இவர்களுடைய கர்மாவில் சேர்ந்து விடுகிறது.
இப்போது பதவி, அதிகாரம் என்பது தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. இந்த பதவி ,அதிகாரம் மக்களுக்கானது என்பதை பதவி ,அதிகாரத்திற்கு வந்தவர்கள் உணரவில்லை.பதவி ,அதிகாரத்தை வைத்து சட்டத்தை ஏமாற்றி ,எந்தெந்த வழியில் பணம் சம்பாதிக்கலாம்? சொத்துக்களை சேர்க்கலாம்? இப்படி சேர்த்து வைப்பவர்களின் குடும்பத்தில் உள்ள மந்திரிகளின் பிள்ளைகள், எம்எல்ஏ, எம்பிக்களின் பிள்ளைகள் எப்படி வாழ்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? அதைப் பார்த்து கூட அவர்கள் திருந்தவில்லை .
இது ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல ,அரசு ஊழியர்களுக்கும் உண்டு. ஏனென்றால் அவர்களுடைய கடமை தவறும் போது, அந்த கர்மா அவர்களை சென்றடையும் .அதேபோல் நீதித்துறை மனித வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு அங்கம் .நீதி என்பது ஒரு தெய்வமாக,தேவதையாக பேசப்பட்டு வந்தது. அந்த காலத்தில் நீதி தவறா மன்னனுக்கு ஒரு மழை. அப்படி நீதி அரசர் ஒரு சாதாரண அதிகாரம் அல்ல ,அது இயற்கையோடு பயணிக்க கூடிய ஒரு அதிகாரம்.
அதனால், நீதியை தவறாக கையாண்டால், அந்த நீதி கொடுத்த நீதிபதிக்கு அதனுடைய கர்மா போய் சேரும். இதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. அதனால், நீதி என்பது இயற்கையின் வடிவில் உள்ள ஒரு தெய்வம் .அந்த காலத்தில் ஒரு பசு அரசனிடம் நீதி கேட்டு உள்ளது. இப்படி பல சரித்திரங்கள் வெளிவந்துள்ளது.
அதனால், இயற்கை எப்பொழுது அதன் பேரழிவை ஏற்படுத்துகிறது? நீதி கேள்விக்குறியாகும் போது, நாட்டில் அதர்மங்கள் தலை தூக்கும் போது ,தர்ம நெறியில் மக்கள் வாழாமல், மனசாட்சி இல்லாமல் பேசி, மனசாட்சி இல்லாமல் வாழும் போது, இப்படிப்பட்ட இயற்கையின் தண்டனை இந்த மக்களுக்கு போய் சேரும்.
இது காலம் எப்போது இயற்கையின் உருவத்தில் தண்டிக்கும்? என்பது யாருக்கும் தெரியாது. இந்த இயற்கையின் பேரழிவு எப்படி வருகிறது? சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், மழை ,வெள்ளம், புயல் போன்ற பாதிப்புகள் நாட்டில் உருவாகும் போது, இயற்கையின் பேரழிவுகள் ஏற்படுகிறது. ஒரு பக்கம் விஞ்ஞான ரீதியாக விஞ்ஞானிகள் சொல்லும் கருத்தும், மெய்ஞானிகள் என்ற சித்தர்கள், ஜோதிடர்கள், ஆன்மீகவாதிகள் சொல்லுகின்ற கருத்தும் ஒத்துப் போகிறது.
அதாவது இந்த 2024 ஆம் ஆண்டு பல நாடுகளில் இயற்கையின் பேரழிவு உள்ளது என்கிறார்கள். அப்படி கணிக்கப்பட்ட தீர்க்கதரிசியான பாபா வங்கா மட்டுமல்லாது ,நமது நாட்டில் உள்ள சித்தர்கள், மகான்கள் எழுதி வைத்த அல்லது கணித்துச் சொன்ன பலன் உலக நாடுகள் பல அழிவை சந்திக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். எண் கணித ஜோதிடப்படி 2024 இன் கூட்டு தொகை 8. இதில் எட்டு என்பது சனியின் ஆதிக்கம் உள்ள நம்பர், சனி என்பவர் நீதிமான், தர்மதேவன், இந்த உலகத்தில் நீதி கேள்வி குறியாகும் போது, மக்கள் அதர்மத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சனி தண்டனை வழங்குவார்.
அதனால்தான் தவறு செய்பவர்கள் அதிகம் ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற காலங்களில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இப்போதும் எந்தெந்த நாடுகளின் பெயர்கள் அதாவது நியூமராலஜி படி ஏழு எண் வருகிறவருகிறதோ, அந்த நாட்டுக்கெல்லாம் இயற்கையின் பேரழிவு வரும் என்கிறார்கள். அதாவது 8 எண்ணுக்கும், ஏழு எண்ணுக்கும் உள்ள பகைமை இது. இதைதான் இந்த ஆண்டில் இந்த எண்ணுள்ள நாடுகள், அதிகம் இயற்கையின் பேரழிவுகளை சந்திக்கும் என்கிறார்கள் எண் கணித ஜோதிடர்கள்.
ஆன்மீகவாதிகள் நாட்டில் எப்பொழுது அதர்மங்கள் தலை தூக்குகிறதோ, அப்போது தர்மத்தை காப்பாற்ற இயற்கை அதன் சக்தியை கையில் எடுக்கும் என்கிறார்கள். ஜோதிடர்கள் சனி தன்னுடைய சொந்த வீடான கும்பத்தில் பூமி காரகனான செவ்வாயுடன் சேரும்போது, இயற்கையின் பேரழிவுகள் அது மட்டுமல்ல, ராகு சேர்க்கை இப்படி கோள்களின் இயக்கங்கள் வைத்து இயற்கையின் பேரழிவுகள் தெரிவிக்கிறார்கள்.
