மனித வாழ்க்கையில் தகுதி என்பதற்கு அர்த்தம் தெரியாமல் வாழும்போது மனித வாழ்க்கை எவ்வளவு போராட்டங்கள் ?

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் விளையாட்டு

ஒரு மனிதன் ஒரு வேலையோ அல்லது கடமையோ செய்வதற்கு அவன் அதற்கு தகுதி உள்ளவனா? என்பது மிக மிக முக்கியமான ஒன்று .இப்போது அந்த தகுதி வேலையில் மட்டுமல்ல, தொழிலில் மட்டுமல்ல, நிர்வாகத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் தகுதி என்பது மிக மிக வாழ்க்கையின் முக்கிய அங்கம் .

ஆனால் எந்த தகுதியும் இல்லை என்றாலும் ,பணத்தை கொடுத்து ஏமாற்றி, அந்த அரசியல் பதவிக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ ஒருவர் வந்துவிட்டால் அவரால் அந்தப் பகுதி மக்கள், ஒரு கிராமமாக இருந்தாலும், ஒரு நகரமாக இருந்தாலும், ஒரு மாவட்டமாக இருந்தாலும், எவ்வளவு அந்த ஒரு தனிநபரால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது? இதைப் பற்றி பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் மக்கள் சிந்திப்பதில்லை.

அரசியலுக்கு வருபவர்கள் அவர்களுக்கு எந்த தகுதி? திறமையும் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவை கட்சியில் ஒரு பொறுப்பு, கட்சி கொடி, அடையாள அட்டை ,விசிடிங் கார்டு இதுதான் தகுதி என்று நினைக்கிறார்களா? அல்லது உடம்பு பலமானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அல்லது மக்களை பேசிய கவிழ்த்து விட வேண்டும் என்ற தகுதியா? அல்லது கார்ப்பரேட் மீடியாக்களில் மைக்கை பிடித்துக் கொண்டு வாய்ச்சொல் வீரர்களாக இருப்பது தான் தகுதியா? எது தகுதி ?

 அவர்களுக்கு உள்ள தகுதி என்ன? இதைப்பற்றி எந்த அரசியல் கட்சி தலைவனாவது சிந்தித்து இருக்கிறார்களா? அவனிடம் பணம் இருக்கிறதா? அல்லது நமக்கு அடியாள் வேலை பார்ப்பானா? அல்லது நமக்கு எடுபிடி வேலை பார்ப்பானா? அல்லது நமது அடிமையாக இருப்பானா? இதுதான் இன்றைய அரசியல் கட்சி தொண்டர்களின் தகுதியா ?இப்படிப்பட்ட தகுதியை வைத்துக்கொண்டு, அரசியல் கட்சிகளில் பதவிக்கோ அல்லது கட்சிப் பொறுப்புக்கோ, ஒருவன் வந்தால் அவனால் இந்த சமூகத்திற்கு என்ன நன்மை ஏற்பட போகிறது ?நன்மைக்கு பதில் தீமைகள் தான் அதிகம்.

மேலும் ,கட்சித் தலைவர்கள் இந்த தகுதியைப் பற்றி எந்த தொண்டன் இடத்தில் இருக்கிறது என்பதை பற்றி கவலைப்படுவதில்லை .அவன் உழைத்து சாப்பிடும் தகுதி உள்ளவனா? அல்லது ஊரை ஏமாற்றி சாப்பிடும் தகுதி உள்ளவனா? என்பதைப் பற்றி எந்த கட்சி தலைவனும் சிந்திப்பதில்லை. மேலும், இவர்களே உழைத்து சம்பாதித்து சாப்பிடுகிறார்களா என்ற கேள்வி? இப்போது பொதுமக்கள் கூட கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பதவி ,அதிகாரம் எல்லாம் மக்கள் போடும் பிச்சை .இந்த பிச்சை தான் ஓட்டு பிச்சை .மக்கள் யார் பணம் கொடுக்கிறார்கள்? அவர்களுக்கு தங்களுடைய வாக்கை விற்கலாம்? என்ற தகுதியற்ற வாக்காளர்கள் இருக்கும் வரை, இப்படிப்பட்ட தகுதி இல்லாத ஒரு கட்சி கூட்டம், ஓட்டு பிச்சையை நடத்திக் கொண்டிருக்கும்.