இது எதனால் ?வாழ்க்கை என்பது ஒரு கையில் உள்ள செல்போன் மூலம் அடங்கியுள்ளது .உழைப்பை மனித வாழ்க்கையில், மனிதன் நம்பாமல், அதைப்பற்றி சிந்திக்காமல், சட்டத்தை எப்படி ஏமாற்றுவது? சமூகத்தை எப்படி ஏமாற்றி வாழ்வது ? பொது சொத்துக்களை எப்படி ஏமாற்றி கொள்ளையடிப்பது? எப்படி பட்டா போட்டுக் கொள்வது?அடுத்தவனை எப்படி கெடுப்பது? அடுத்தவனை எப்படி ஏமாற்றுவது? இப்படி ஏமாற்றி வாழ்வதால் ,ஏமாற்றும் மனிதன் நிம்மதியாக வாழ முடியாது. அவனும் இறுதியில் ஏமாந்து தான் போவான்.
இந்த உலகத்தில் இருந்து போகும்போது, எல்லா ஏமாற்றத்தின் உருவமும் அவனை சென்றடைந்து விடும். ஏமாற்றுபவன் புத்திசாலி அல்ல, ஏமாந்தவன் தான் புத்திசாலி. ஏனென்றால் ஏமாந்தவனுடைய கர்மாவை ,ஏமாற்றுபவன் வாங்கிக் கொள்கிறான். அது அரசியலாக இருந்தாலும் ,அரசியல் கட்சியாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும், ஆன்மீகமாக இருந்தாலும் ,எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், ஏமாற்றுவது அவர்களுடைய கர்மாவின் கணக்கில் வந்துவிடும். இப்போது சொல்லுங்கள்.
இந்த உலகத்தில் யார் புத்திசாலி? கர்மாவின் கணக்கு தெரியாமல் வாழ்பவர்கள் புத்திசாலிகளா? எதுவும் தெரியாமல் ஏமாந்தவன் புத்திசாலியா? இன்று வாழ்க்கை என்பது போராட்டத்தின் உச்சத்தில் இருக்கும் போது, தெய்வ நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் உள்ளவர்கள் அதிகம் பாதிப்பதில்லை. அவர்களுக்கு அவ்வப்போது இந்த இறை சக்தி வழிகாட்டி வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. தெய்வம் இருப்பது எங்கே ?கடவுள் எங்கே இருக்கிறார்? அவர் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறார். இதற்கெல்லாம் அந்த காலத்தில் கண்ணதாசனின் பாட்டு விடையாக இருந்துள்ளது .
மேலும் ,சத்தியத்திற்கு, தர்மத்திற்கு சோதனை வரும்போது இயற்கை என்ற இறைவன் அவனுடைய கோபத்தை நிச்சயம் காட்டுவான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்போது தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி அதர்மத்தின் ஆட்சியா? அல்லது தர்மத்தின் ஆட்சியா? என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள் .ஒரு தடவை சென்னையில் வந்த மழை, வெள்ளம் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் ?எப்படி எல்லாம் சொகுசாக வாழ்ந்தவர்கள்? எந்த நிலைமைக்கு இயற்கை கொண்டு போய் அவர்களை வைத்து விட்டது. என்பதை இயற்கையின் சக்தி என்ன? என்பதை உணர்ந்து இருப்பார்கள். அவர்களுடைய அதிகாரம் இயற்கையிடம் தோற்றுவிட்டது. அதனால்,பதவி, அதிகாரம் ஒரு பெரிய விஷயமே அல்ல .
காலத்தின் கட்டாயத்தில் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட வேலை. அந்த வேலையை சரியாக செய்யாமல், அதைத் தவறாக பயன்படுத்தி, நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல், சுயநலமாக வாழ்வது அதற்கு அர்த்தம் இல்லாத ஒன்று. மேலும், எப்படியும் பேசலாம் என்று மனசாட்சியில்லாமல் பேசுவது, மனசாட்சி இல்லாமல் எழுதுவது ,தொலைக்காட்சிகள் ,பத்திரிகைகள் அதனுடைய கடமைகளில் இருந்து தவறு செய்யும் போது, இயற்கை அதற்கும் ஒரு தண்டனை கொடுக்கத்தான் போகிறது. அதில் மாற்றமில்லை. இது ஆன்மீகம்.
அறிவியல் என்ன சொல்கிறது? அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள், அதிக வெப்பத்தால் உருகும் போது, அந்த தண்ணீர் எங்கே போகும் ?கடலில் தான் போய் சேரும் .இப்படி கடலின் நீர் அளவு அதிகரிக்கும் போது, அந்த நீர் எங்கே போய் சேரும்? நிலத்திற்கு போய் சேரும்.
அதாவது கடலில் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் எத்தனை நாடுகள்? இருக்குமோ அந்த நாடுகளுக்குள் கடல் நீர் புகுந்து விடும். இது ஒரு சாதாரண விஷயம் என்றாலும், இதற்குள் எத்தனை அறிவியல், ஆன்மீகம் கலந்தது. மனித வாழ்க்கை இங்கே படித்துக் கொள்பவன் புத்திசாலி. படிக்காதவன் ஏமாளி. இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை .எதுவும் அவன் கொண்டு போக முடியாது .அதனால் வாழ்க்கை என்பது தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்தால் ,இயற்கை என்ற இறைவன் அவர்களுக்கு நிச்சயம் துணை நிற்பான் இது உறுதி .