 மேலும், ஒரு சமூகத்திற்கு அல்லது அந்தப் பகுதி மக்களுக்காவது, இவர்கள் பற்றிய செயல்பாடுகள் என்ன? என்பது தெரிந்திருக்க வேண்டும். வெளிவேஷத்தால் மக்கள் ஏமாந்து, அவர்களுடைய தகுதி ,திறமை எதுவும் தெரியாமல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதால் ,இதனால் ஏற்படுகின்ற பின் விளைவுகள் என்று நாட்டை எவ்வளவு? கீழ்த்தரமாக, மோசமாக, சுயநலமாக தான் ஒருவனே பொது சொத்துக்களை சாப்பிடுபவனாக, அல்லது அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் போடுவது, இப்படிப்பட்ட ஒரு செயல் திட்டங்கள், அதிமுக, திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தற்போது வரை, தமிழ் நாட்டில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது என்றால் !

அதற்கு தகுதி இல்லாதவர்கள் தான்சட்டத்தை ஏமாற்றி, வாக்களித்த மக்களை ஏமாற்றி, இந்த சமூகத்தை ஏமாற்றி ,நான் சட்டப்படி கொள்ளை அடிக்கிறேன். எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டால் காவல்துறை வைத்து உங்களை அடிப்போம். அரசியல் கட்சி ரவுடிகளை வைத்து அடிப்போம், அல்லது வழக்கு போடுவோம் .இதுதான் மக்கள் தகுதியற்றவர்களுக்கு கொடுத்த அதிகாரத்தின் பின் விளைவு, இது எங்கே போய் நிற்கிறது? என்றால் !

ஒரு கிராமத்தில் ஆற்று மண்ணை எடுத்து பல கோடிகளை சம்பாதிக்கலாமா? ஏரி மண்ணை எடுத்து கோடிகளை சம்பாதிக்கலாமா? ஏரி மரங்களை வெட்டி கோடிகளை சம்பாதிக்கலாமா? இதற்கு ஐஏஎஸ் ,ஐபிஎஸ் படித்த அதிகாரிகள் துணை போகலாமா?அதற்கு தான் இந்தியன் சிவில் சர்வீஸ் பட்டமா? தற்போது இது போன்ற அரசியல் கட்சி மணல் கொள்ளையர்களுக்கு துணைபோன ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்ச நீதிமன்றம் மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவு வழங்கியுள்ளது. இனியாவது மாவட்ட ஆட்சியர்கள் சுதாரித்துக் கொள்வார்களா?

மேலும், ஒரு கட்சித் தலைவனுக்கு இருக்கக்கூடிய தகுதி என்ன? அவர்கள் எப்படி செயல்பட வேண்டும்? ராமதாஸ் போன்றோ அல்லது திருமாவளவன் போன்றோ படிப்பறிவு இல்லாத சமுதாயத்தில், ஜாதி வெறியை தூண்டி இரண்டு சமுதாயங்களும் ,பேசி அவர்களுக்குள் சண்டையை உருவாக்கி அடித்துக் கொண்டால், நாட்டாமை செய்து அவர்களுக்கு தலைவராகி ஆகிவிடலாம். ஏனென்றால் முட்டாள்கள் அதிகம் உள்ள சமுதாயம் .சிந்திக்கும் திறன் இல்லாத ஒரு சமுதாயம். உடம்பு வலிமை பற்றியே சிந்திக்கின்ற ஒரு சமுதாயம். அதனால் இவர்களை பணம் கொடுத்தால், விலைக்கு வாங்கி விடலாம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் நினைக்கிறார்கள்.

 ஏன்? ஒரு பத்திரிக்கை நடத்துபவர் நேற்று கூட நான் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றார். உன்னுடைய ஆலோசனையை யார் கேட்பான் என்று எனக்கும் ,அவருக்கும் வாதம். நான் சொன்னேன் வன்னியர்களில் எத்தனை முட்டாள்கள், இருக்கிறார்களோ அத்தனை முட்டாள்களும் நீ சொல்வதைக் கேட்பான் .அறிவாளி கேட்க மாட்டான். அவனுக்கு சொந்தமாக சிந்திக்கும் திறன் உள்ளது என்றேன். இப்படி இந்த சமுதாயத்தை எப்படி ஏமாற்றலாம்? என்ற கணக்கு போட்டு, இவர்களை இவர்களே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இவர்கள் நிலைமை.

மேலும்,இப்படிப்பட்ட தகுதியற்றவர்கள் அரசியல் கட்சிகளிலும், அரசியல் பதவிகளிலும் வந்துவிட்டால், இன்று திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமம் அதற்கு உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அடுத்தது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் திமுகவில் மாநில பொறுப்பில் இருந்து வந்தவர், இவருக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் எந்த தகுதியின் அடிப்படையில் அந்த பொறுப்பை கொடுத்தார் என்று தெரியவில்லை .பணத்தை கொடுத்து கட்சியில் பதவியை வாங்கிக் கொள்ளலாம். பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி பதவியை அடையலாம். ஆனால், அதற்கான தகுதியை பணம் கொடுத்து விலை கொடுத்து வாங்க முடியாது. இவர்களெல்லாம் தகுதியை பணத்தால், அரசியல் கட்சியின் லேபிலால் விலைக்கு வாங்கி பதவியை அடைந்து விட்டதாக நினைத்து தான் சமூகத்தில் இப்படிப்பட்ட கேடுகெட்ட வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் .அதற்கு தகுதியற்ற அதிகாரிகள் துணை போகிறார்கள்.அது தவறு.

 ஒருவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்கு இந்த படிப்பை படித்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் அதற்கு முன் அனுபவம் இருக்க வேண்டும். எப்படி எல்லாம் பல விதிமுறைகள் வகுத்திருக்கிறார்கள்? ஆனால் எந்த விதிமுறையும் வகுக்காமல், ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெய்பவர்களால் மக்கள் எவ்வளவு வேதனைப்படுகிறார்கள்? எவ்வளவு துன்பப்படுகிறார்கள்? அவர்கள் கொடுப்பது ஆயிரம், 500 ,2000 ஆனால் நீங்கள் அதற்கு பத்து மடங்கு, நூறு மடங்கு ,செலவு செய்து, உங்களுடைய காரியங்களை அரசாங்கத்திடம் ஆற்ற வேண்டி உள்ளது. இதுதான் தகுதியற்றவர்களின் வேலை .அது மட்டுமல்ல,

தகுதி இல்லாதவர்கள் மக்களை மிரட்டுகிறார்கள். உன்னை அழித்து விடுவேன். அழித்து விடுவேன். இப்படி எல்லாம் அவர்களுடைய தகுதி வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை எப்படி கிடைக்கும் ?பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மக்கள், வாக்களிப்பதற்கே தகுதியற்றவர்கள். அவர்களுக்கு இந்த வாக்கு எதற்காக? நாம் வாக்களிக்கிறோம்? பணத்திற்காகவா? அல்லது நாட்டு மக்களின் நன்மைக்காகவா? இல்லை அவர்கள் கோடிகளில் கொள்ளை அடிக்கவா? எதுவும் தெரியாது .இது தகுதியற்ற வாக்காளர்களின் நிலைமை. இவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது வீண். இதை இதற்கு முன்னரே சொல்லிவிட்டேன். தேர்தல் ஆணையம் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்று நாட்டில் ஊழல் செய்து திமுகவில் ஒவ்வொரு மந்திரியாக சட்டத்தின் பிடியில் சிக்கி ஜெயிலுக்கு போகிறார்கள் என்றால்! அவர்களுடைய தகுதி, அந்தப் பதவிக்கு ,அதற்குரிய மரியாதைக்கு, அதற்குரிய அந்தஸ்துக்கு, கௌரவத்திற்கு தகுதியற்றவர்கள். ஒரு மந்திரி எவ்வளவுதான் கொள்ளையடிக்கலாம்? அவர்கள் காண்பித்த கணக்கு ,வருமானவரித்துறை இடம் எவ்வளவோ போலியான கணக்குகள் எல்லாம் போனால் கூட ,கடவுளின் கணக்கு இவர்களை சிறைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது.மேலும்,

 ஒரு நீதிபதி தன்னுடைய கடமை என்ன? என்பதை உணர்ந்து, சட்டத்தை மனசாட்சி படி, தண்டனை வழங்குபவர்கள் தான் சரியான தகுதியான நீதிபதிகள். குற்றவாளிகளை தப்பிக்க செய்வது ,குற்றவாளிகளை விடுவிப்பது, அரசியல் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒரு விதமான சட்டத்தின் சலுகை, பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு விதமான சலுகை, இப்படி பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சட்டம் என்பது எல்லோருக்கும் ஒரே நீதி. அதில் எத்தனை ஓட்டைகளை போட்டுக்கொண்டு, அரசியல் பதவிகளில் இருந்தாலும், ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், அவர்களுடைய பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், நீதிபதிகள் அவர் எந்த நிலையிலும், ஒரு சிறு விஷயத்தில் கூட தன்னுடைய கடமைகளை விட்டுக்கொடுக்காமல், நீதியை நிலைநாட்டுபவர் தான் நீதி அரசர் .

மேலும், பத்திரிக்கை துறையில் இன்று தகுதி என்பது தரம் தாழ்ந்து கிடக்கிறது. தகுதி என்பதற்கு அர்த்தம் தெரியாமல், பத்திரிக்கை துறை மக்களிடம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது .எத்தனை பத்திரிக்கைகள்? அதனுடைய தகுதி, தரம் எதற்கு பத்திரிக்கை? என்பது கூட தெரியாமல், பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

காப்பி to பேஸ்ட் பத்திரிகைகள் பல ஆயிரம், ஒரு செய்தியை காப்பி அடித்து போட்டுக் கொண்டு, அதனால் பத்திரிகை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டு, தகுதியற்ற பத்திரிகைகள் சமூகத்திற்கு எந்த நன்மையும் அளிக்காது. அதேதான் இந்த பத்திரிகை துறையும், சமூகத்திற்கு நன்மை தராது. மேலும்,பத்திரிக்கை துறை என்றால் வெறும்  RNI, ஐடி கார்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய தகுதி அவ்வளவுதான். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நீயும் பத்திரிகை. நானும் பத்திரிகை .நீயும் ஒரு அடையாள அட்டை, நானும் ஒரு அடையாள அட்டை, அந்த அடையாள அட்டை பணம் கொடுத்து அரசாங்கத்தில் வாங்கிக் கொண்டால், அது ஒரு கௌரவமான அடையாள அட்டை .அதை வைத்து அரசாங்கத்தில் நான் சலுகைகளை பெற்றுக் கொள்கிறேன். அதை வைத்து நான் பெரிய பத்திரிக்கை என்று என்னை காட்டிக் கொள்கிறேன் .இது அல்ல தகுதி .படித்த மக்களிடம்,விவரம் தெரிந்தவர்களிடம், தகுதி உள்ளவர்களிடம், பத்திரிகைக்கான அங்கீகாரம் பெறுவது தான் பத்திரிக்கை. அதுதான் பத்திரிக்கையின் தகுதி .அங்கே தான் செய்தியாளர்கள் தகுதி .

இவை அனைத்தும் தகுதியின் அடிப்படையில் எத்தனை வேலைகள் ?எத்தனை விஷயங்கள் அடங்கிக் கிடக்கிறது ?அதே போல் தான், அரசியல் கட்சிகளிலும், அரசியல் பதவிகளிலும், தகுதியற்றவர்களால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் அளிக்காது.அது தீமையை தான் அளிக்கும்.

இப்போது தமிழக மக்கள் தகுதியானவர்களுக்கு வாக்களிப்பார்களா? அல்லது தகுதியற்றவர்களின் பணத்திற்கு வாக்களிப்பார்களா? அல்லது தகுதியற்ற கட்சிக்காரர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும் மீண்டும், மீண்டும் வாக்களித்து அதற்கு தகுதியற்றவர்களாக இவர்கள் இருப்பார்களா? இனியாவது தகுதியின் அர்த்தம் தமிழக மக்களுக்கு புரிந்திருக்குமா?

இதன் பின் விளைவு மக்களின் வாழ்க்கை போராட்டம் என்பதை புரிந்து கொள்வார்களா?

                              ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *